“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

நிலவின் ஒளி

நிலவு தன்னுடைய ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே முந்தைய நாகரிங்கள் கருதின. ஆனால் இன்றோ நிலவின் அதன் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்ற உண்மையை இன்றைய அறிவியல் எடுத்து கூறுகின்றது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் வசனத்தில்…
   வான (மண்டல)த்தில் கோளங்கள் வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.سورة الفرقان 25:61
    திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் ‘ஷம்ஸ்’ இதனை ‘ஸிராஜ்’ (ஒளிவிளக்கு) ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு) ‘தியா’ (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.
    சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் ‘கமர்’ என்பதாகும். இந்த சந்திரனை ‘முனீர் என்றும் வர்ணிக்கிறது. ‘முனீர்’ என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட ‘வஹ்ஹாஜ்’ ‘தியா’ ‘ஸிராஜ்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை.
    சூரியனிலிருந்தும், சந்திரனிலிருந்தும் பெறப்படும் ஒளியின் இயல்பை எடுத்துக் கூறும்  வசனங்களைப் பாருங்கள்.
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاء وَالْقَمَرَ نُورًا
    “அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்” سورة يونس   10:5
أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا  وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا
    ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படி படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான்.  71:15,16

சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று படித்திருக்கிறோம். ஆனால் உண்மையில் சூரியன் உதிப்பதில்லை. மறைவதுமில்லை. அது இருந்த இடத்தில்தான் இருக்கிறது. பூமிதான் மேற்கில் இருந்து       கிழக்காகச் சுற்றி வருகிறது. அதனால்தான் சூரியன் உதிப்பதுபோலவும் மறைவதுபோலவும் தெரிகிறது.
சரி, நிலவு ஏன் வளர்கிறது, பிறகு தேய்கிறது?
பெüர்ணமி நாளன்று நிலவு வெள்ளித் தட்டுபோலப் பிரகாசிக்கிறது. ஆனால் மறுநாளில் இருந்து தினமும் சிறிது சிறிதாகத் தேய்ந்து, அமாவாசையன்று காணாமலே போகிறது. பின்னர் மீண்டும் பிறந்ததுபோல, சிறிது சிறிதாக வளர்ந்து வெள்ளித் தட்டுபோல வானில் மின்னுகிறது. இதை வளர்பிறை, தேய்பிறை என்கிறார்கள்.

உண்மையில் நிலவு தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லை. பூமி, சூரியனைச் சுற்றுகிறது. பூமியின் துணைக் கோளான நிலவு, பூமியை வலம் வருகிறது. நிலவு  இருபத்தி ஒன்பதரை நாட்களில் பூமியை ஒரு சுற்று வலம் வந்துவிடுகிறது. சூரியனில் இருந்துதான் நிலவுக்கு ஒளி கிடைக்கிறது. அது சூரிய ஒளியை எந்த அளவு பிரதிபலிக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் நிலவு வளர்வதுபோன்றோ தேய்வதுபோன்றோ நமக்குத் தெரிகிறது. பூமியிலிருந்து பார்க்கும்போது, நிலவின் ஒரு பகுதி மட்டுமே நமது கண்களுக்குத் தெரிகிறது. அதன்  மறுபுறம் நமக்குத் தெரிவதில்லை.

நிலவு பூமியைச் சுற்றி வருகையில் ஒரு நிலையில் அது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வருகிறது. அப்போது நிலவின் நமக்குத் தெரியாத பின்பகுதியில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது; முன்பக்கம் சூரிய ஒளி படுவதில்லை. எனவே, நிலவு நம் தலைக்கு மேலே இருந்தாலும், அது நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. அதைத்தான் அமாவாசை கும்மிருட்டு     என்கிறோம்.

பிறகு சந்திரன் தொடர்ந்து பூமியை வலம் வர ஆரம்பிக்கும். அப்போது அதன்      முன்புறத்தில் எவ்வளவு தொலைவுக்கு சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிக்கிறதோ, அந்தப் பகுதி மட்டும் நமக்குத் தெரிகிறது. அமாவாசை முடிந்து ஒரு வாரத்தில் சந்திரனின் பாதி மேற்பரப்பில் ஒளி படர்ந்திருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரதிபலிப்பு அதிகரிக்கும்.

பெüர்ணமி நாளன்று பூமிக்கு எதிரேயுள்ள நிலவின் முழுப் பரப்பும் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது. நிலவு தகதகவென்று மின்னுகிறது. அந்த நாளில் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி இருப்பதுதான், நிலவு சூரிய ஒளியை முழுமையாகப் பிரதிபலிப்பதற்குக் காரணம். பிறகு மீண்டும் பழைய சுழற்சிக்கு நிலவு செல்ல, பதினைந்தாவது நாளில் முற்றிலும் மறைந்து அமாவாசை வருகிறது. அடுத்த பதினைந்தாவது நாளில் பெüர்ணமி வருகிறது.
இந்த சுழற்சிதான் நிலவு வளர்வதாகவும் தேய்வதாகவும் தோன்றுவதற்குக் காரணம். பெüர்ணமியன்று சூரியன் மறையும்போது தோன்றும் முழுநிலா, மறுநாள் காலை சூரியன் உதயம் ஆகும்போதுதான் மறையும். அதுவரை நம் கண்களுக்கு விருந்தளித்து மகிழ்விக்கும்.

No comments:

Post a Comment