“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

நபிகளாரின் தஹ்னீக்

நபி(ஸல்) அவர்கள் குழந்தைகள் விடயத்தில் காட்டிய அக்கறையைத் தெளிவுபடுத்தும் அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். தஹ்னீக் என்பது ஈத்தப்பழம் அல்லது இனிப்பான ஒரு பொருளை வாயில் மென்று மென்மைப்படுத்தி பிறந்த குழந்தையின் வாயில் வைப்பதைக் குறிக்கும். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு குழந்தைகளுக்குச் செய்து அவர்களின் பரகத்திற்காக துஆவும் செய்துள்ளார்கள். இவ்வாறு இனிப்பூட்டுவது குழந்தைகளுக்கு நலனளிக்கின்றது. என்றும் அவர்களின் தாங்கும் சக்தியை அதிகரிக்கின்றது என்றும் நவீன மருத்துவம் கூறுகின்றது.


குழந்தை பிறந்த உடன் பேரித்தம்பழத்தை மெண்டு அதன் வாயில் தடவும் வழமை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது. இதற்கு தஹ்னீக் என்று அரபு மொழியில் சொல்லப்படுகிறது.
(முஹாஜிர்களிலேயே) இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை அப்துல்லாஹ் பின் ஸ‏þபைர் ஆவார். (அவர் பிறந்தவுடன்) அவரை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஓரு பேரிச்சம் பழத்தை எடுத்து அதை மென்று அவரது வாய்க்குள் நுழைத்தார்கள். அவரது வயிற்றினுள் முதலாவதாக நுழைந்தது நபி (ஸல்) அவர்களது உமிழ் நீரே ஆகும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (3910)

எனக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தவுடன் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தேன். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இப்ராஹீம் என்று பெயர் வைத்துவிட்டு பேரித்தம்பழத்தை மெண்டு அதன்வாயில் தடவினார்கள். அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு என்னிடம் ஒப்படைத்தார்கள். (இப்ராஹீம்) அபூமூஸாவின் மக்களில் மூத்தவராக இருந்தார்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), நூல் : புகாரி (5467)

இன்று, 1400 ஆண்டுகளுக்குப் பிறகு - "வல்லுநர்கள்" கூறியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது (https://www.bbc.com/news/health-24224206)
முன்கூட்டிய குழந்தைகளை மூளை பாதிப்புக்கு எதிராக பாதுகாக்க ஒரு ஜெல் கன்னத்தின் (வாயின்) உட்புறத்தில் தேய்த்தால் (உட்கொள்ள) கொடுக்கப்பட்ட சர்க்கரை ஒரு மலிவான மற்றும் பயனுள்ள வழியாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆபத்தான முறையில் குறைந்த இரத்த சர்க்கரை மிக விரைவில் பிறந்த 10 குழந்தைகளில் ஒருவரை பாதிக்கிறது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது நிரந்தர தீங்கு விளைவிக்கும்.
நியூசிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பராமரிப்பில் உள்ள 242 குழந்தைகளுக்கு ஜெல் சிகிச்சையை பரிசோதித்தனர், முடிவுகளின் அடிப்படையில், இது இப்போது முதல் வரிசை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அவர்களின் படைப்புகள் தி லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
சர்க்கரை டோஸ்
டெக்ஸ்ட்ரோஸ் ஜெல் சிகிச்சையானது ஒரு குழந்தைக்கு 1 டாலருக்கும் அதிகமாகும், மேலும் குளுக்கோஸை விட ஒரு சொட்டு மருந்து மூலம் நிர்வகிப்பது எளிது என்று ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேன் ஹார்டிங் மற்றும் அவரது குழு கூறுகிறது.




தற்போதைய சிகிச்சையில் பொதுவாக இரத்தத்தில் சர்க்கரை அளவை அளவிட கூடுதல் உணவு மற்றும் மீண்டும் மீண்டும் இரத்த பரிசோதனைகள் அடங்கும்.
ஆனால் பல குழந்தைகள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் இரத்த சர்க்கரை குறைவாக இருப்பதால் நரம்பு குளுக்கோஸ் கொடுக்கப்படுகிறார்கள் - ஒரு நிலை மருத்துவர்கள் இரத்தச் சர்க்கரைக் குறைவு என்று அழைக்கிறார்கள்.
இரத்தச் சர்க்கரைக் குறைவை மாற்றியமைப்பதில் தனியாக உணவளிப்பதை விட டெக்ஸ்ட்ரோஸ் ஜெல் உடனான சிகிச்சை மிகவும் பயனுள்ளதா என்பதை ஆய்வு மதிப்பீடு செய்தது.
லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் உள்ள பெண்கள் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த நீல் மார்லோ, டெக்ஸ்ட்ரோஸ் ஜெல் பயன்பாட்டில் இல்லை என்றாலும், இந்த கண்டுபிடிப்புகள் இது ஒரு சிகிச்சையாக உயிர்த்தெழுப்பப்பட வேண்டும் என்று கூறியது.
அது மதிப்புக்குரியது என்பதற்கான உயர் தரமான சான்றுகள் இப்போது எங்களிடம் உள்ளன, என்றார்.
முன்கூட்டிய குழந்தை தொண்டு பேரின்பத்தின் தலைமை நிர்வாகி ஆண்டி கோல் கூறினார்: "இது ஒரு புதிய ஆராய்ச்சியின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி, மேலும் முன்கூட்டியே அல்லது நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான விளைவுகளை மேம்படுத்தும் திறன் கொண்ட எதையும் நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம்.
"இது ஒரு செலவு குறைந்த சிகிச்சையாகும், மேலும் இது ஏற்கனவே அதிக திறன் மட்டத்தில் செயல்பட்டு வரும் தீவிர சிகிச்சை சேவைகளுக்கான சேர்க்கைகளை குறைக்கக்கூடும்.
"இந்த ஆராய்ச்சியின் ஆரம்ப முடிவுகள் குறைந்த இரத்த சர்க்கரைகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு நன்மைகளைக் காண்பிக்கும் அதே வேளையில், இந்த சிகிச்சையைச் செயல்படுத்த அதிக ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது என்பது தெளிவாகிறது."

The Sunnah of Tahneek

Health in Islam is a state of dynamic equilibrium between body, mind and soul (rooh). Imbalance in this equilibrium leads to ill health. The maintenance of this balance is as prescribed in the Qur’an. Allah Ta’ala says:

‘We send down (stage by stage) of the Qur’an that which is a healing and mercy to those who believe.’ (17:82)

The words of Rasulullah (sallallahu alayhi wasallam) prescribing medicine are specific and yet all encompassing. The Sunnah (way of life or example) pertaining to health are numerous and comprehensive, relating to preventative, curative and restorative aspects of health. There are great lessons in health for us in the Prophet’s (sallallahu alayhi wasallam) eating habits, sleeping habits, personal hygiene, fasting and every aspect of life.

The Sunnah of putting something sweet in a newborn’s mouth has special pain relieving properties which are proven scientifically. 

It is a long established practice among Muslim parents to put a piece of well chewed date (or other available sweet fruit) in the mouth of a new born baby. Muslims do this following the practice of the Prophet Muhammad (sallallahu alayhi wasallam), believing him to be, as the Qur’an says, sent as a healing and as a mercy to mankind. We may infer from the way which this custom originated that there is a virtue in it. Complimentary to the virtue and pleasure of following the Sunnah (the practice of the Prophet (sallallahu alayhi wasallam) placing a ‘sugary substance’ inside the mouth of a new born baby dramatically reduces pain sensation and heart rate. An interesting scientific medical study, published in the British Medical Journal (No 6993,10 June 1995), proved beyond any doubt the benefit of giving a newborn child sugar, in order to reduce the feeling of any painful procedure like heel pricking for a blood sample or before circumcision.

The study, entitled ‘The analgesic effect of Sucrose in full term infants: a randomise controlled trial’, was done by Nora Christopher Wood, Gillian Griffiths and Malcolm Levene, in the post-natal ward in the Leeds General Infirmary in England. 60 healthy infants of gestational age 37-42 weeks and post-natal age of 1-6 days, were randomised to receive 2ml of one of the four solutions: - 12.5% sucrose, 25% sucrose and sterile water (control).

The first group of thirty babies received Sugar syrup before a routine blood test (heel pricking, which is usually painful) done to detect jaundice.

The other 30 babies were given only sterile water as a control group. Placing 2ml of a 25% or 50% sucrose solution on the tongue before pricking the heel significantly reduced the crying time, compared to babies who got water.

In addition, their heart rate returned to normal more quickly. The stronger sugar solution had the greater effect, crying reduced further with increasing concentration of sucrose. From which we may conclude that sucrose (sugar), placed on the tongue may be useful and safe form of analgesia for use with newborn infants.

Blass and Hoffmeyer also showed that 12% solution of inter-oral sucrose significantly reduced the duration of crying in newborn babies subjected in new heel pricking, or circumcision. This study was reported in the Independent newspaper (Friday, 9 June 1995) as well as in the British Medical Journal article.

The practice of the Prophet (sallallahu alayhi wasallam) is recorded in the collections of his sayings and reports about him, of which the most revered are the two Saheeh collections of Bukhari and Muslim: Abu Buradah reported from Abu Moosa (radhiallahu anhu), who said: ‘I had a newborn baby, I took him to the Prophet Muhammad (sallallahu alayhi wasallam) who called him Ibraheem. The Prophet (Sallallahu alayhi wasallam) chewed a date then he took it and rubbed the inside of the baby’s mouth with it.’

The date contains the very high percentage of sugar (70-80%); it has both fructose, and glucose, which have high calorific values, it is easily and quickly digestible, and very helpful to the brain. The date contains 2.2% protein, vitamin A, vitamins B1, B2 Anicotruic acid (against Pellagra); and it has traces of minerals needed for the body such as potassium, sodium. Calcium, iron, manganese and copper.

Potassium. Of which percentage is very high, has been found to be very effective for cases of haemorrhage, such as the occasions of birth or circumcision.

We may note that the Sunnah also commends dates for the breaking of the fast in Ramadhaan. Dates should be eaten, if available before the sunset prayer, this is medically and nutritionally the best way and the Sunnah.

The great worth of dates is also indicated in the famous and beautiful passage of the Qur’aan, Surah Maryam: ‘And shake towards you the trunk of the palm tree and it will drop on you fresh ripe dates. So eat, drink, and be comforted.’

This was the prescription of Allah, the Creator, for Maryam (alayhas salaam) at the time of the birth of Eesa (alayhis salaam), The blessed Prophet of Allah. It was a prescription to make a delivery easy and comfortable. As in the example, we have briefly recorded, we believe further research will confirm for those who still doubt the full worth and truth, the wisdom of the teachings of the Qur’aan and Sunnah.
‘We shall show them our signs on the furthest, horizons and within themselves until it becomes clear to them that it is the truth. Is it not sufficient that your Lord is witness over all things?’ (41:53)
Source: Riyadhul Jannah (UK)

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.
ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038
ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)
அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34
(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.
(அல்குர்ஆன் 34 : 6)

எய்ட்சிலிருந்து காக்கும் கத்னா

எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறுகிறான்.

கோடை காலத்தில் வெயில்; மழைக் காலத்தில் மழை என்று இவ்வுலகில் மாறி மாறி வரும் பருவ காலம், மழை பெய்ததும் பூமியில் பச்சைப் பசேல் என்ற புற்பூண்டுகளின் விளைச்சல், உயிரினங்களின் இனப் பெருக்கம், கரையைத் தொட்டு ஆடி மகிழும் கடல் அலைகள், வீசுகின்ற காற்று போன்ற இந்த அமைப்புகளை, அருள்மிகு ஆக்கங்களை இயற்கை என்று நாம் கூறுகிறோம்.

இந்த இயற்கை அமைப்பில் உட்பட்டவன் தான் மனிதன். அவனுடைய உடல் வளரும் தலை முடி, தாடி, மீசை மற்றும் இதர பகுதிகளில் வளரும் முடிகள், நகம் அனைத்துமே இயற்கைக்கு உட்பட்டது தான்.

மனித உடல் அமைந்திருக்கும் இந்த இயற்கை அமைப்பைப் பராமரிப்பதும் ஓர் இயற்கையான அம்சம் தான். இதை உலகில் எந்த மார்க்கமும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. காரணம், அந்த மார்க்கங்கள் இயற்கையானவையல்ல!

இஸ்லாம் தான் இயற்கை மார்க்கம். அதனால் தான் இயற்கை நெறிகளைக் கற்றுக் கொடுக்கிறது.

''இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர )

நூல்: புகாரி
 5891

ஹெச்.ஐ.வி. எய்ட்சும், இயற்கை கத்னாவும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இயற்கையான இந்த ஐந்து அம்சங்களில் கத்னா எனும் விருத்த சேதனமும் ஒன்றாகும்.

இந்த கத்னா, இன்று எய்ட்ஸ் எனப்படும் ஹெச்.ஐ.வி. வைரஸை விட்டும் காக்கும் காப்பரணாகத் திகழ்கிறது.

22.07.07 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தி இதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.


ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ் ம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்­மல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.

தென் ஆப்பிரிக்க ஆண்களில்
60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்தி­ருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது.

இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.

இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா? அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா? என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.

அதாவது முஸ் லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது.

கத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான்.

அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்திக் குறிப்பையும் இங்கே பார்ப்போம்.

ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது எனறு அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.

சுரப்பிகளி ருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இங்கு தான், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதை அறிந்து நாம் வியப்பில் ஆழ்கிறோம். இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தன் திருமறையில்
30:30 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

மேலே நாம் கண்ட அந்த ஹதீஸ் மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

இன்று உலகில் பலர் தாடியை முழுமையாக மழித்து விட்டு மீசையை வைத்திருக்கின்றனர். அவர்களுடைய மீசை உண்மையில் வாயில் ஒரு வடிகட்டியைப் போல் அமைந்துள்ளது. அவர்கள் குடிக்கின்ற பானங்கள், சாப்பிடும் பண்டங்கள் அனைத்தும் மீசையில் பட்ட பின்னர் தான் உள்ளே செல்கின்றது.

சளி மற்றும் அசுத்தங்கள் தங்கி நிற்கும் இந்த மீசை வழியாக உணவுப் பொருட்கள் செல்வது சுகாதாரக் கேட்டை உருவாக்கும் என்பதால் இதைத் தடுக்கும் விதமாக, மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

இது போன்று உடல் நாற்றத்திற்குக் காரணமாக அமையும் அக்குள் முடிகளையும், இன உறுப்பின் முடிகளையும் களையச் சொல்கிறது.

நகங்களின் இடுக்குகள் தான் கிருமிகள் அடைக்கலம் புகுமிடம் என்பதால் நகங்களையும் வெட்ட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.

இவற்றை வளர்ப்பது இயற்கையல்ல, களைவது தான் இயற்கை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகுக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.