பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதனல்லாத உயிரினங்கள் இருக்க முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது முழுமையாக நிரூபிக்கப்படாவிட்டாலும் சில கோள்களில் தண்ணீர் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதைச் சான்றாகக் கொண்டு இவ்வாறு ஊகம் செய்கின்றனர்.
திருக்குர்ஆன் இந்தச் சாத்தியத்தை மறுக்கவில்லை. மாறாக வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்க முடியும் என்று தெரிவிக்கிறது.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும்போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன். - 42:29
இவ்வசனம் (42:29) வானத்திலும் பூமியிலும் உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதாகக் கூறுகிறது. பூமியைத் தவிர மற்ற கோள்களில் அல்லது துணைக் கோள்களில் உயிரினம் இருக்கின்றன என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் சொல்கிறது.
இன்று ஊகமாக விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிக்குப் பின் கூறுவதை திருக்குர்ஆன் உறுதிபடக் கூறுகிறது. பூமி அல்லாத கோள்களில் உயிரினம் இருப்பது நிரூபணமாகும் போது இது இறைவனின் வார்த்தை என்பது மேலும் உறுதியாகும்.
No comments:
Post a Comment