(நபியே) இவை(சிற்)சில ஊர்களின் வரலாறுகள் ஆகும் இவற்றை நாம் உமக்கு எடுத்திரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன சில(அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின. (அல்-குர்ஆன் 11:100)
1990 ம் ஆண்டு ஆரம்பத்தில் மிக பிரபலமான பத்திரிக்கைகள், 'உபர்' என்ற பகுதியில் மணல் திட்டுகளுக்குள் சுமார் 12 மீட்டர் ஆழத்தில்."புதையுன்ட ஒரு அரபு நகரம் கண்டுபிடிக்கபட்டது" என்ற செய்தியை வெளியிட்டது. அது இறைவனின் கோபதிற்கு உள்ளான 'ஆத்' சமூதாயத்தினர் வாழ்ந்த நகரம் என்பது தொல்பொருள் ஆய்வாளர்களாள் கண்டரிய பட்டது.
யார் அந்த 'ஆத்'சமூகத்தார்கள்?
நபி நூஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தினருக்கு பின் தோன்றியது 'ஆது' சமூகத்தினர்.
அவர்களுக்கு நபி ஹூத்(அலை) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்தான், அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர்,தங்களின் வலிமையை நினைத்து பெருமை கொன்டவர்களாக இருந்தனர்,அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் வேறு எந்த நாட்டிலும் படைக்க படவில்லை.
நபி ஹூத் (அலை) அவர்களும் மற்ற இறைதூதர்கள் போல இறைவன் ஒருவனே அவனையே நீங்கள் வணங்க வேண்டும் என்ற ஓர் இறை கொள்கையை அச்சமுதாய மக்களிடம் எடுத்துரைதப் போது. அவர்கள் அதை ஏற்காததும் அவர்களின் பதிலையும் குர் ஆனில் அல்லாஹ் கூருகிறான்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது'' நீங்கள் (இறைவனை) அஞ்ச மட்டீர்களா? '' என்று கூறிய போது
'நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குறிய (இறை) தூதன் ஆவேன்.
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனக்கு வழி படுங்கள்.
'மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்கு கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
'நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?''
'இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று,(அழகிய வேலைப்பாடுகல் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கிறீர்களா?.''
'' இன்னும், நீங்கள்(எவரையும் ஏதங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல பிடிக்கின்றீர்கள்.
'எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் எனக்கு வழி படுங்கள்.''
ஆனால் 'ஆத்' சமுதாயதினரின் பதிலோ
(இதற்கு) அவர்கள் '' நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டிமே) எங்களுக்கு சமம்தான்'' எனக் கூறினார்கள்.
'இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
'' மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மா ட்டோம்.'' (இவ்வாறு கூறி) அவர்கள் அவரை பொய்ப்பித்தார்கள் ஆதலின் நாம் அவர்களை அழித்தேம் நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது. (26:124-140)
எந்த சமுதாயம் இறைவனை நிராகரித்து இறை தூதரை நம்ப மறுத்ததோ,அவர்களுக்கு எச்சரிக்கபட்டது போல இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கினான்,
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வேகமாக வருவதைக் கண்டதும்,'' இது நமக்கு மழையை பொழியும் மேகமாகும்'' என கூறினார்கள் ''அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அது தான்(இது கொடுங்)காற்று
இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது.(46:24)ஆத் கூட்டத்தார்கள் தங்களுக்கு வேதனை தரும் பேரழிவு கண்முன் கொண்டுவரபடுவது அறியாமல், அதை மழை தர கூடிய மேக கூட்டங்களாக நினைத்தனர் ஏனெனில் பாலை மணல் வெளியில் உருவாகும் சுழல் காற்றானது தொலைவில் இருந்து பார்பவைகளுக்கு அடர்ந்த மழை தரும் கார்மேகங்கள் போலவே கட்சி அளிக்கும். ஆராய்சியாளர் டோ(Doe) அவர்கள் கூறுகையில் , முதல் அரிகுறியாக மணல் ஆயிரம் அடிகளுக்கு மேல் கற்றில் உயர்த்த பட்டு நீண்ட சுவர் போன்ற தோற்றத்தை கொடுக்கும், பின்பு கற்றின் வேகம் அதிகரித்து வட்ட வடிவில் சூராவளி பெரும் ஓசையுடன் சுழழும்.
மேலும் அல்லாஹ் திருமறையில்
இன்னும்,ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்,எனவே அந்த சமுகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
ஆகவே, அவர்களின் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? (69: 6,7,8)
மீளவே முடியாத பயங்கரமான சுழன்று அடித்த மணல் காற்றினால் அழிக்கபட்டு அச்சமுதாயத்தினர் மண்ணில் உயிருடனே புதையுண்டு போனார்கள்.
அகழ்வராய்ச்சியில் அந் நகரம் கண்டுபிடிக்கபட்டதை காண்போம்,
நிக்கோலக் க்லாப் இவர் ஒர் அனுபவமிக்க தொல்பொருள் ஆரய்ச்சியாளர் மட்டுமின்றி, திருமறையில் கூறப்பட்ட'ஆத்' சமூகத்தார் வாழ்ந்த(யுபர்) நகரை பெரும் முயற்சிக்கு பிறகு கண்டுபிடித்தவர் கூட,
அதற்க்கு அவர் இரண்டு வழிகளில் தன் முயற்சியை மேற்கொன்டார். ஒன்று NASA மூலம் குறுப்பிட்ட அந்த பகுதியை சாட்டிலைட் உதவியுடன் படம் பிடிக்க விண்ணப்பித்தார்,
இரண்டாவதாக கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிக்டன் நூலகத்தில் பழமையான வரைபடங்கள்(map) மற்றும் அதற்கான வி ளங்கங்கள்(manuscripts) பற்றி படிக்களானார்,எப்படியாவது அந்த நில அமைப்பின் வரைபடத்தை கண்டுபிக்கவேண்டும் என்பதின் முயற்சியின் பலனாக, கி.பி 200 ஆண்டு கிரீக்-எகிப்த் புவியியல் வல்லுனர்களால் வரையபட்ட வரைபடம் அவருக்கு கிடைத்தது.
அதற்கிடையில் NASA வில் இருந்து அவர் கேட்ட சாட்டிலைட் புகைபடம் கிடைக்கவே.அதில் குறுப்பிட்ட நில அமைப்பில் நிலத்திலிருந்து வெரும் கண்களால் காண முடியாத, முழு நில அமைப்பையும் வானில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரிய கூடிய நீண்ட வால் போன்ற தடம்(caravan) காணபட்டது,
அவரிடம் இருந்த பழைய வரைபடத்தயும் NASA வில் இருந்து கிடைத்த வால் பேன்ற அமைப்பான புகைபடத்தயும் வைத்து, குறுபிட்ட அந்த பகுதியில் ஒரு நகரம் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
இருதியாக திருமறையில் கூறபட்ட 'ஆத்' சமுதாயத்தினர் வாழ்ந்த புதையுன்ட நகரம் தோன்டும் பனி தொடங்கியது.
சரி.. அந்த நகரம் 'ஆத்' சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' நகரம் தான் என்பதற்கு என்ன ஆதாரம்?
அந்த நகரம் தோன்டும் பனி பாதி நிரைவடைந்த நிலையில் அது 'ஆத்' சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' நகரம் தான் என கண்டறியபட்டது ,அகழ்வாரய்ச்சியா ளர் Dr.ஜரின்ஸ் கூருகையில் உயரமான தூண்கள் மற்றும் கோபுரங்கள் இது 'இரம்' நகரம் என்பதற்க்கு சான்றாகும் ஏனெனில்,' இரம்' நகரம் உயரமான் தூண்களை உடையதாக இருக்கும் என்று திருமறையில் அந்த நகரை பற்றி இறைவன் குறுப்பிடுகிறான்
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படக்கப்படவில்லை. (89:6-8)
மேலும் ஏழு இரவுகளும், எட்டு பகலாகவும் அவர்கள் மீது மணல் காற்றால் சூழபட்டார்கள் என்ற இறை வசனத்தின் படி. தோண்டி எடுக்கபட்ட நகரம் 12 மீட்டர் அழமான மணல் அடுக்குகளால் மூடபட்டு இருந்ததை ஆய்வாளர்கள் கணகிட்டுள்ளனர்.
'ஆத்' சமுதாயத்தை ,நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக, வல்ல இறைவன் திருமறையில் கூறுகிறான்
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாமாகப் பெருமையடித்துக் கொண்டு,'' எங்களை விட வலிமை மிக்கவர்கள் யார்?''என்று கூறினார்கள் அவர்களை படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
(Surah Fussilat:15)
எல்லாம் வல்ல இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டு, அவனின் கோபதிற்க்கு ஆலாகாத இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற சமுதாயமாக நம்மை ஆக்கவேண்டும் என் அல்லஹ்வை பிராத்திப்போமாக.
No comments:
Post a Comment