பேராசிரியர் யோஷிஹைடு கோசாயி அவர்கள்: விண்ணியல் சம்பந்தமான உண்மையான கருத்துக்களை திருக்குர்ஆனில் கண்டு நான் மிகவும் கவரப்பட்டேன்.
பேராசரியர் கோசாய் அவர்கள் ஜப்பானிலுள்ள டோக்கியோ மாநிலத்தைச் சேர்ந்த ஹோங்கோ நகரத்தில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். டோக்கியோ மாநிலத்திலுள்ள மிகாடா தேசீய விண்வெளி ஆய்வு மையத்pன் டைரக்டராகவும் இருந்தார். படைப்பின் ஆரம்பம் பற்றியும், வானங்கள் பற்றியும் பூமிக்கு வானங்களோடு உள்ள தொடர்பு பற்றியும் உள்ள எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்களை நாம் அவருக்கு வழங்கினோம். இந்த வசனங்களை ஆராய்ந்த பிறகு திருக்குர்ஆன் பற்றியும் அது அருளப்பட்ட காலத்தைப் பற்றியும் பேராசிரியர் கோசாய் அவர்கள் நம்மிடம் கேட்டார். அது 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்டது என்று கூறி விட்டு இந்த வசனங்கள் கொண்டிருக்கும் உண்மைகள் பற்றி அவரிடம் கேட்டோம். ஒவ்வொரு பதிலிற்கும் பிறகு திருக்குர்ஆனின் வசனத்தை நாம் அவரிடம் காண்பித்;தோம். அவர் தன் வியப்பைக் காட்டினார். மிகவும் உச்சத்திலிருந்து கொண்டு இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும் தெளிவாகவும் கண்டு உரைப்பது போன்று திருக்குர்ஆன் இப்பிரபஞ்சத்தைப் பற்றிக் கூறுகின்றது என்று கூறினார். இதைக் கூறிய அவன் உள்ள அனைத்தையும் காண்கின்றான். எந்த இடத்திலிருந்து பார்த்தால் எல்லாமே தெளிவாக தெரியுமோ அந்த இடத்திலிருந்து காணும் போது பார்க்கப்பட முடியாதது என ஒன்றுமே இருக்க முடியாது.
Fig. 17.1
ஒரு காலத்தில் வானம் புகை உருவத்தில் இருந்ததா என்று அவரிடம் கேட்டோம். ஒரு காலத்தில் இந்த வானம் வெறும் புகையாகத்தான இருந்தன என்று அனைத்து அத்தாட்சிகளும் குறிப்புக்களும் நிரூபிக்க குவிந்துள்ளன என்று அவர் கூறினார். நிரூபிக்கப்பட்ட காணும் உண்மையாக இது நிலைநாட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் நாம் காண்பது போன்று (படம் 17.1) இப்பிரபஞ்சம் தோன்றிய அந்தப் புகையிலிருந்து புதிய நட்சத்திரங்கள் உருவாகுவதை தற்போதும் அறிவியலாளர்கள் காணலாம்.
Fiq.17.2
விண்வெளிக் கப்பலின் துணையுடன் சமீபத்தில்தான் இப்படம் பெறப்பட்டது. புகையிலிருந்து ஒரு நட்சத்திரம் உருவாகுவதை அது காண்பிக்கின்றது. புகையின் வெளிப்புற சிவந்த பாகங்கள் சூடாகவும் ஒன்று கூடவும் ஆரம்பித்திருப்பதை காணுங்கள். மேகத்தின்;; மத்திய பாகத்தை கவனியுங்கள். அது ஒளியை பிரதிபலிக்கக் கூட இயலாத அளவிற்கு அதிலுள்ள புகைப் பொருட்கள் அடர்த்தியாக உள்ளது. நாம் இன்று காணும் மின்னும் நட்சத்திரங்கள் இப் பிரபஞ்சம் இருந்ததைப் போன்றே புகை உருவத்தில் இருந்தன. அவருக்கு திருக்குர்ஆன் வசனத்தை அளித்தோம். அது கூறுகின்றது:
பிறகு அவன் வானத்தின்; பக்கம் திரும்பினான். அது புகையாக இருந்தது. அவன் அதற்கும் பூமிக்கும்; ”நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் ”நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (திருக்குர்ஆன் 41:11)
இந்த புகையை சில அறிவியலாளர்கள் ஷபனி| என்று கூறுகின்றார்கள். திருக்குர்ஆன் கூறும் துக்கான் (-புகை) என்பதோடு பனி என்ற வார்த்தை ஒத்துப் போகவில்லை என்பதை பேராசிரியர் கோசாய் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். ஏனெனில் பனி என்பது குளிர்ந்த தன்மை கொண்டது. ஆனால் பிரபஞ்சப் புகையானது ஒரு வகையான சூடானது. பரவியிருக்கும் புகையோடு திடப் பொருள்களும் சேர்ந்திருக்கும் ஒன்றுதான் துக்கான் என்பது. இதுதான், நட்சத்திரங்களெல்லாம் உருவாவதற்கு முன்னால் எதிலிருந்து பிரபஞ்சம் தோன்றியதோ அந்தப் புகை பற்றிய மிகச் சரியான விவரணமாகும். புகை உஷ்ணமானதாக இருப்பதால் அதை பனி என்று குறிப்பிட முடியாது. துக்கான் என்பதுதான் மிக மிக சரியான வார்த்தையாகும். இவ்வாறாக நாம் அளித்த திருக்குர்ஆன் வசனங்களை பேராசிரியர் கோசாய் அவர்கள் ஆராயத் தொடங்கினார்.
இறுதியாக நாம் அவரிடம் கேட்டோம்: அறிவியல் இப்பிரபஞ்சத்தின் ரகசியங்களை கண்டுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த உண்மைகள் திருக்குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதை தாங்களே கண்டுள்ளீர்கள். இது பற்றி தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?|திருக்குர்ஆன் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஒரு மனிதரால் அளிக்கப்பட்டது என்று நினைக்கின்றீர்களா?
பேராசிரியர் கோசாய் அவர்கள்; பதிலளிக்கின்றார்: திருக்குர்ஆனில் உண்மையான விண்ணியல்; கருத்துக்கள் உள்ளதைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன். நவீன கால விண்ணியல் அறிஞர்களான நாம் பிரபஞ்சத்தின் ஒரு சிறிய துண்டைப் பற்றித்தான் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். மிகவும் சிறிய பகுதியபை; பற்றிப் புரிந்து கொள்வதில் நம்முடைய முயற்சிகளை ஒன்று கூட்டியுள்ளோம். முழு பிரபஞ்சமும் நம் கவனித்திற்கு வராமல், தொலை நோக்கிகளை வைத்துக் கொண்டு வானத்தின் ஒரு சில பகுதிகளை மாத்திரம்தான் நம்மால் காண முடியும். ஆகவே, திருக்குர்ஆனை படிப்பதன் மூலமும் மேலும் கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலமும் பிரபஞ்சத்தை ஆய்வு செய்யக்கூடிய எதிர்கால வழியை நான் காண முடியும் என்று நான் நம்புகின்றேன்.
Fig.17.3
திருக்குர்ஆன் மனித மூலத்திலிருந்து வந்திருக்கச் சாத்தியமில்லை என்று பேராசிரியர் கோசாய் அவர்கள் நம்புகின்றார்கள். அறிவியலாளர்களான நாம் நம்முடைய ஆராய்ச்சியை ஒரு மிகச்சிறிய பகுதியில்தான் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால்;; திருக்குர்ஆனை நாம் படித்தோமானால், இப்பிரபஞ்சம் பற்றிய மிகப்பெரும் படத்தை நாம் காணலாம். விஞ்ஞானிகள் கட்டுக்கடங்கிய குறுகிய கண்ணோட்டத்தில் அதை காணாமல் பரந்து விரிந்த கண்ணோட்டத்தில் அதைக் காண வேண்டும். இப்பிரபஞ்சம் சம்பந்தமாக, தன்னுடைய எதிர்காலப் பாதையை தற்போது அவரால் வரையறுக்க முடியும் என்று பேராசிரியர் கோசாய் அவர்கள் ஒத்துக் கொள்கின்றார்கள். பிரபஞ்சம் பற்றிய திருக்குர்ஆனின் பரந்து விரிந்த கண்ணோட்டத்தை வழிகாட்டியாகக் கொண்டு, இது முதல் தன்னுடைய ஆராய்ச்சியை திட்டமிடப் போவதாக அவர் மொழிகின்றார்.
ரப்பே புகழ் அனைத்தும் உனக்கே! நீ உயர்ந்தோனாவாய்! இது அவ்வப்போது புதுமையாகிக் கொண்டிருக்கும் என்றென்றும் நிலைத்திருக்கும் அற்புதமாகும். இது உயிரளிக்கும் அற்புதமாகும். அது முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் நம்பச் செய்கின்றது. தீர்ப்பு நாள் வரை வரும் சந்ததிகளை அது நம்பச் செய்யும். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்;. (திருக்குர்ஆன் 4:166).
இன்னும் கூறுவீராக: ”எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” (திருக்குர்ஆன் 27:93).
No comments:
Post a Comment