“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

எறும்புகள்

colkarincalari
ஒரு அந்நிய நாட்டிற்கோ அல்லது ஒரு புதிய நகரத்திற்கோ நாம் பயணம் செய்யும்போது நமக்கு ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது. குறிப்பாக நாம் போகின்ற நாடு அல்லது நகரத்தை பற்றிய விபரம் அறியாதபோது, கண்டிப்பாக நமக்கு ஒரு வரைபடமோ அல்லது ஒரு திசைகாட்டியோ அவசியமாகிறது. நம்மிடம் உள்ள வரைபடம் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை காண்பிப்பதற்கும், திசைகாட்டும் கருவி நாம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவியாக இருக்கும். இந்த கருவிகளைப் பயன்படுத்தி நாம் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கிறோம். அத்துடன் நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்ள அங்குள்ள மனிதர்களிடமும் கேட்டறிகிறோம். மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்கள் தாங்கள் செல்ல வேண்டிய பாதையை எப்படி அறிந்து கொள்கின்றன என நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? பாலைவனத்தில் உள்ள ஒரு எறும்பு தனது உணவைத் தேடிக் கண்டுபிடித்து, தனது கூட்டிற்கு எப்படி திரும்பி வருகிறது என்பதை எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா?
21compass_ant
துனீசியா நாட்டின் மத்தியதரைக்கடல் பகுதியில்; வாழும் ஒருவகை கறுப்பு எறும்புகள் (டீடயஉம யுவெள) பாலைவனத்தில் கூடுகளை அமைத்து வாழ்ந்து வரும் எறும்பினமாகும். இந்த வகை எறும்புகள் பரந்தவிரிந்த பாலைவனத்தில், திசைகாட்டும் கருவியோ அல்லது வரைபடமோ இன்றி தங்களது கூடுகளுக்குச் செல்லும் பாதையை கண்டுபிடிப்பதில் அபாரமான திறமை கொண்டவை.
காலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் பாலைவனத்தின் வெப்பநிலை எழுபது டிகிரி சென்டிகிரேடாக உயரும். மேற்படி வெப்பநிலை உள்ள பகல் வேளையில் தனக்குத் தேவையான உணவைத் தேடிக்கொள்வதற்காக எறும்பு தனது கூட்டை விட்டு வெளியேறுகிறது. அடிக்கடி நின்றும், திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு, தனது கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் செல்லும் ஒரு பாதையில் செல்வது போல தனது உணவைத் தேடிச் செல்கிறது. எறும்பு ஊர்ந்து செல்லும் விதத்தை இத்துடன் உள்ள படத்தில் நீங்கள் பார்க்கலாம். வளைந்தும் நெளிந்தும் செல்லும் இந்த பாதையில் பயணிப்பதால் எறும்பு தனது கூட்டை விட்டு காணாமல்போய் விடுமோ என்று பயப்படாதீர்கள். எறும்பு தனது இறையத் தேடிக் கண்டுபிடித்தவுடன் தான் பயணித்த 200 மீட்டர் பரப்பளவில்(655 அடி)உள்ள நேரான பாதையில் சரியாக தனது கூட்டிற்கு திரும்புகிறது. எறும்புகளின் நீளம், உயரம், பருமன், எடை இவைகளை கருத்தில்கொண்டு அவைகள் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித சக்தியோடு ஒப்பிடும்போது, அதே பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம்வரை மனிதன் பயணிப்பதற்கு சமமானதாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த காரியத்தை, எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே. இது எப்படி?
black ant
எறும்புகள் பருப்பொருட்களைக் கொண்டு தனது பாதைகளை அறிவது என்பது முடியாத காரியம். பாதைகளுக்கு அறிவதற்கு அடையாளமாக பயன்படும் மரங்கள், பாறைகள், ஆறுகள் அல்லது ஏரிகள் போன்றவைகளை பாலைவனத்தில் காண்பது மிகவும் அரிது. பாலைவனம் முழுவதும் மண் நிரம்பியதாகவே இருக்கும். அப்படியே ஏதேனும் அடையாளங்கள் இருந்தாலும் இந்த அடையாளங்களால் எறும்புகளுக்கு எந்தவித பயனும் இல்லை. ஏனெனில் எறும்புகள் இந்த அடையாளங்களை நினைவில் வைத்துக்கொண்டு அவைகள் எங்கே இருக்கின்றன என அறிவதற்கும், அவைகளை பயன்படுத்தி தனது வசிப்பிடத்தைக் கண்டுகொள்ளவும் எறும்புகளால் முடியாது. இப்படியெல்லாம் சிந்தனை செய்து பார்க்கும்போது எறும்புகள் செய்யக்கூடிய காரியங்களின் முக்கியத்துவம் நமக்கு மேலும் தெளிவாகும். இருப்பினும் எறும்புகள் இந்த கடினமான காரியங்களை செய்ய முடியும். ஏனெனில் அல்லாஹ் எறும்புகளுக்கு வழங்கியிருக்கும் பிரத்யேகமான உடலமைப்பு.
எறும்புகளின் கண்களில் பிரத்யேகமாக திசையை அறியக்கூடிய அமைப்பு ஒன்று உள்ளது. அல்லாஹ்வால் எறும்புகளுக்கு வழங்கப்பட்ட இந்த அமைப்பு, மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட திசைகாட்டும் கருவியைவிட பண்மடங்கு ஆற்றல் கொண்டது. இந்த பிரத்யேகமாக திசையை அறியக்கூடிய அமைப்பின் உதவியுடன், மனிதர்களால்கூட உணரமுடியாத ஒரு வகையான கதிர்களை எறும்புகள் உணர்கின்றன. உணரும் இந்த கதிர்களைக் கொண்டு எறும்புகள் வடக்கு, தெற்கு என திசைகளை அறிகின்றன. இவ்வாறு திசைகளை அறியும் எறும்புகள் தங்களது கூடுகளையும் தவறாமல் அடையாளம் கண்டு கொள்கின்றன. அல்லாஹ் வழங்கிய இந்தத் திறமைக்காக வல்ல அல்லாஹ்வுக்கு எறும்புகள் நன்றி செலுத்த வேண்டும்.
ant_sand
மனத இனம்கூட ஒளியின் குணநலன்களைப் பற்றி தாமதாகத்தான் தெரிந்து கொண்டது. ஆனால் அதற்கும் முன்பாகவே, எறும்புகள் தோன்றிய உடனேயே ஒளியின் குணநலன்களை தெரிந்து கொண்டு, அதனை பயன்படுத்தியும் வருவது மிகவும் ஆச்சரியகரமான ஒன்று. எறும்புகள் தங்கள் கண்களில் கொண்டிருக்கும் திசைகாட்டும் கருவி போன்ற அமைப்பு கண்டிப்பாக எந்தவித நோக்கமும் இன்றி தற்செயலாகப் பெறப்பட்டது என்று காரணம் கற்பிக்க முடியாது. எறும்புகள் உலகில் தோன்றும்போதே கண்களுடன்தான் தோன்றியிருக்க வேண்டும். இல்லையெனில் எறும்புகளால் தங்களது கூடுகளை கண்டுபிடிக்க இயலாது. தங்களது கூடுகளை சென்றடைய முடியாத எறும்புகள் பாலைவன வெப்பத்தை தாங்க முடியாமல் இறந்து போயிருக்கும். உண்மையாகவே பாலைவனத்தில் வாழும் எல்லாவகையான எறும்புகளின் கண்களும் மேலே கூறப்பட்ட பிரத்யேக அமைப்புடன், அவைகள் உலகில் முதன் முதில் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருகின்றது. எல்லாவற்றையும் நன்றாக அறிந்த அல்லாஹ்வே எறும்புகளுக்கு மேலே குறிப்பிடப்பட்ட பிரத்யேக அமைப்புடன் கூடிய கண்களை படைத்தான்.
அருள்மறை குர்ஆனிலே அல்லாஹ் கூறுகிறான்:
‘வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் (அதற்கு) சக்தி பெறாதவைகளையும் அல்;லாஹ்;வை விட்டு விட்டு இவர்கள் வணங்குகிறார்கள். ஆகவே நீங்கள் அல்;லாஹ்;வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்: நிச்சயமாக அல்;லாஹ்; தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன், ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள்.’ (அத்தியாயம் 16 ஸுரத்துன் நஹ்ல் – 73 மற்றும் 74ஆம் வசனங்கள்)

No comments:

Post a Comment