மூளை பற்றி திருக்குர்ஆன்
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழுது கொண்டிருந்த போது அவரைத் தடுத்த கொடிய நிராகரிப்பவர்களில் ஒருவரைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:-
அப்படியல்ல! அவன் விலகிக் கொள்ளவில்லையானால் நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றியைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றியை. (திருக்குர்ஆன் 96:15-16).முன்னெற்றியை திருக்குர்ஆன் ஏன் தவறிழைத்து பொய்யுரைக்கும்| என்று கூறுகின்றது? அந்த மனிதர் தவறிழைத்து பொய்யுரைப்பவர் என்று திருக்குர்ஆன் ஏன் கூறிடவில்லை? தவறிழைத்து பொய்யுரைப்பதற்கும் முன் நெற்றிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
தலையின் முன்பாகத்தில் மண்டையோட்டிற்குள் நாம் பார்வையைச் செலுத்தினால் செரப்ரத்தின் முன் பாகத்தை நாம் காணலாம். இந்த பாகத்தின் செயல்பாடு பற்றி பிஸியாலஜி என்ன கூறுகின்றது? உடல் இயங்கியல் மற்றும் பிஸியாலஜி ஆகியவற்றின் அடிப்படைகள் என்ற புத்தகம் இந்த பாகத்தைப் பற்றி கூறுகின்றது: செயல்பாடுகளை திட்டமிடவும் தொடங்கவும் தேவையான தூர நோக்குப்பார்வை மற்றும் அதற்கான உந்துதல் முன்பக்;கமுள்ள மூளையின் பின்பாகத்தில் ஏற்படுகின்றது அதாவது நெற்றிப்பகுதி (படம் 9.1 காண்க). இதுதான் அஸோஸியேஸன் கோர்டக்ஸின் பகுதியாகும். அந்த புத்தகம் மேலும் கூறுவதாவது: முன்நெற்றிப்பகுதி தூண்டும் பகுதியாக இருப்பதால் அத்துமீறும் செயல்பாடுகளின் மையத்தளமாகவும் அதுதான் விளங்குகின்றது …
ஆகவே செரப்ரத்தின் இந்தப் பகுதிதான் திட்டமிடவும் தூண்டவும் நல்ல அல்லது கெட்ட செயல்களை தொடங்கவும் காரணமாக உள்ளது. அதுதான்; பொய் சொல்லவும் உண்மையை கூறவும்; காரணமாக உள்ளது. ஆகவே எவராவது ஒருவர் பொய்யுரைக்கும் போதோ அல்லது பாவம் செய்யும் போது திருக்குர்ஆன்; கூறியது போன்று அவரின் முன்நெற்றி தவறிழைத்து பொய்யுரைக்கின்றது என்று சொல்வது பொருத்தமானதாகும். தவறிழைத்து பொய்யுரைக்கும் நாஸியா (முன்நெற்றி)! கடந்த அறுபது வருடங்களுக்கு முன்புதான் அறிவியலாளர்கள் முன்நெற்றியின் இந்த செயல்பாடுகளை கண்டுபிடித்தனர் என்று பேராசிரியர் மூர் அவர்கள் கூறுகின்றார்கள்.
No comments:
Post a Comment