தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். ( குர்ஆன், 2 :233)
கடந்த புதனன்று (11.4.2018) உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை :
குழந்தைகள் வாழ்நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அவசியம். பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டினால், நோய் தொற்றுகளிலிருந்தும் உயிரிழப்பிலிருந்தும் குழந்தையைக் காக்கலாம்.
தாய்ப்பால் ஊட்டாமல் விட்டால், அல்லது குறைவான காலத்துக்கு தாய்ப்பால் ஊட்டினால், வயிற்றுப்போக்கு, இதர நோய் தொற்றுகள் காரணமாககப் பச்சிளங்குழந்தைகள் உயிரிழக்க அதிக வாய்ப்பு உண்டு.
பிறந்தது முதல் 2 ஆண்டுகளுக்குத் தாய்ப்பால் ஊட்டினால், 5 வயதுக்குட்பட்ட 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை ஆண்டுதோறும் தடுக்க முடியும்.
தாய்ப்பாலால் குழந்தையின் கவனம், அறிவுத் திறன் மேம்படும். தாய்க்கு மார்பகப் புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும்.
இவ்வாறு யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா எச் போர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
( தி இந்து தமிழ், 13.4.18)
தாய்ப்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் பயன்கள்
U.S Agency For Healthcare Research and Quality (AHRQ), World Health Organization (WHO) போன்ற நிருவணங்கள் 2007 இல் மேற்கொண்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் ஊடாக குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதன் மூலம் அதிக பயன்கள் ஏற்படுவதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் மிக முக்கியமானதைக் கீழ்வருமாறு சுருக்கித் தருகிறோம்.
o நோய் வராது தடுத்துக் கொள்ளக்கூடிய சிறந்த ஆரோக்கியம்.
தாய்ப்பாலூட்டும் போது கிருமிகளை அழிக்கக் கூடிய பொருட்கள் குழந்தையின் உடலினுள் செலுத்தப் படுகின்றது. தாய்ப்பால் கிருமிகளைப் பரவச் செய்வதைத் தடுக்கக்கூடிய பல்வேறு பதார்த்தங்களை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக அமீபிய நுண்ணுயிர்கள் பரவுவதைத் தடுக்கக்கூடிய டிடைந ளயடவ ளவiஅரடயவநன டipயளநஇ குடலில் ஏற்படும் பக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து, இரும்புச் சத்தை வழங்கக் கூடிய டயஉவழகநசசinஇ மிகச் சிறிய உயிரினங்கிளிலிருந்தும் பாதுகாக்கக் கூடிய iஅஅரழெபடழடிரடin என்பவற்றைக் கூறலாம். (Glass RI,....(1983) "Protection against cholera in breast-fed children by antibodies in breast milk")
o மிகக் குறைவான நோய்த்தாக்கம்.
தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள் தாய்ப்பாலூட்டப்படாத குழந்தைகளை விட நோயுடைய தாக்கம் பெறும் வீதம் மிகக் குறைவாக உள்ளது. 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆரம்ப ஏழு மாதங்கள் தாய்ப்பாலூட்டப்பட்ட
பிள்ளைகளுக்கு சிறுநீரக நோய் பரவும் வீதம் மிகக் குறைவாகக் காணப்பட்டது. (Marlid s,....(2004) "protetive effect of breast feeding against urinary tract infection")
o உயர் நுண்ணரிவு.
தாய்ப்பாலூட்டல் குழந்தைகளின் அறிவு மட்டத்தில் தாக்கம் செலுத்துகின்றதா என மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், குழந்தைகளின் சிந்தனைத் திறன், புத்தி சாதூர்யத்தல் மாற்றத்தை ஏற்படுத்தும். எனக் கூறுகின்றன. WHO 2007 இல் மேற்கொண்ட ஆய்வில் 'தாய்ப் பாலூட்டப்பட்ட பிள்ளைகளின் நுண்ணரிவுப் பரீட்சைகளில் உயர்தரத்தை வெளிப்படுத்தினார்கள்' என்ற முடிவு பெறப்பட்டது.
(Horta BL,...(2007), Evedence on the long-term effects of breast feeding: systematic reviews and meta-analyses, geneva, WHO).
o பிற்பட்ட கால சுகாதார விளைவுகள்.
சிறு குழந்தையாக இருக்கும் போது பாலூட்டிருந்தால் வளர்ந்த பெரியவரானதும் பல விளைவுகள் சாதகமாக அமைந்து விடுகின்றன. தாய்ப்பால் ஆரஉiளெ எனும் ஒருவகை எதிர்ப்புப் பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. அவை அதிக புரதங்களையும் காபோவைதரேற்றுக் களையும் உள்ளடக்கியவையாகும். அவை பக்டீரியாக்களுனும் வைரஸ்களுடனும் ஒட்டிக் கொண்டு, இறுதியில் இரசாயன மருந்துகளுக்கு மாற்றமாக - எந்தவிதமான பக்கவிளைவுகளுமின்றி அவற்றை முற்றாக அழித்து விடுகின்றன.
தாய்ப்பாலூட்டப்பட்ட பிள்ளைகளுக்கு மிகக் குறைவாகவே ஆஸ்த்மா, ஒவ்வாமை (Allergic) நோய்கள் ஏற்படுவதோடு சுவாச நோய்கள், வயிற்று நோய்கள் என்பவற்றுக்கு எதிராகவும் தாய்ப்பால் செயற்படுகின்றது.
(Mead MN (2008) "Contaminants in human milk: weighing the risks against the benefits of breast feeding").
சிறுவயதில் தாய்ப்பாலூட்டப்பட்ட பெண்களுக்கு தாய்ப்பாலூட்டப்படாத பெண்களை விட மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு எனக் கண்டுபிடித்தது.
(Nichols HB,...(2008) "effects of birth order and maternal age on breast cancer risk: modification by whether women had been breast-fed")
பசுப் பாலில் தாய்பாலில் உள்ளதைவிட இரு மடங்கு புரதம் உண்டு. அதனால் அந்தப் புரதத்தின் அளவை அப்படியே உறிஞ்சி எடுத்து, குழந்தை அதனது உடலில் சேமித்து வைத்துக் கொள்ளமுடியாது. அதன் காரணமாக கொழுப்பதோடு தொடர்பான நோய்கள் எதிர்காலத்தில் தோன்றுகின்றன. அதே நேரம் தாய்ப்பாலில் உள்ள புரதத்தைக் குழந்தை முழுமையாக 100 வீதத்தையும் உறிஞ்சிக் கொள்கின்றது. அதே போன்று அக்குழந்தை தாய்ப்பாலில் இருந்து எடுத்த புரதத்தை சமிபாடடையச் செய்வதற்கு 15 நிமிடங்கள் எடுக்கின்றது. அதே வேளையை பசுப்பாலின் மூலம் செய்வதற்கு 60 நிமிடங்கள் எடுக்கின்றது. எனவே, தாய்ப்பால் நேரத்தையும் சிரமத்தையும் மிச்சப்படுத்துகின்றது .
 தாய்ப்பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பயன்கள்
தாய்ப்பாலூட்டுவதன் மூலம் குழந்தைக்கு மாத்திரமின்றி பாலூட்டும் தாய்க்கும் பல பிரயோசனங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
30 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், தனது மார்பகத்திலுள்ள பாலை ஊட்டும் தாய்மார்கள் குறைவாகவே மார்பகப் புற்றுநோய்க்கு ஆட்படுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Jernstorm, H, "Breast-feeding and the risk of breast cancer in BRCA 1 and BRCA 2 Mutation carriers ")
தாயின் கர்ப்பப்பை மகப்பேறு, பிரசவத்தின் போது 20 மடங்கு விரிவடைகின்றது. இயற்கையான பாலூட்டல் அந்தக் கர்ப்பப்பையை இயல்பான அளவுக்கு மீட்டிக் கொண்டு வந்து விடுகின்றது எனவும் தனது பிள்ளைக்கு தாப்பாலூட்டாத தாயுடைய கர்ப்பப்பை சாதாரண அளவை விட பெரிதாகவே இருக்கும் எனவும் தாயப்பாலூட்டல் கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
தாய்ப்பாலூட்டல் தாயின் எடையைக் குறைப்பதற்கும் கொழுத்தலை விட்டும் காப்பதற்கும் உதவுவதோடு இயற்கையான ஒரு மனநிம்மதியை அது வழங்குகின்றது. அதனால் குழந்தைக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கின்ற அதேவேளை தாயும் நன்கு தூங்குவதற்கு வாய்ப்பேற்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், கூடுதலான காலப்பகுதி பாலூட்டுகின்ற பெண்மணி (ஆகக் குறைந்தது 24 மாதங்கள்) மிகக் குறைவாகவே இருதய நோயால் பாதிக்கப்படுகின்றாள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. (Gunderson, Erica P (2009) "Prospective evidence that lactation protects against cardiovascular disease in women")
அதே போல சர்க்கரை நோய் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் போது மிகக் குறைவான இன்சுலின் தேவைப்படுகின்றது. (Rayburn w,...."changes in insulin therapy during pregnancy"). அத்தோடு Malmo University, 2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வொன்றில், நீண்ட காலம் தாய்ப்பாலூட்டும் பெண்களுக்குக் குறைவாகவே வாதத்தோடு கூடிய முழங்கால் வீக்கம் (Rheumatiod arthrits) ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (Pikwer M,...(2009) "Breast feeding, but not use of oral contraceptives, is associated with a reduced risk of rheumatoid arthritis").
தாய்ப் பாலூட்டுவதால் ஏற்படும் சமூகப் பயன்கள்
தாய்ப்பாலூட்டுவதனூடாக அதிகமான நற்பயன்கள் சமூகரீதியாகவும் ஏற்படுகின்றன. இன்று செயற்கைப் பாலூட்டல் போன்று இயற்கைப் பாலூட்டல் வலியுறுத்தப் படுவதில்லை. சிறுவர் வைத்தியத்திற்குரிய அமெரிக்க எகடமி கூறும் கீழ்வரும் தகவல் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஐக்கிய அமெரிக்கா மாத்திரம் இந்த இயற்கையான பாலூட்டலைப் பின்பற்றுமாயின் அது வருடாந்தம் 3600 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீதப்படுத்த முடியும். இதன் மூலம் பெரும் பொருளாதார வளத்தை, பல அபிவிருத்தி திட்டங்களுக்குச் செலவிடலாம்.
தாய்ப்பாலூட்டல் சூழல் பாதுகாப்புக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். புட்டிப் பால் பொதி செய்வதற்காக தகர, கண்ணாடி போத்தல்கள் உற்பத்தி செய்வதனூடாகவும் பசுப்பாலை உலர்த்துவதனூடாகவும் ஏற்படும் சூழல் மாசடைவு புட்டிப்பாலை பாவித்ததன் பின்னர் அதன் தகர, கண்ணாடிக் குவலைகளால் ஏற்படும் பாதிப்பு என்பன சமூக ரீதியாகப் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
வில்லியம் மெக்டோகல் எனும் அறிஞர் கூறும் போது, 'இன்றைய சமூகம் புட்டிப்பாலின் அடிப்படையில் வளர்ந்துள்ளதையே நான் காண்கின்றேன். எனவே வன்முறைகளும் விரக்தியும் உறவுகளில் பூசலும் ஜீவகாருண்ய மின்மையும் வெளிப்படவே செய்யும். குழந்தை பால் குடிக்கும் போத்தலை சட்ட ரீதியாக தடைசெய்யும் போதுதான் இப்பிரச்சினைகள் தீரும்' என்கின்றார்.
 தாய்ப்பாலூட்ட வேண்டிய காலப்பகுதி
தாய்ப்பாலூட்ட வேண்டிய காலப்பகுதி தொடர்பாக சர்வதேச சுகாதார நிறுவனமும் யுனிசெப் நிறுவனமும் பாலருந்தும் குழந்தைகளிடத்தில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் அது இரண்டு வருடங்களாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளன. ஏனெனில் குழந்தையின் முதலிரு வருடங்களில் தாய்ப்பாலின் மீது மிக முக்கிய தேவையுடையதாக அது இருக்கும். இரு வருடங்களுக்கு முன்பு அதன் உறுப்புக்களால் தானாக எதிர்த்து நிற்க முடியாது.
உலக சுகாதார நிறுவனம் 2001 ஆம் ஆண்டு "Complementary feeding" என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடாத்தியது. அதன் இறுதியில் பின்வருமாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.
"The first two years of a child’s life are a critical window during which the foundations for healthy growth and development are built. Infant and young child feeding is a core dimension of care in this period"
"ஒரு குழந்தையின் வாழ்வில் முதலிரு வருடங்கள் என்பது அதனது ஆரோக்கியமான வளர்ச்சி, விருத்தி கட்டியெழுப்பப்டும் மிக முக்கியமான காலப்பகுதியாகும்.
குழந்தையும் சிறு பிள்ளையினதும் தாய்ப்பாலூட்டல் இக்காலப்பகுpதியில் அடிப்படையாகக் கவனிக்க வேண்டிய அம்சமாகும். "(Complementary feeding, Report of the global consultation, Geneva, 10-13 December,2001)"
அல்-குர்ஆன் சூறதுல் பகரா - 233 ஆம் வசனத்தில் விபரித்துள்ள கருத்துக்களையே மேற்சொன்ன அறிக்கையும் விபரிப்பதைக் காணலாம்.
இந்த வகையில் அல்-குர்ஆன் மிகத் தெளிவாக முன்வைக்கும் தாய்ப் பாலூட்டுவதற்கான கட்டளையை, பிள்ளைக்கான அந்த உரிமையை கட்டாயமாகத் தாய்மார்கள் பின்பற்ற வேண்டும். நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இக்கருத்தை அறிவியல் பூர்வமாகவே நிறுவுகின்றன. எனவே, இவற்றை சீர்தூக்கிப் பார்த்து, தாய்மார்கள் செயற்படுவதற்கு தாய்மார்கள் முன்வருவார்களாக.
No comments:
Post a Comment