“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

அந்தரத்தில் நிற்கும் பறவைகள்

பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன. உமது இறைவன்தான் அதை வசப்படுத்தி இருக்கின்றான் என்று இவ்வசனங்களில் (16:79, 24:41, 67:19) கூறப்பட்டுள்ளது.
இதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்தப் பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்காக அது செல்லும் வேகம் மணிக்கு 1,07,000 கி.மீ. ஆகும்.
மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் பூமி வேகமாக நகரும்போது, பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப் பறவைகள் மீது பூமி மோத வேண்டும். ஆனால் அவ்வாறு மோதுவதில்லை.
பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை இருப்பதால் முன்பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின்பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன்பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்தப் பூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது, பூமியில் மோதி செத்து விடும்.
இந்தப் பேருண்மையைத் திருக்குர்ஆன் அற்புதமான சொற்களால் குறிப்பிடுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாகும்.

ஜம்ஜம் நீரூற்று

மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையிலும், மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும்.
மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும், மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும். அந்த இடம் தான் பின்னர் ஊராக வளர்ந்த மக்கா நகராகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாகவும் இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாகவும் இருக்கிறது.
இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் தினமும் சுமார் 30 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 30 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
மக்காவில் மட்டுமின்றி மதீனாவின் புனிதப்பள்ளியிலும் இலட்சக்கணக்கான மக்களின் குநீராக ஜம்ஜம் நீர் தட்டுப்பாடு இல்லாமல் தாராளமாக வினியோகம் செய்யப்படுகிறது.
பாலைவனத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு குறைந்த ஆளம் கொண்டதாகும். அருகில் ஏரிகளோ, கண்மாய்களோ, குளம் குட்டைகளோ இல்லாமல் இருந்தும் அந்தக் கிணற்றில் இருந்து தினமும் 30 லட்சம் மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வேண்டிய அளவுக்கு வழங்கப்பட்டும் அங்கு நீர் வற்றிப் போகவில்லை என்பது மிகப்பெரிய அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ, பல வருடங்களிலோ தூர்ந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியாவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுகாக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது. ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிரூபிக்கப்பட்டது.
பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுப்பவை. இதை ஜம்ஜம் நீரை அருந்தி அனுபவத்தில் உணரலாம்.
மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது.
"அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது' என்று பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது.
மற்ற அற்புதங்கள் எந்தச் சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 30 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடிநீராகப் பயன்படுகிறது. பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும் உள்ளது. எனவே இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியை குர்ஆனில் இந்த வசனம் (2:259) கூறி விட்டு, "உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்' எனவும் குறிப்பிடுகின்றது.
மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களில் முன்னறிவிப்போ, அறிவியல் உண்மைகளோ, அது பற்றிய குறிப்புகளோ புதைந்து கிடப்பதைத் திருக்குர்ஆனில் பரவலாகக் காணலாம்.
இந்த நிகழ்ச்சியில் சொல்லப்படும் மனிதர் தன்னுடன் ஒரு கழுதையையும், உண்பதற்கான சில உணவுகளையும், தண்ணீரையும் எடுத்துக் கொண்டு பயணம் செய்கிறார். இந்நிலையில் அவரை நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்த இறைவன், கழுதையையும் மரணிக்கச் செய்து மக்கிய எலும்புகளாக்கினான். ஆனால் அந்த மனிதர் கொண்டு வந்த உணவும் தண்ணீரும் நூறு ஆண்டுகள் கடந்த பின்பும் கெட்டுப் போகாமல் அப்படியே இருந்தது.
இதில் இறைவன் கூறும் அந்த அத்தாட்சி எது?
உணவும், தண்ணீரும் இருந்த இடத்திற்கு அருகில் தான் கழுதையின் உடலும் கிடந்தது. அப்படியிருந்தும் கழுதை மக்கிப் போகின்றது. அதே சமயம் உணவும் நீரும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது.
குளிர்பதனப் பெட்டியைப் போன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பாதுகாப்புக் கவசத்தை ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கின்றது.
பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு ஒரு தொழில் நுட்பம் உள்ளது; அதை ஆய்வு செய்யுங்கள் என்ற கருத்து உள்ளடங்கி இருப்பதால் தான் "அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்' என்று இறைவன் கூறுகின்றான்.

குர்ஆன் கூறும் காற்றின் வேகம்

குர்ஆனில் இந்த வசனத்தில் (34:12) ஸுலைமான் நபிக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சராசரியாக காற்றின் வேகத்தையும் அல்லாஹ் நமக்கு சுட்டிக் காட்டுகிறான்.
நம் மீது வீசுகின்ற காற்று நம் மீது பட்டு, பூமியை ஒரு சுற்று சுற்றி வந்து மறுபடியும் நம் மீது பட வேண்டுமானால் அதற்கு சுமார் இரண்டு மாத காலம் தேவைப்படும். ஏனென்றால் சராசரியாக காற்று 25 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்றது. இந்த வேகத்தில் வீசுகின்ற காற்று பூமியைச் சுற்றி வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும்.
காற்று, ஒரே சீராகச் சுற்றி வருகிறது என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. ஸுலைமான் என்ற இறைத்தூதருக்கு தனிச் சிறப்பாக அல்லாஹ் காற்றை வசப்படுத்திக் கொடுத்தபோது அவருக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்ட காற்று இரண்டு மாதத்தில் திரும்ப ஒரு சுற்று சுற்றி விட்டு வரும் என்று தான் அல்லாஹ் கூறுகிறான்.
இங்கே ஸுலைமான் என்ற இறைத்தூதருக்கு உரிய சிறப்பைச் சொன்னாலும் சராசரியான காற்றின் வேகத்தையும், பூமியின் சுற்றளவையும், பூமியுடைய சுழற்சி வேகத்தையும் கணக்கிட்டுப் பேசும் ஒரு விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் இதைப் பேசியிருக்கிறது.
இது நிச்சயமாக மனிதனின் சொல்லாக இருக்க முடியாது; இறைவனின் சொல்லாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

பன்றியை உண்ணத் தடை

குர்ஆனில் இந்த வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.
இதற்கான காரணத்தை திருக்குர்ஆனோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கூறவில்லை.
மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள்வதாலும் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.
இதுதான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். சாக்கடையில் புரளாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றி அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தப் பன்றியும் உண்ண அனுமதிக்கப்படவைல்லை.
எனவே பன்றியின் மாமிசம் தடுக்கப்பட்டதற்கு இவை காரணமாக இருக்க முடியாது. ஆயினும், பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்பதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.
பொதுவாக உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கும் போது அது மனித உடலுக்குக் கேடு செய்கிறது. குறிப்பாக இதய நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதய நோயாளிகள் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் கூட உண்ண வேண்டாம் என்கின்றனர்.
100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. ஆனால் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது.
சரி பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக இருக்க முடியாது.
மேலும் எல்லாக் கால்நடைகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடல் அதிகமாகச் சூடாகும் போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகின்றது.
ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறார்கள். மற்ற கால்நடைகள் இதை விட அதிகமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ஆனால் பன்றியினால் 29 டிகிரி வெப்பத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. வியர்வைச் சுரப்பிகள் இல்லாததே இதற்குக் காரணம்.
இதனால் தான் 29 டிகிரியை விட வெப்பம் அதிகமாகும் போது சாக்கடையில் புரண்டு, வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறது.
பன்றியின் இறைச்சியில் மனிதனுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
பன்றி உணவு சாப்பிடாத இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக் கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர்.
இது போன்ற காரணங்களால், வருமுன் காக்கும் நோக்கில் பன்றி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு

குர்ஆனில் இந்த  வசனங்களில் (20:53, 43:10, 78:6) பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.
மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் சூரியனை ஒரு ரங்கராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை.
குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும், நித்திரை தருவதாகவும் இருக்கும்.
பூமி வேகமாகச் சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. "தொட்டிலாக' என்ற சொல் மூலம் இதைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
மாபெரும் அறிவியல் உண்மையை உள்ளடக்கி இறைவேதம் என்பதற்கான சான்றாக இது அமைகின்றது.

மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா?

குர்ஆனின் நற்போதனைகள்

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? 2:44

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 2:269

அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். 4:82

(நபியே!) நீர் கூறும்; “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்; “குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” 6:50

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். 6:98

அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 13:3

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும் மானக்கேடான காரியங்கள் பாவங்கள் அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் – நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். 16:90

அவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும் உண்மையையும் குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள். 30:8

அச்சமும் ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை – அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன.30:24

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும் பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். 35:3

அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 39:42

அவர்கள் கூறுவார்கள்; “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”

இஸ்லாம் பண்றியின் மாமிசத்தை தடை செய்தது ஏன்?


இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்? என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

 
பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன.

பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.


பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி ,றைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் ,து போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி


பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.


உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.


உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான்.


இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் 'ஐலேண்ட்' என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.

குர்ஆனில் சிலந்தி வீடு



குர்ஆனில் بَيْتُ الْعَنكَبُوتِ சிலந்திவீடு குர்ஆனில் வரும் 29-வது அத்தியாயத்திற்கு சூரத்துல் அன்கபூத் என்று பெயராகும். அன்கபூத் என்றால் ”சிலந்திப்பூச்சி” என்று பொருள்.


இறைவன் குர்ஆனில் இணை வைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக 22:73,29:41; வசனங்களில் ஈயையும் சிலந்தியையும் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ
மனிதர்களே! (உங்களுக்கோர்) உதாரணம் சொல்லப்படுகிறது.எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்யமாக நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் (அழைத்துப்)பிரார்த்திக்கிறீர்களோ,அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும், ஒரு ஈயைந்கூட படைக்க முடியாது.மேலும் அவர்களிடமிருந்து (அது) ஒரு பொருளை எடுத்துச் சென்றால் அவர்களால் அந்த ஈயிடமிருந்து அதனைக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுபடுவோனும் பலகீனர்களே! (திருக்குர்ஆன் 27:73)مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ أَوْلِيَاء كَمَثَلِ الْعَنكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَ
அல்லாஹ் அல்லாதவற்றை (த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியன் உதாரணம் போன்றது.அது (தனக்காக) ஓரு வீட்டைக் கட்டடியது. ஆயினும் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலகீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும். இதை அவர்கள் அறிந்து கொண்டால் (தாங்கள் இணையாக எடுத்துக்கொண்டவற்றின் பலகீனத்தைப் புரிந்து கொள்வார்கள். (திருக்குர்ஆன் 29:41)


இந்த வசனங்களைக் கேட்ட குரைஷி மக்கள் ‘முஹம்மதின் இறைவன் ஈயையும், சிலந்திப்பூச்சியையும் மேற்கோள் காட்ட வெட்கப்படவில்லை? என்று இழித்துரைத்தபோது இறைவன் பின்வரும் வசனத்தை அருளினான்.

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்.ஆனால் (இறை நம்பிக்கையற்ற) நிராகரிப்பாளர்களோ, 'இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?' என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான் இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான் ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை. (திருக்குர்ஆன் 2:26)
وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ
‘இந்த உவமைகளை மக்களுக்காகக் கூறுகிறோம். அறிவுடையோரையன்றி வேறு எவரும் இதனை புரிந்து கொள்ள மாட்டார்கள் (திருக்குர்ஆன் 29:43)
என்று எடுத்துரைத்தான்.இந்த சிலந்தியின் அறிவியல் உவமை சிந்திக்க வைக்கும் ஓர் அற்புதமான உவமையாகும்.
சிலந்தி வலையில் பொறியியல் கலை 




சிலந்திகள், தமது வலைகளை பின்னுவதற்குரிய நூலை தாங்களே உருவாக்குகின்றன. அவை பின்னுவதற்குப் பயன்படுத்தும் தொழில் நுட்பமும், இன்றைய கட்டிடக்கலை பொறியாளர்கள் பயன்படுத்தும் தொழில் நுட்பமும் ஒன்று தான் என்பதை நம்மில் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


சிலந்தி தனது வலையைப் பின்னுவதற்கு இரண்டு எதிரெதிர் முனைகள் தேவைப்படு கின்றன. பொதுவாக இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையிலோ, இரண்டு மரக்கிளை களுக்கு இடையிலோ, சிலந்தி தனது வலையை உருவாக்குகிறது. இருப்பினும், சிலவகை சிலந்திகள் ஒரு தனிப்பட்ட மரக்கிளையை மட்டுமே பயன்படுத்தி தங்களின் வலைகளை பின்னும் திறன் படைத்தவை. இவை இத்தனை நேர்த்தியான வலைகளை உருவாக்குகின்றன என்பது வரைபடங்களை வைத்து உருவாக்கும் பொறியாளர்களைக் கூட வியப்படையச் செய்கின்றன.
சிலந்தி முதலில் எளிதில் வளையக்கூடிய ஒரு மரக்கிளையைத் தேர்ந்தெடுத்து மரக்கிளையின் முனையில் தனது உடலிலிருந்து உற்பத்திச் செய்யும் நூலின் ஒரு முனையை கெட்டியாகக் கட்டுகிறது. தொடர்ந்து மரக்கிளையின் அடிப்பகுதி நோக்கி ஊர்ந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும் தனது உடலிலிருந்து உற்பத்தியாகும் நூலை நிறுத்துகிறது. மரக்கிளையில் கட்டியிருக்கும் நூலை, மரக்கிளை வளையும் வரை இழுத்து அரை வட்டவடிவத்திற்கு கொண்டு வருகிறது. நூலின் மறு முனையை வளைய வடிவத்திற்குக் கட்டுகிறது. உருவாக்கப்பட்ட இந்த வளையத்திற்குள் சிலந்தி தனது வலையை பின்ன ஆரம்கிக்கிறது. இரண்டு மீட்டர் நீளமுள்ள நூலை இரண்டு மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு சுவர்களுக்கு மத்தியில் கட்ட வேண்டும் எனில் அது எவ்வாறு மிக நேர்த்தியாக கட்டிமுடிக்க முடியும் என்பதை கட்டிடக் கலைஞர்கள் புரிந்து கொள்வார்கள்.


சிலந்தியின் தொழில் நுட்பம்
சில வேளைகளில் அதிக இடைவெளிகளில் பின்னும் வலை வலுவில்லாது போய்விடும். அப்போது தாம் உணவாக உட்கொள்ளும் பூச்சிகளைப் பிடிப்பதற்காக வலை வலுவான தாக இருப்பதற்கு அது ஒரு அதிசயமான முடிவுக்கு வருகிறது. உடனே தனது உடலிலிருந்து உற்பத்திச் செய்யும் நூலின் ஒரு முனையை பின்னப்பட்ட வலையின் மத்தியில் கட்டுகிறது. மற்றொரு முனையை தரையில் உள்ள ஒரு சிறிய கல்லில் கட்டிவைக்கிறது.
மீண்டும் வலைக்கு வரும் சிலந்தி, வலையின் மத்தியில் கட்டியிருக்கும் நூலை இழுத்து தரையில் உள்ள கல்லை மேல் நோக்கி உயர்துத்துகிறது. மேல் நோக்கி உயர்த்தப்பட்ட கல் வலையின் மத்தியில் தொங்கிக் கொண்டிருக்கும் வகையில் நூலை உயர்த்தி,வலையின் மற்றொரு பகுதியில் இழுக்கப்பட்ட நூலை கட்டிவைக்கிறது. தொங்கிக் கொண்டிருக்கும் கல்லின் கனத்தால் ,சிலந்தி வலை கீழ் நோக்கி இழுபடுவதோடு வலையின் வலிமையும், இறுகும் தன்மையும், தேவையான அளவு அதிகரிக்கிறது.

சிலந்தியின் இந்தப்பிரச்சனைக்கு ஒரு பொறியாளர் கூட இதனைச் சிந்தித்திருக்கமாட்டார். சில வகை சிலந்திகள் தங்களின் வலைகளில் அறியாமல் பிறபூச்சியினங்கள் நுழைந்துவிட்டால் அவற்றை தனியாக ஒரு பகுதியில் எங்கும் ‘நகரவிடாமல் சிறைப்படுத்தி விடுகின்றன. இந்த நுண்ணறிவு அவற்றிற்கு எப்படிக் கிடைத்தன? கட்டடக்கலை அறிவு இல்லாத இந்தச் சிலந்திகள் எவ்வாறு இந்த அறிவைப் பெற்றன? ஐந்தறிவு படைத்த இந்த சிலந்திகள் எப்படி இந்த தொழில் நுட்பத்தைப் கற்றன ? இவ்வுலகில் வாழும் சிலந்திகள் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த தொழில் நுட்பத்தைப் பயன்னடுத்துகின்றனவே ? இது அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அற்புத ஆற்றலல்லவா? ஆம்! அல்லாஹ் கூறுவது போல சிந்திக்கும் மக்களுக்கு இதில் சிறந்த படிப்பினைகள் உள்ளன.

வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்?(திருக்குர்ஆன் 7:185)

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?

[camel2.jpg]
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?
அல்குர்ஆன் 88:17
இது அல்லாஹ் எழுப்புகின்ற கேள்வியாகும். மனித சிந்தனையைத் தூண்டுகின்ற, மனிதனை அறிவியல் ஆய்வுக்குக் கொண்டு செல்கின்ற அற்புதமான கேள்வி இது!
தன்னுடைய பாலைவனப் படைப்பான ஒட்டகத்தின் அற்புதத்தைப் பற்றி மனிதனை சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறான். ஒட்டகத்தின் அற்புத ரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கின்ற ஒரு கட்டுரை அண்மையில் இந்து தமிழ் நாளிதழில் வெளியானது. அந்தக் கட்டுரை இதோ:
50 டிகிரியிலும் வியர்க்காது
ஆடுகளையும், மாடுகளையும் பார்த்துப் பழகிய நமக்கு ஒட்டகம் என்பது விந்தையான விலங்காக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்கள் மந்தை மந்தையாகச் சுற்றித் திரிகின்றன.
இந்தியாவில் காணப்படும் ஒட்டகங்கள் ஒற்றைத் திமில் ஒட்டகங்கள். அரேபியன் வகையைச் சேர்ந்தவை. சராசரியாக 300 கிலோ எடை முதல் ஆயிரம் கிலோ எடைவரை வளரும். உயரம் 7 முதல் 8 அடி உயரம் வரை. சாதுவாகக் காணப்படும் ஒட்டகங்கள், மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை என்பது ஆச்சரியம்.
ஒட்டகம் குறுகிய கால இடைவெளியில் 30 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப மாற்றத்தைத் தாங்கும் உடல் அமைப்பைப் பெற்றது. 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்கூட இதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறாது. அதனால்தான் பாலைவனத்தில் தாக்குப்பிடிக்க முடிகிறது.
பாலைவன மணல் பகுதியில் சுற்றித் திரியும் விலங்கினம் என்பதால், இயற்கையாகவே ஒட்டகங்களுக்கு வித்தியாசமான சுவாச உறுப்புகள் அமைந்துள்ளன. மூக்கு, வாய்ப் பகுதிகள் மிகவும் தடிமனாக இருப்பதால், இதன் மூக்குக்குள் எளிதாக மணல் புகாது. முன்னங்கால்களையும் பின்னங்கால்களையும் வித்தியாசமாக மடக்கிவைத்து இது படுத்திருப்பது வித்தியாசமான காட்சி.
ஒட்டகத்தின் தண்ணீர்
பாலைவனங்கள் என்றால் தண்ணீரே இருக்காது. அங்கு வாழும் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தால் என்ன செய்யும்? தண்ணீர்த் தேவையை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ளும்?
உலகில் வாழும் பல உயிரினங்களுக்கும், வாழ்வதற்கு ஏற்ற உடலமைப்பை இயற்கையே கொடுத்திருக்கிறது. அதில் ஒட்டகமும் ஒன்று. ஒட்டகத்தின் முதுகுப் பகுதியில் திமில் போன்ற மேட்டுப் பகுதியைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த இடத்தில் கொழுப்பு உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.
ஒட்டகத்தின் இரைப்பையில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளின் சுவர்களில் தனித்தன்மை வாய்ந்த நீர்ச் செல்கள் உள்ளன. இதில்தான் ஒட்டகம் நீரைச் சேமித்து வைக்கிறது. இதோடு, ஒட்டகத்தின் தசைகளிலும் இணைப்புத் திசுக்களிலும் நீர் சேமித்து வைக்கும் அமைப்பு உள்ளது. திமிலில் சேமிக்கப்படும் கொழுப்பு உணவுப் பொருட்களின் மூலம் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இந்த வளர்சிதை மாற்றம் மூலம் ஒட்டகத்துக்குத் தானாகவே நீர் கிடைத்துவிடும்.
இதை வைத்தே சில வாரங்கள் வரை நீர் அருந்தாமல் ஒட்டகத்தால் தாக்குப்பிடிக்க முடியும். இப்படி மீண்டும் மீண்டும் நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளவும் ஒட்டகத்தால் முடியும். உடலுக்குள்ளே நீரைத் தேக்கி வைத்துக் கொள்வதால் தான் ஒட்டகத்தைப் "பாலைவனக் கப்பல்' என்றழைக்கிறார்கள்.
நன்கு வளர்ந்த ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையும் இருக்கும். ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகத்தின் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் இவை உயிர் வாழும். அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகத்தில் ஓடும் இவற்றால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து ஓட இயலும். பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்துகின்றனர். பாலைவனப் பகுதிகளில் இராணுவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இவை இந்து தமிழ் நாளிதழில் வெளியான தகவல்களாகும். இந்தக் கட்டுரை ஒட்டகத்தின் அற்புதத்தை ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கின்றது. நாம் இதை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
30 டிகிரி முதல் 40 டிகிரி வரை வெப்பத்தைத் தாங்கும் ஒட்டகத்தின் உடல்வாகையும் வலிமையையும் இந்தக் கட்டுரை விவரிக்கின்றது.
மனித உடலில் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். கோடையில் வளிமண்டல வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த வெப்பத்தை மனித உடல் தாங்காது என்பதற்காக, அதைக் குளிர்விப்பதற்காக வியர்வை சுரப்பிகள் மூலம் வியர்வை மழையை இறைவன் கொட்டச் செய்கிறான்.
இதனால் மனித உடலில் தண்ணீர் இருப்பு குறைகின்றது. அதைச் சரிகட்ட தாகம் எடுக்கின்றது. குடம் குடமாக நீரை உடலில் கொட்டி இழந்த நீர்ச்சத்தை மனிதன் ஈடுகட்டி விடுகின்றான். கோடையில் மனிதனின் நிலை இது!
ஆனால் ஒட்டகத்தின் நிலை இப்படி இருந்தால் என்னாவது? பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு மனிதனை அது சுமந்து செல்கின்றது. அதனுடைய உடலில் எப்ங்ஷ்ண்க்ஷப்ங் பட்ங்ழ்ம்ர்ள்ற்ஹற் எனும் எளிதில் வளையத்தக்க வெப்ப நீர்நிலைக் கருவி போன்ற அமைப்பு உள்ளது. அதனால் அதன் உடல் 42 டிகிரி வெப்பநிலையை அடைகின்ற வரை அதற்கு வியர்ப்பதில்லை. 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு 8 நாட்கள் உணவு, நீர் இன்றி ஒட்டகம் உயிர் வாழும்.
ஒட்டகம் ஒரு தடவை தண்ணீர் குடித்தால் தனது உடலின் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு சுமார் 137 லிட்டர் தண்ணீரைக் குடித்துக் கொள்கிறது. ஒட்டகம் குடிக்கின்ற தண்ணீர் அதன் உடலில் எங்கே சேமித்து வைக்கப்படுகின்றது? இந்தத் தண்ணீர் ஒட்டகத்தின் திமில்களில் தான் சேமித்து வைக்கப்படுவதாகப் பரவலாக நம்புகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல!
திமில்களில் இருப்பது சுமார் 40 கிலோ அளவிலான கொழுப்பாகும். இந்தக் கொழுப்பு, ஒட்டகத்தின் உடலில் உள்ள தண்ணீர் ஆவியாகிவிடாமல் தடுக்கின்றது. வெப்பத்தின் தாக்கம் உள்ளே பாயாமல் காக்கும் அரணாகத் திகழ்கின்றது.  இந்தக் கொழுப்பு ஙங்ற்ஹக்ஷர்ப்ண்ள்ம் - வளர்சிதை மாற்றம் அடைகின்ற போது, அதாவது உடலுக்குத் தேவையான சத்தாக மாறுகின்ற போது, அப்பொழுதும் அங்கு ஓர் அற்புதம் நிகழ்கின்றது.
அதன் ஒவ்வொரு கிராம் கொழுப்புக்கு ஈடாக ஒரு கிராம் தண்ணீரை ஒட்டகத்தின் உடல் பெறுகின்றது. ஒட்டகம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன் இந்த எதிர் வினையாக்கத்தை நிகழ்த்துகின்றது.
குடிக்கும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது. அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது. குட்டி போட்டுப் பாலூட்டும் மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பம்சம் கொண்டது.
நீர்ச்சத்து வீணாவதை விட்டும் தடுக்கக்கூடிய வகையில் தான் ஒட்டகத்தின் குடலும், சிறுநீரகமும் மிக வலுவாக அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டகத்தின் சிறுநீர் மிகவும் அடர்த்தியானதாகும். இதன் அடர்த்தி கடல்நீரை விட அதிகமானது. அதன் சிறுநீர் மருந்துத் திரவம் அல்லது பழச்சாறு போன்று அமைந்திருக்கின்றது. ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் இருக்கின்றது என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது.
"உக்ல்' அல்லது "உரைனா' குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே (அவர்கüன் வேண்டுகோளுக்கிணங்க) பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறு நீரையும் பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறினார்கள்.
நூல்: புகாரி 233
நபி (ஸல்) அவர்கள் உரைனா கூட்டத்தினரை ஒட்டகத்தின் சிறுநீர் குடிக்கச் சொன்னதன் அறிவியல் உண்மையும் நமக்குப் புலனாகின்றது.
ஒட்டகம் ஓர் அனைத்துண்ணி ஆகும். சைவம், அசைவம் என அனைத்தையும் சாப்பிடுகின்ற கால்நடைப் பிராணி ஆகும்.
பெரும்பான்மையான பாலைவன உணவு உலர்ந்த, முள்ளடர்ந்த தாவர இனங்கள். எத்தகைய கூரிய முட்செடிகளையும் இழுத்து வளைத்து சாப்பிடக்கூடிய அளவுக்கு அதனுடைய உதடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜீரண உறுப்புக்களும் சவால்களைச் சந்திக்கின்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மாமிசம், எலும்பு, உப்பு, இனிப்பு என அனைத்து வகை உணவுப் பொருட்களிலும் ஒட்டகம் பாரபட்சம் காட்டுவது கிடையாது. தண்ணீரில் நல்ல தண்ணீர், உப்புத் தண்ணீர் என பேதம் கொள்வதில்லை.
பாலைவனங்களில் வீசுகின்ற பாலைவனப் புயல் ஒரு வித்தியாசமான புயலாகும். தூசியையும் மணல் துகள்களையும் மணற்பரப்பின் அடிப்பகுதியிலிருந்து அப்படியே வாரியிறைக்கும். கண் இமைகளை மூடவில்லை என்றால் கண்ணின் கருவிழிகளில் ஊடுறுவி பதம் பார்த்துவிடும். மணிக்கு பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்ற பாலைவனப் புயலின்போது ஒட்டகம் தன் இமைகளை இறுக மூடிக் கொள்கிறது. அப்படியானால் பயணம் எப்படி என்று பயப்படத் தேவையில்லை. இமைகள் மூடினாலும் பார்வையை மறைப்பதில்லை. இமைகளின் தோல்கள் கண்ணாடிகள் போன்று ஒளி ஊடுறுவும் (பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ற்) தன்மை கொண்டதாகும். அதனால் அவை கண்களை மூடிக் கொண்டு வெளியே பார்க்கும் சக்தி கொண்டவை. ஒட்டகத்தின் இந்தப் பார்வையிலும் அல்லாஹ்வின் அற்புதங்கள் ஒளிந்திருக்கின்றன.
ஒட்டகத்தின் உடலமைப்பு
ஒட்டகத்தின் உடல் மெல்லிய மயிர் தோலில் அமைந்துள்ளது. இந்தத் தோலமைப்பு ஒட்டகத்தைப் பகல் நேரத்தில் கரித்துப் பொசுக்குகின்ற சூரிய வெப்பக்கதிர்களின் பிரதிபலிப்பிலிருந்து காப்பதற்காகத் தான். அதே சமயம் இரவு நேரத்தில் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே போகும் போது அந்தக் குளிரின் கோர ஆட்டத்திலிருந்தும் இந்தத் தோலமைப்பு காக்கின்றது.
ஒட்டகம் பாலைவனத்தின் தரையில் படுக்கின்ற போது, தரைச் சூடு அதன் உடலில் தாவி, வாட்டி வதைத்துவிடக் கூடாது என்பதற்காக அதன் உடல் அமைப்பில் சில குறிப்பிட்ட தோல் பகுதிகள் பல அடுக்குகளால் ஆகியிருக்கின்றது.
மனிதனின் பாதங்களின் அடிப்பகுதியில் தோலமைப்பு உடலின் இதர தோலை விட முற்றிலும் வேறுபாடானது. சற்று தடிமனாக அமைந்திருக்கின்றது. இந்தத் தடிமனான பாதப் பகுதி நடந்து, நடந்து காய்த்துப் போவதால் ஏற்பட்டதல்ல. பிறக்கும் போதே அப்படியே அமைந்துள்ளது.
இதுபோன்றே ஒட்டகமும் பிறக்கும் போதே அதன் தோல் பகுதி வெப்பம், குளிர் போன்றவற்றைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்குத் தடிமனாக அமைந்துள்ளது.
மனிதன் பயணிக்கின்ற இந்த பாலைவனக் கப்பலில் தான் அல்லாஹ்வின் எத்தனை தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன.
அல்லாஹு அக்பர்! இது மிகப் பெரிய இறை ஏற்பாடாகும்.
ஒட்டகத்தின் உயிரணுக்கள்
பாலூட்டிகளின் இரத்த அணுக்கள் வட்ட வடிவமானவை! ஆனால் ஒட்டகத்தின் உயிரணுக்கள் முட்டை வடிவமானவை! நீர்ச்சத்து குறையும் போது அதன் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு!
ஒட்டகம் அதிகமான தண்ணீர் பருகும் போது இந்த உயிரணுக்களில் தண்ணீர் ஊடுறுவுகின்ற போது அது பாதிப்புக்குள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் இப்படி ஓர் அமைப்பை ஆக்கியுள்ளான்.
மூக்கு துவாரத்தை மூடும் கதவுகள்
பாலைவனப் புயலின் போது பொடிப்பொடி மணல் துகள் மூக்கில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, மூக்கை மூடக்கூடிய விஷேச மூடிகள் உள்ளன. அவற்றை வைத்து மூக்கு துவாரத்தை மூடிக் கொள்கின்றன.
நாசித்துவாரத்தைக் குளிரூட்டுவதற்காக இறைவனின் தனி ஏற்பாடும் நாசிப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த அலாதியான அற்புத ஏற்பாடு, ஒட்டகம் சுவாசிக்கின்ற மூச்சுக் காற்று மூக்கின் வழியே கடந்து சொல்லும் போது அதன் நீர்ச்சத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான்.
ஒட்டகத்தின் பாதங்கள்
இந்த ஒட்டகத்தின் பாதங்கள் மனிதர்கள் அணிகின்ற ஷூக்கள் போன்று தரைச் சூட்டின் தாக்குதலிலிருந்து அதைப் பாதுகாக்கின்றது. அதிக எடை கொண்ட பாரங்களை ஒட்டகம் சுமந்து செல்கின்ற போது பாலை மணலில் புதைந்து உள்வாங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு பிரத்தியேக தொழில்நுட்பத்தில் அதன் பாதங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி ஒட்டகத்தின் ஒவ்வொரு உள், வெளி உறுப்புகளும் தனித்தனி அற்புதத்தைத் தாங்கி நிற்கின்றன.
இதனால் தான் அல்லாஹ், "ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?'' (88:17) என்று கேட்கின்றான்.