“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

வானத்தையும பூமியையும் 6 நாட்களில் படைத்தான்


‘(நபியே! இன்னும் வரவில்லையே என்று வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும். (அல் குர்ஆன் – 22:47)

உங்கள் கேள்விக்கு இறைவன் மிக அழகாக பதிலளிக்கிறான். நம்முடைய கணக்கில் ஒரு நாள் என்பது இறைவன் புறத்தில் ஆயிரம் ஆண்டுகளை ஒத்தது என்பது இந்த வசனத்தில் இருந்து விளங்குகிறது.

"வானங்களிலும் பூமியிலும் மறைவானவை இறைவனுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்" 
-குர்ஆன் 16:77

நாட்களை கணக்கிடும் முறையே பின்னாளில் நமது வசதிக்காக உருவாக்கப்பட்டது எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!

மேற்கண்ட பதிலைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு கண் சிமிட்டும் நேரத்திற்கு தோராயமாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கவனிப்போம். கண் சிமிட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு விநாடியில் இரண்டு மூன்று முறை நம்மால் இமைகளை சிமிட்ட முடியும். ஆயினும் குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்து விடும் எனக் கூறுவதில் திருப்தி கொள்ளாமல் அதை விடக் குறைவான நேரத்தில் உலக அழிவு வரக் கூடும் எனக் கூறுகிறது. இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட்(milli second) கணக்கில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கமானது இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.

குர்ஆன் சொல்லும் கால அளவை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று மற்றவர்கள் கேட்கலாம். இந்த விளக்கமானது குர்ஆன் இறை வேதம்தான் என்று நம்புபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் மேலும் சில கணித வடிவமைப்புகளை பார்வையிடுவோம்.

பேரண்டத்தின் அழிவு எப்போது என்பது பற்றித் திருமறை வசனங்களிலிருந்து அது கூறிய கால அளவு ஏறத்தாழ 0.2 வினாடி என்று நாம் அனுமானித்தோம். ஆனாலும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1433 வருடங்களாகியும் இப்பேரண்டமானது அழிவுறத் தொடங்கவில்லை. எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி இவ்வுலகின் தற்போதய 1433 (ஹிஜ்ரி) வருடங்களை விட மிகுதியானதாகும் என ஐயமறத் தெரிகிறது. இந்த விளக்கத்திலிருந்து நமக்கு கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1433 வருடங்களை விட அதிகம் என்பதாகும்.

இன்னும் விளக்கமாக சொல்லப் போனால்...

0.2 வினாடி > 1433 வருடங்கள்

இந்த இடத்தில் குர்ஆனின் கணக்கின்படி பேரண்டத்தின் 2 வினாடி என்பது உலகியலின் கணக்கின்படி 1433 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை 1433 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1433 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். ஆனால் இப்பேரண்டம் எப்பொழுது துல்லியமாக அழியும் என்ற ரகசியத்தை நம்மை படைத்த இறைவனே அறிவான். இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1433 வருடங்களுக்கு மேல் என்றே கூற முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1433 வருடங்கள் என்ற எண் நிரந்தரமானதன்று. அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1434, 1435 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

குர்ஆன் இந்த பேரண்டத்தைப் படைக்க ஆறு நாட்கள் ஆனதாக கூறுகிறது. இந்த ஆறு நாட்கள் என்பதை நாம் முன்பு குர்ஆனிலிருந்து பெற்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி நம் உலகியல் கணக்குக்கு ஒரு தோராயமான மதிப்பை பெற முயற்ச்சிப்போம்.

மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் : 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள்:
=0.2*24=4.8=5

=0.2 வினாடி * வினாடி (sec) * நிமிடம் (min) * மணி(time)

=5 * 60 * 60 * 24

=43200 * 6 = 2259000 (ஆறு நாட்களுக்காக விடையை ஆறால் பெருக்கியிருக்கிறோம்)

=1433=0.2 வினாடி ( அதாவது பேரண்டத்தின் 0.2 வினாடியின் கால அளவு என்பது 1433 உலகியல் வருடங்களுக்கு மேல் என்ற எண்ணுக்கு நிகரானது என்பதை நினைவில் கொள்வோம்)

=1433 * 2259000 (இறைவன் புறத்தில் உள்ள ஆறு நாட்களின் மொத்தமுள்ள 0.2 வினாடிகளின் கால அளவுக்கு நிகரான நம் கணக்கில் உள்ள உலகியல் வருடங்கள்

=3237147000

உலகம் படைக்கப்பட்டதின் வருடங்களை உலகியல் கணக்கில் குர்ஆனின் சூத்திரத்தை வைத்து தற்போது கண்டு பிடித்து விட்டோம். இந்த பேரண்டம் உருவாக்கப்பட்டு 320 கோடி வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதனை மிக தெளிவாக கண்டு கொண்டோம்.

இப்பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாயிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லே ஷேப்லி கூறுகிறார்.

பேரண்டம் உருவாவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

குர்ஆன் கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறியல் அறிஞர்களால் கண்டு பிடித்த அறிவியல் உண்மைகளோடு ஏறத்தாழ ஒத்து வருவதை கண்டு நாம் ஆச்சரியமடைகிறோம். அந்த அறிவியல் அறிஞர்களும் தோராயமாகத்தான் காலத்தை கணித்தனர். குர்ஆனோ இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலத்தை துல்லியமாக 1433 வருடங்களுக்கு முன்பே மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். எழுதப் படிக்க தெரியாக ஒரு மனிதர் இந்த குர்ஆனை தனது சொந்த கற்பனையில் இயற்றியிருக்க முடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

No comments:

Post a Comment