மன்னர் பஹத் காம்லக்ஸிலிருந்து இறை வேதமான குர்ஆனின் மொழி பெயர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு இலவசமாக சவுதியிலும் மற்றும் உலகின் பல பாகங்களுக்கும் அனுப்பப்பட்டன. இந்த வருடம் ரமலானில் மாத்திரம் 220408 காப்பிகள் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டது ஹிஜ்ரி 1405 ல். இந்த முப்பது வருடங்களில் இது வரை இந்த அமைப்பானது மொத்தம் 275017360 காப்பிகளை உலகம் முழுக்க அனுப்பியுள்ளது. இதோடு அல்லாமல் ஆதாரபூர்வமான ஹதீது கிரந்தங்கள் புகாரி, முஸ்லிம், அபூதாவுது போன்ற நபியவர்களின் சொற்களும் செயல்களும் புத்தகங்களாக்கப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டு பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
தகவல் உதவி:
அல்ரியாத்.காம்
23-08-2014
இது போன்ற சிறந்த செயல்களை சவுதி அரசு செய்யும் போது நாம் பாராட்ட வேண்டும். இறைவன் இந்த ஆட்சியாளர்களுக்கு குர்ஆனின் கட்டளைகளின்படி சவுதி அரேபியாவை கொண்டு செல்ல அதுவும் உலக முடிவு நாள் வரை இப்பணி தொடர நாமும் பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment