“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்!

சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.

சூரியக் குடும்பத்தின் ஆற்றல் (Energy of Solar system) இரும்பை உறுவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு இந்த சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப்போல நான்கு மடங்கு ஆற்றல் (Four Times energy of Entire solar System is Required to Produce a Single Atom of Iron) தேவைப்படுகிறது. எனவே பூமியில் உள்ள இரும்புகள் எங்கிருந்தோ வானத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்கின்றனர் NASA விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.


Iron Was Sent down from Another Giant StarIron Sent Down
தற்கால அறிவியலாளர்கள், தற்போது பூமியில் காணப்படும் இரும்புகள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனை விடப் பன்மடங்கு பெரிதாகவிருந்த ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துகள்கள் சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு அதனோடு மோதி பூமியில் இரும்புக்கான தாதுப்பொருட்கள் பரவலாக கிடைக்க வழி வகுத்தது என்று கூறுகிறார்கள். 




இந்த அறிவியலாளர்கள் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் இளகிய நிலையில் இருந்த இந்த பூமி தற்போதுள்ள அளவை விட மிகச் சிறியதாக இருந்ததாகவும் இரும்பின் தாதுப்பொருட்கள் அடங்கிய மிகப்பெரிய ஆஸ்ட்ராயிட்ஸ் எனப்படும் விண்கற்கள் 10 க்கும் மேற்பட்டவைகள் பூமியில் மோதியதாகவும் ஒவ்வொரு தடவையும் மோதும் போது பூமி தன் அளவில் பெரியதாக ஆனதாகவும் கூறுகிறார்கள். 

பூமி, சந்திரன், சூரியன் இவைகளெல்லாம் மிகப்பெரிய வெடிப்பின் மூலம் (Big Bang) தோன்றியது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு வெடித்துச் சிதறியதால் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் தோன்றிய அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சிறியதும், பெரியதுமான விண்கற்கள் (Asteroids and Meteoroids) தோன்றி அவைகளும் இப்பரந்த விண்வெளியில் சுற்றித் திரிகின்றன.

பெரிய கற்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் அவைகள் வெடித்துச்சிதறி புதிய புதிய கற்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. அவைகள் அவ்வபோது பூமி, சந்திரன் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு இவைகளின் மீது மோதுகின்றன.
பூமி உருவான காலகட்டத்தில் பூமியின் மீது தொடர்ச்சியாக விண்கல்மாரிகள் பொழிந்தவண்ணமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தை (Bombardment Period) என்று கூறுவர். விழுந்த கற்களில் பல்வேறு தாதுப்பொருட்கள் இருந்தது. இவ்வாறு விண்ணிலிருந்து வந்த விண்கற்கள் மூலமாக கிடைத்ததே இந்த பூமியிலுள்ள இரும்புகள் அனைத்தும் என்கின்றனர் வல்லுனர்கள்.

Bombardment Period
தற்போது அவ்வபோது இந்த மாதிரி விண்ணிலிருந்து விண்கற்கள் மூலமாக இரும்புகள் பூமியை நோக்கி வந்தவண்ணம் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள் இதற்கு ஆதாரமாக 1947 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்த விண்கல்லை (Meteorite) காட்டுகின்றனர். இக்கல்லில் நான்கு சதவிகிதம் நிக்கல் என்ற பொருளும் ஏனைய பெரும்பகுதி இரும்பாகவும் இருந்ததாகக் கூறுகின்றனர்.

பூமியில் காணப்படும் இரும்புகள் அனைத்தும் பூமியில் தாமாகவே உருவாகவில்லை! மாறாக வானத்தில் வேறு எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்தது என்பது தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும்.


ஆனால் இந்தப் பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துலகங்களைப் படைத்த அந்த இறைவன் உலக மாந்தர்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டிட அவன் இறக்கியருளிய அவனுடைய சத்தியத் திருவேதத்திலே இதைக் குறித்து குறிப்பிட்டு மக்கள் சித்தித்து தெளிபெறுமாறு அறிவுறுத்துகிறான்.

Iron Ingot
அல்லாஹ் கூறுகிறான்: -
“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் இறக்கினோம். அதில் கடும் அபாயம் இருக்கிறது; எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன – (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்” (அல்குர்ஆன்: 57:25)

கைவிரல் ரேகையின் முக்கியத்துவம் குறித்து அல்-குர்ஆன்!


கைவிரல் ரேகையின் முக்கியத்துவத்தையும் அதனை பதிவு செய்யும் முறையையும் கி.பி. 1880-ல் முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸர் பிரான்சிஸ் கோல்டு என்பவர் தான்.

இவர் கூறுகிறார்” ‘பத்து இலட்சம் நபர்களை எடுத்துக் கொண்டால் அதில் இருவரின் கைவிரல் ரேகைகள்கூட ஒன்று போல இருக்காது’ என்றார். அதனாலேயே இன்று மனிதர்கள் அடையாளத்திற்காகவும், துப்பு துலக்கப்படுவதற்காகவும் இந்த கைவிரல் ரேகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த கை ரேகையைப் பற்றி அல்லாஹ்வின் அருள்மறை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சிலாகித்துக் கூறியிருக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான்: –
“மரித்து (உக்கிப்போன) மனிதனின் எழும்புகளைநாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அல்ல, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்” (அல்குர்ஆன்: 75:3-4)
மனிதன் இறந்து மக்கி மண்ணாகிப் போனபின், அவனை உயிர்ப்பிப்பதோடு, அவனின் கைவிரல் ரேகையைக்கூட இறைவன் செவ்வையாக உருவாக்குவான் என்று கூறுவதன் மூலம் கைவிரல் ரேகையின் இன்றைய அதிமுக்கியத்துவத்தை அன்றே பறைசாற்றி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 

இவ்வளவு நுணுக்கமான ரேகைகளை உடைய கையின் “நுனி விரல்களையும் செவ்வையாக உருவாக்குவான்” என்று தன்னுடைய திருமறையில் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருப்பதும் திருமறை தெய்வீக மறை என்பதற்கு அத்தாட்சியாக விளங்குகின்றது.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது!

சிறிது காலத்திற்கு முன்புவரை நமது உடலில் வலியுணர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மூளையே என்று விஞ்ஞானிகள் எண்ணிக் கொண்டிருந்தனர்.. ஆனால் சமீபத்தில் தான் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மனித தோல்களை ஆராய்ந்ததில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு மண்டலங்கள் (Pain Receptors) தோல்களிலேயே இருக்கின்றன என்று நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தோல்களில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் இந்த நரம்பு மண்டலங்கள் தீக்காயங்களினால் கருகிவிட்டால் (Third degree burn) நமக்கு எந்த ஒரு வலியுணர்ச்சியும் (வேதனை-Pain) ஏற்படுவதில்லை.
இத்தனை அறிவியல் நுணுக்கம் வாய்ந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சத்தியத்திருமறை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது நம்மை மட்டுமல்லாது இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் வியப்புக்குள்ளாக்குகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: -
“யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 4:56)

டாக்டர் டிகாடட் தேஜாஸன் (Dr Tigatat Tejasen) என்பவர் தாய்லாந்தில் உள்ள ஸியாங்மா பல்கலைகழக (Shangma University. Thailand) உடற்கூறு துறையின் பேராசிரியர் ஆவார். அவர் ஒருமுறை சவுதி அரேபியாவிற்கு வந்தபோது அவரிடம் மேற்கூறப்பட்ட திருமறை வசனம் கொடுக்கப்பட்டது. இவர் ஆரம்பத்தில் இத்திருமறை வசனத்தை மறுத்தார். ஏனென்றால் இந்த உண்மை சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருளப்பட்ட திருமறையில் அவ்வசனம் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று வாதிட்டார்.தோல்களில் இருக்கும் வலியுணர்ச்சியின் நரம்புகள்!
அவரிடம் மேலும் சில அறிவியல் நுணுக்கம் வாய்ந்த வசனங்களை சுட்டிக் காட்டியதும் அவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்யத் துவங்கினார். தன்னுடைய நீண்டகால ஆய்விற்குப்பின் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த எட்டாவது மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறினார்:-

‘1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் கூறப்பட்டது அனைத்தும் உண்மையாகும். அவற்றை தற்கால அறிவியலின் மூலம் நிரூபிக்கக் கூட முடியும். படைப்பாளனான இறைவன் அருளிய இச்செய்தியை தெரிவித்தவர் எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள். எனவே நிச்சயமாக அவர் இறைவனின் தூதராவார்கள். ஆகவே, நான் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்’ என்பதைக்கூற இதுவே சரியான நேரம் என்பதை உணர்கின்றேன்’ என்று கூறி இஸ்லாத்தை தழுவினார்.

கடல்கள் இடையே உள்ள திரைகள்

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)
    அரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும். இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. ‘மரஜா’ எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.
Post image for கடல்கள் இடையே உள்ள திரைகள்
    இன்றைய நவீன அறிவியல் இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது.
    ஆனால், ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சி உறுதி செய்துள்ளார்.
மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றது.
وَهُوَالَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هَذَاعَذْبٌ فُرَاتٌ وَّهَذَامِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًامَّحْجُوْرًا
    அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)
நதி முகத்துவாரங்களில், அதாவது இரண்டு நதிகள் சந்திக்கும் இடங்களில் உப்பு நீரிலிருந்து சுவைமிகு நீரை தனியாகப் பிரித்து அடையாளம் காட்டும் ஒரு திரை அல்லது மண்டலம் (Pycnocline Zone) உள்ளது. (இம்மண்டலத்தையே திருக்குர்ஆன் திருக்குர்ஆன் ஹிஜ்ரம் மஹ்ஜூரா என்று குறிப்பிடுகின்றது.) இப்பிரிவினை மண்டலம் சுவை நீரிலிருந்தும், உப்பு நீரிலிருந்த்தும் வித்தியாசமான அளவு உப்புத்தன்மை கொண்டுள்ளது.
இந்த இயற்கை நிகழ்வு கடலின் பல்வேறு இடங்களில் ஏற்படுகின்றது. மத்தியத்தரைக்கடலுக்குள் ஓடி மறையும் எகிப்தின் நைல் நதியிலும்

விரிவடையும் பிரபஞ்சம்


“மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்” (51:47)
நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.

Post image for விரிவடையும் பிரபஞ்சம்

நம் விழிகளில் வியப்பை தேக்கி வைக்கும் இந்த அழகிய விண்மீன் கூட்டங்கள் எந்தவித ஒழுங்கமைப்பும் , கட்டுப்கோப்பும் இன்றி வானில் சிதறிக் கிடப்பதில்லை. அவை கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, கீழ்படிந்து இயங்கி வருகின்றன.
    எல்லையில்லாமல் அகண்டு விரிந்துக் கிடக்கும் இந்த அண்டவெளி வெற்றிடத்தில், நட்சத்திரங்கள் ஒரு  குழுவாக  வாழ்ந்து வருகின்றன. சிறிய, பெரிய  குழுக்கள் பலவற்றை  உள்ளடக்கி  இருக்கும் இந்த விண்மீன்  குழுக்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு தொடர்புக் கொண்டவை. ஒன்று மற்றொன்றை தன்பால் ஈர்த்துக் கொண்டும், மற்றவற்றால் ஈர்க்கப்பட்டும், இணங்கி இணைந்து இயங்குகின்றன.
    “………the total number of stars in the universe is probably something like the total number of grains of sand on all the seashores of the world. Such is the littleness of our home in space when measured up against the total substance of the universe.”     “உலகில் உள்ள எல்லா கடற்கரைகளிலும் எவ்வளவு மணற் துகள்கள் நிறைந்து உள்ளனவோ, அதைப் போன்றதொரு தொகை கொண்டதாகவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் யாவும் திகழ்கின்றன.
    இப்பேரண்டத்தில் பொதிந்துக் கிடக்கும் பொருட்கள் அனைத்துடனும் நாம் நமது புவி எனும் வீட்டை கொஞ்சம் அளந்து பார்ப்போமெனில், அது இந்த வின்வெளியில் ஓர் அற்பத் தூசாகவே காட்சி தரும்.” ஒரு Galaxy யில் மட்டும் 10,000 கோடி  நட்சத்திரங்கள் உள்ளதாம். நாம் ஆகாயத்தில் காணும் விண்மீன் கூட்டத்தை  பால்வீதி Milky Way என்கின்றனர். இந்த 10,000 கோடி நட்சத்திரங்களில் மின்னி மிளிரும் ஒரு நட்சத்திரம் தான் நமது  சூரியன். Miky Way, Galaxy அடுத்துள்ள கேலக்ஸிக்கு  பெயர் அண்ரோமிடா கேலக்ஸி என்று பெயர். இந்த கேலக்ஸியில் மட்டும் 40,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன.
    ஒரு விண்மீன் குழுவில் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளது போல் இந்த பேரண்டத்தில் 10,000 கோடி Galaxy கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நட்சத்திரக் கூட்டங்கள் ஒன்றை விட்டு மற்றொன்று எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தில் ஓடுகின்றன.
سَنُرِيْهِمْ اَيَتِنَافِىالآْفَاقِ وَفيِْ اَنْفُسِهمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقَُّ اَوَلَمْ يَكْفِ بِربِّكَ اَنَّهُ عَلَىَكُلِّ شَيْءٍ شَهِيْدٌ “நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை பிரபஞ்சத்தின் பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்கு காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?” (41:53)
    வியப்பும் மலைப்பும்   தோன்ற  விரிந்து  காணப்படும் இந்த அற்புதமான பேரண்டத்தை  அளித்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதை  இன்றைய அறிவியல் தெளிவாக்குகின்றன.

உலக இறுதி நாள் (கியாமத்)!


உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது :- உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்' என்று விஞஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது...

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)

பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)

வானம் பிளந்து விடும்போது (84:1)

வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4)

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)


இவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது...

''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்'' என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)

உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425 வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

இதோ அம்முன்னிவிப்புகளில் ஒருசில...

'காலம் சுருங்கி விடும்' எந்தளவுக்கென்றால் 'ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது'' (முஸ்லிம் -157)

விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்;தான் அப்போது நல்லவன். (புஹாரி 5577, 5580) (மும்பையில் மட்டும் 12000க்கும் மேற்பட்ட விபச்சார விடுதிகள் உள்ளன)

தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும். (இப்னுமாஜா)

(இந்த நவீன யுகத்தில் ''எயிட்ஸ்'' என்ற உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டதை பார்க்கிறோம்.)

ஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்''. (புஹாரி : 5581, 5231)

என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)

அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)

(இந்த இழிவான நிலையை குக்கிராமங்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.)

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)

சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)

காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)

எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்) (ஒரு கோப்பை தேநீருக்கெல்லாம் கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்)

முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)

பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)

பருவ மழைக்காலம் பொய்க்கும்.

திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும்.

முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.

பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள்.
 (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ''இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்''. (நகரங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் அதனால் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாவதையும் நாம் காண்கிறோம்.)

வியாபாரமுறைகள் மாறும் (புகாரி)

(இன்டெர்நெட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் புதிய விதங்களில் வியாபார முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறோம்.)

பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்)

ஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.(முஸ்லிம்)

திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி)

சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.

ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்)

சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.

பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.

சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.

பொருளாதார வள்ச்சி அதிகமாகும்.
 (புகாரி : 7121,1036,1424)

பொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி)


உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும். (புகாரி :7068)

அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)

முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.

பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும். 
(அபூதாவூத்)

 
முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி:
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319, 3456)

(சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை, கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல் மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.)


எனவே சகோதர சகோதரிகளே! நாம் செய்ய வேண்டியது என்ன?


மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ''இஸ்லாம்'' இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது ஈமான் (நம்பிக்கை) அதிகமாக வேண்டும்.

விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.

நேர்வட்டி, ஏலச்சீட்டு, பிக்சட் டெபாசிட், எல்.ஐ.சி போன்ற அனைத்து வகை ஹராமான வட்டிகளைவிட்டும் முற்றிலும் ஒதுங்க வேண்டும்.

மது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும்.

அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது, பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும்.

இறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும், அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது, செய்வினைகளை நம்புவது, குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்) என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூடபழக்கவழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப் பட்டிருக்கின்றோம்? நமது இலட்சியம் என்ன? என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக!

இன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ''இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலைiயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து சிந்தித்து அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ''இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்'' என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக!

நமது வாழ்க்கை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்!

நமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்!!


இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)
சிந்திப்போம்!! ஈருலக வெற்றியினைப் பெறுவோம்!!!.

சாக்கடல் (Dead Sea) ஏன் அதிசயங்கள் நிறைந்துள்ளது


ஜோர்டான், பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஓடும் சரித்திர புகழ் 
பெற்ற சாக்கடல் (Dead sea) சுமார் 1,20,000 ஆண்டுகளுக்கு முன் வற்றி காணாமல் போய் விட்டது.சாக்கடல் ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு நடுவே நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டதாக அமைந்துள்ளது.  ஜோர்டான் நதி இக் கடலில் வந்து கலக்கிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பாசனத்துக்காகவும் குடி நீர் தேவைக்காகவும் நதி மீது இஸ்ரேலும் ஜோர்டானும் பல அணைத் திட்டங்களை மேற்கொண்டன. ஆகவே ஜோர்டான் நதி மூலம் சாக்கடலுக்கு வருகின்ற நீரின் அளவு குறைந்து போய் விட்டது. ஆகவே சாக்கடல் சுருங்கி வருகிறது. 


சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது?

சாதாரண கடல் நீரை விடஇங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது.

பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது.
சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் இல்லாத கடல் என்றுதானே நாம் நினைப்போம்? அது தவறு. உப்பை உணவாகக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் சாக்கடலில் நல்லபடியாக வாழ்கின்றன.

ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம்,ட்யூனாலைலா எனும் நுண் உயிரிகளை உதாரணமாகச் சொல்லலாம். இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை, தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து, அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்துகொள்கின்றன. அது மட்டுமன்றி சாக்கடலுக்கு அடியில் நீரூற்றுகள் உள்ளன.

நீரில் மிதக்க வேண்டுமானால் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். அல்லது உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் இல்லையென்றால் ஏதாவது அதிசயங்களை நிகழ்த்த வேண்டும். இவை எதுவும் இல்லாமல் நீரில் மிதப்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். பார்ப்பதற்கு கடல் போல காட்சி அளிக்கும், ஆனால் உண்மையில் கடல் இல்லை… தண்ணீர் தான் ஆனால் குதிப்பவர்கள் நீருக்குள் மூழ்கமாட்டார்கள்.. இதுதான் Dead Sea என்று அழைக்கப்படும் சாக்கடலின் சிறப்பம்சம்.



இஸ்லாம் கூறும்  சான்று..

லூத் அலைஹி வஸ்ஸலாம் ...
இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் சகோதரனின் மகன் லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கனை பாலஸ்தீன நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அல்லாஹ் நபியாக அனுப்பினான். அதில் சதோம் என்பது முக்கியமான நகரமாகும். ஓரின புனர்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த தன் சமுதாயத்தினரிடம் அந்த மானக்கேடான செயலை விட்டுவிடுமாறு லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அச்சமுகத்தினர் அத்தீயசெயலை மிகவும் பகிரங்கமாக செய்து வந்தனர். இதைப்பற்றி குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.

“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்றாஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.

இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.

நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கோண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.

(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம். அல்குர்ஆன் 29:30-35



இதன்  குணாதிசியம்..

உலகிலேயே பள்ளமான பகுதி இதுவாகும். கடல் மட்டத்தில் 378 மீட்டர் (1340 அடி) ஆழமானது. இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லையில் மத்திய தரைக்கடலோடு சேர்ந்திருக்கும் நீர்ப்பரப்புதான் சாக்கடல். உண்மையில் இது ஒரு கடல் கிடையாது, உப்பு நீர் நிறைந்த பெரிய ஏரி. சுமார் 67 கிலோமீட்டர் நீளமும், 18 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த சாக்கடலில் உப்பின் அளவு மிகுதியாக காணப்படுகிறது.

சாதாரண கடல் நீரை விட 8.6 மடங்கு அதிகமாக இருப்பதால் இந்தக் கடலில் நாம் நீச்சல் அடிகாமலேயே மிதக்க முடியும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சாக்கடலில் மிதந்து கொண்டே புத்தகங்களும், செய்தித்தாள்களும் படிக்கும் காட்சியை அடிக்கடி காணலாம்.

இந்த சாக்கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன.இவை ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளாக மம்மிக்கள் கெட்டுப் போகாமல் இருக்க காரணம் சாக்கடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகைப் பொருள்கள்தான். சாக்கடல் நீரை இரண்டு முழுங்கு குடிக்க நேர்ந்தால் குரல் வளைப் பகுதி வீக்கம் கண்டுவிடும். அதனால் மூச்சு விட முடியாமல் போகலாம். சாக்கடல் நீர் கண்களில் பட்டால் பார்வை பறி போகின்ற ஆபத்து உண்டு.



மருத்துவ ஆய்வு :

இத்தனை பெருமை கொண்ட சாக்கடலின் முக்கிய நீர் ஆதாரமான ஜார்டன் நதி நீரின் அளவு தற்போது குறைந்து கொண்டே வருவதால் இந்தக் கடலின் பரப்பு குறைந்து கொண்டு வருகிறது என்பதுதான் கவலையளிக்கும் செய்தி. ஜோர்டானிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன.

கடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது. நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது என்று இந்தக்குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   சாக்கடலில் (Dead Sea) ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடியாது. அக்கடலில் விழுபவர் மிதப்பார். நீங்கள் அக் கடலில் மிதந்தபடி பேப்பர் படிக்க முடியும். உணமையில் அது சாகமுடியாத கடல். 

உலகில் மிக கீழ் மட்டத்தில் உள்ள இக்கடல் வெறும் 425 மீட்டர்களே கடல் அளவை விட உயரமான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக உப்பு தன்மையுள்ள இக்கடல் 1,20,000 ஆண்டுகளுக்கு முன் வற்றி போன போதும் திரும்ப வந்தது போல் இம்முறை வற்றினால் சுத்தமான நீர் முற்றிலுமாக தடுக்கப்பட்டு விட்டதால் இது இறந்து விடும் அபாயம் உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.

சாக்கடல் நீரிலும் சேற்றிலும் கலந்துள்ள மருத்துவகுணங்கள் தோல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இச்சேறு சொரியாசிஸ் உட்பட சில தோல் கோளாறுகளைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதற்காகவே ஏராளமான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக் கொள்கின்றனர். இதனாலேயே சாக்கடலுக்கு the lowest health spa மற்றும் நேச்சுரல் ஸ்பா (natural spa) என்ற பெயரும் உண்டு. உலகிலேயே மிக தாழ்வான பகுதி என்ற மற்றொரு சிறப்பும் சாக்கடலுக்கு உண்டு.

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை.

சிந்தனையில் மோரிஸ் புகை!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகை. பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)

இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.


பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகை சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்ற குர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகை அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக் காட்டினார். அவ்வசனம்

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" 

(அல்-குர்ஆன் 10: 92)


இவ்வசனம் மோரிஸ் புகை அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார்களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார்! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!

கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!

”நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (அல்-குர்ஆன் 10:92)

ஃபிர்அவ்னின் உடல் குறித்த வீடியோ ஆதாரம்.....


அளவில் சிறியது மூளை, ஆனால் ஆற்றலில்...!

ஒரு சராசரி மனிதனுடைய மூளையின் எடை 1300g முதல் 1400g வரை ஆகும் .
இது யானையின் மூளையின் ஏடையை விட மிக அதிகமானதாகும். யானையின் மூளையின் எடை 800g.
நமது உடம்பு முழுவதும் உள்ள மொத்த ஆக்சிஜனில் 20% ஐ மூளை தனது தேவைக்கு எடுத்து கொள்கிறது.
மூளையில் மொத்தம் 100 பில்லியன் நியுரோன்கள் உள்ளன. இது பூமியிலுள்ள மொத்த மக்கள் தொகையைப் போல் 166 மடங்கிலும் அதிகமானது.
மூளையின் நான்கில் மூன்று பங்கு முழுவதும் நீரால்நிரப்பப்பட்டுள்ளது.
நமது மூளைக்கு உலகிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விட அதிக அளவு எண்ணங்களை சேமித்து வைக்கும் ஆற்றல் உள்ளது.
மனித மூளை 25 watts அளவு சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது. இது ஒரு குமிழ் விளக்கை (Light Bulb) பிரகாசமாக ஒளிரச் செய்ய போதுமானதாகும்.
நமது மூளை 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இடது மூளை உடலின் வலது பக்கத்தினையும் வலது மூளை உடலின் இடது பக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது.
ஆனால் வலது மூளையை விட இடது மூளை 186 million நியுரோன்களை மேலதிகமாக கொண்டுள்ளது.
ஆக்சிஜன் இல்லாமல் மூளை நான்கு முதல் ஆறு நிமிடம் வரை உயிர்வாழும். அதன் பிறகு செல்கள் இறக்கத்தொடங்கிவிடும்.
மூளையின் மிகக் குறைந்த வேகம் 416 km/hour அல்லது 260 mph.இது நவீனயுகத்தின் “Super Car” களினால் அடைய கூடியமிகக்கூடிய வேகமாகும்.
மூளையின் எடை உடலின் எடையில் வெறும் 2% மட்டுமே,ஆனால் உடலின்மொத்த சக்தியில் 20% ஐ தனது தேவைக்கு எடுத்து கொள்ளுகின்றது.
மூளையானது பகலில் சிந்திக்கும் திறனை விட இரவில்சிந்திக்கும் திறன்கூடியது. இதனால் தான் நாம் இரவில் நித்திரைக்கு செல்லும் முன் படிப்பது அதிக நாட்கள் மனதில் நிற்கின்றது.
அளவில் சிறியதும் ஆற்றலில் பெரியதுமான மூளையைப் போல் இயங்கக் கூடிய கணினியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஐபிஎம் நிறுவனம். ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை தயாரித்துள்ளது.
இக்கணினி உருவாக்க பயன்படுத்தப்பட்ட CPU with Processor மொத்தம் 1,47,456 மற்றும் அதன் நினைவகம் 144 Terabyte (1Terabyte(TB) = 1024 GB)) நாம் பயன்படுத்தும் கணினியை விட இலட்சம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.
SCinet_8840SCinet_8836
ஆனால் பல ஆண்டு ஆராச்சிக்கு பிறகு பல கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.(?) பூனையின் மூளையை விட 100 மடங்கு குறைந்த அளவே செயல்படக் கூடியது.
படத்தை பார்த்தால் இந்த கம்யூட்டரை வைப்பதற்கு எத்தன க்ரவுண்ட் இடத்தை தேவையோ தெரியவில்லை?

மூளை  என்பது நூறு  கோடி நியூரான்  மற்றும் அதை இணைக் கூடிய ஆயிரம் கோடி நரம்பு முனைகளையும் உள்ளடக்கியது . இது எவ்வாறு இயங்குகிறது என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து கொண்டே தான் இருக்கின்றது.  ஆனால் இவ்வளுவு சிறிய  அளவில் மிகப் பெயரிய ஆற்றல் கொண்ட  மூளை ஆராய்ச்சியாளர்களுக்கு இது புரியாத புதிராகவே உள்ளது!

தாடி வைத்தல்

இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும்
குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக
நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன
வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு
நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து
கொள்கின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில்
உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்,
தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். அறிவிப்பவர்: உமர்
(ரழி) , ஆதாரம்: புஹாரி 5892
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட
கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு
வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),
ஆதாரம்: முஸ்லிம் 435

மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப்
பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு
வடிவங்களில் தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள
முடிகிறது.
அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.
வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம்
படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம்
எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27)
ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வன்னம் அல்லாஹ்
படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த
அர்த்தமும் இல்லை. தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால்
இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத
வன்னம் படைத்திருப்பான்.
தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை
வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம்
செய்கின்றன.
விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின்
படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம் பெண்கள் மத்தியில்
கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள்,
தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை
உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர்
Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 – 25 வயதெல்லையுடைய எட்டு
இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு
ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார்.
1.முழு தாடியுடன்
2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்
3. மீசையுடன்
4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)
ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32
புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண்
மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை
மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம்
மதிப்பிடப்பட்டது.
Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில்
அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும்,அழகிய
தோற்றமுடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க
வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும்,
பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும்,
கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும்.
தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.
மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு
சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின்
சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள
வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால்
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான
வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால்
sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து
பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும்
அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக்
கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes என்பவரின் கருத்து.
இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி
வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும்
போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி
கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது
என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது.
நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து
பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம்
மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய
காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள்.
உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும்
பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து
விலகி நடக்கின்றனர்”.
முஸ்லிம்கள் ஏன் தாடி வளர்ப்பதில் பின்வாங்குகின்றனர்?
அநேக முஸ்லிம் சகோதரர்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும்
அவர்களின் மனைவிமார்களுக்காக வேண்டி தாடியை மழிக்கும் நிலையை
காணக்கூடியதாகவுள்ளது. இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் தங்கள்
கணவர்கள் தாடி வளர்ப்பதை இழிவாகக் கருதுகின்றனர். மீசையை ஒட்ட கத்தரித்து
தாடியை வளர்ப்பது இறைத் தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சிறந்த
காரியம் என்பதை இப் பெண்கள் மறந்து விட்டனர். தாடி வைக்காத
கணவர்களுக்கும் தாடியின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும்
எடுத்துக்கூறி கணவர்களுக்கு தாடி வைக்க ஊக்குவிக்கக்கூடியவர்களாக பெண்கள்
இருக்க வேண்டும்.
மேலும், ஊடகங்களும் தாடி வைத்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக்
காட்டுவதால் இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் கூட
தாடி வைப்பதில் பயந்த நிலையில் உள்ளனர்.
மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாடி வளர்ப்பதை வலியுறுத்தியது
மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அழகாகவும், மற்றவர்கள் விரும்பும் வன்னம்
வைக்க வேண்டும் எனவும் காட்டித் தந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும்
(முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச்
சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
ஆதாரம்: புஹாரி 5899
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு
அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி
வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை
அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது.
ஆதாரம்: புஹாரி 5923
நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள்
ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக்
கொள்கின்றனர். அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை
முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது. அநேக சந்தர்ப்பங்களில்
அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாதுள்ளது. இத்தகைய
நிலையில் ஆண்கள் தாடி வைப்பதானது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக்
காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக்
கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை
முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக!

மண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்

Post image for மண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்
அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்சத்தை படைத்தது வெறும் வீண் விளையாட்டு வேடிக்கைக்காக அல்ல.தக்க காரணத்துக்காகவே அன்றி வேறில்லை,என்று பல வசனங்களில் குறிப்பிடுகிறான். வானம், பூமி,சூரியன்,சந்திரன் கோள்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் காரண காரியங்களுடன் படைப்பினங்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,

“இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன. நிச்சயமாக இதிலும் ஆய்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.”
-அல்குர்ஆன்.16:12.

நட்சத்திரங்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்,
 “அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக்கொண்டு நீங்கள் தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழி அறிந்து செல்கிறீர்கள் – அறியக்கூடிய மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.” -அல்குர்ஆன்.6:97.
நட்சத்திரங்களை படைத்ததின் ஒரு நோக்கம் இருளில் பயணிப்பவர்கள் வழி அறிந்து கொள்வதற்காக. இருள் சூழ்ந்த இரவுகளில் பயணிப்பதற்கு வழி காட்டியாக ஆதி காலத்திலிருந்தே நட்சத்திரங்கள் திசையை வைத்து பயணப்பாதையை மனிதன் அறிந்து கொள்கிறான். குறிப்பாக நான்கு பக்கமும் நீர் சூழ்ந்த கடற்பயணத்தில் அவனுக்கு இரவில் வழி காட்டுவது விண்மீன் விளக்குகளே!
பல கோடிக்கணக்கான நட்சத்திரங்களை வானில் பரப்பி அல்லாஹ் பார்ப்பவர்களுக்கு அலங்காரமாக்கி உள்ளான்.சுமார் 6000 நட்சத்திரங்கள் நம் கண்களால் அடையாளம் காண முடியும். நன்கு பிரகாசமுள்ள 58 நட்சத்திரங்கள் இருப்பிடத்தை அடையாளமாக வைத்து கடலில் மாலுமிகள் கப்பலை செலுத்துகின்றனர். இதனை “Celestial Navigation” என்று அழைக்கிறார்கள்.
இன்றும் அமெரிக்காவில் வருடந்தோறும், வானில் நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தை அட்டவணைப்படுத்தி “Nautical Almanac” என்ற பெயரிலும் இங்கிலாந்தில் “Her Majesty’s Nautical Almanac Office” என்ற வழிகாட்டும் விண்மீன் பஞ்சாங்கத்தை வெளியிடுகிறார்கள். நிலம்,நீர்,ஆகாயம் இம்மூன்றிலும் பயணம் செய்யும் மனிதர்களுக்கு இந்நட்சத்திர வழி காட்டி பெரிதும் பயன்படுகிறது.
இன்றைய நவீன அறிவியலில் வழி அறிவதற்கு GPS போன்ற பல நுட்பமான சாதனங்களை மனிதன் பயன்படுத்தினாலும்,இன்றும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் கப்பல்,விமானப்படைகளில் பயிற்சி பெரும் பைலட்,மற்றும் மாலுமிகள் அடிப்படை நட்சத்திர வழிகாட்டும் (Celestial Navigation Test) தேர்வில் வெற்றி பெறாமல் பணியில் சேரமுடியாது.
Global Positioning System –GPS என்னும் செயற்கைக்கோள் வழி காட்டி சாதனம் எந்நிலையிலும் பழுதாகக்கூடும். அவசர காலங்களில் பயன் தருவது விண்மீன்கள் வழி காட்டுதலே. கடந்த காலங்களில் மனிதனின் பயணம் நீரிலும் நிலத்திலும் மட்டுமே நடந்தது. நவீன மனிதன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் பயணம் செய்கின்றான்.
தரைப்பயணிகளுக்கும் கடல் பயணிகளுக்கும் பகலில் நமது சூரிய நட்சத்திரமும் இரவில் பிரபலமான துருவ நட்சத்திரமும் (Polaris-North Star) வழி காட்டின. இவை இரு பரிமாண பயணம் (2 Dimensional Space) அதாவது இடது/வலது,அல்லது முன்னால்/பின்னால் மட்டுமே செல்லக்கூடியவை. மண்ணிலிருந்து மேலெழும்பி உயரே விண்ணை தாண்டிச்செல்லும் ராக்கெட் விண்வெளி பயணம் முப்பரிமாணத்தில் (3 Dimensional Space) அமைந்துள்ளது.
1400  ஆண்டுகளுக்கு முன்பு பாலை வனத்தில் ஒட்டகத்தில் பயணம் செய்த மனிதர்கள் மத்தியில் இறங்கியதே அல் குர்ஆன் வசனங்கள். மனிதன் விண்ணில் பயணம் செய்வான், சந்திரனில் இறங்குவான் என்று எவரும் கற்பனை கூட செய்திராத காலத்தில் விண்வெளி பயணத்தை பற்றி குர்ஆன் பேசுகிறது. முன்னறிவிக்கிறது ஆர்வமூட்டுகிறது.
“மனித,ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்று விட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும் மிகப்பெரும் பலத்தைகொண்டே தவிர நீங்கள் செல்லமுடியாது.” -அல்குர்ஆன்.55:33.
ஆம்! இன்று வானம்,பூமியின் எல்லையை தாண்டிச்செல்லும் பலத்தை மனிதன் பெற்று விட்டான். பூமியின் ஈர்ப்பு சக்தியை மீறிச் செல்வதற்கு 1 வினாடியில் 11 கி.மீ.வேகம் செல்லக்கூடிய உந்து சக்தி (ராக்கெட்) ஆற்றலை மனிதன் பெற்றுவிட்டான். வானத்தில் வழி அறிவது எப்படி?
விண்வெளி வீரர்களுக்கு வழி காட்டுவது யார்? ஆதி மனிதனுக்கு வழி காட்டிய அல்லாஹ் படைத்த நட்சத்திரங்கள்தான் விண்வெளி வீரர்களுக்கும் வழி காட்டுகின்றன. சந்திரனில் காலடி வைத்த அப்போலோ பயணத்திலும் (Apollo Mission) நட்சத்திரத்தை அடையாளமாக வைத்தே (Celestial Navigation) வழி அறிந்தனர்.
விண்வெளி ராக்கெட்டின் முன்பகுதியில் (Star Tracker) “விண்மீன் காட்டி” எனும் கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதிலுள்ள கேமரா, தொலை தூர நட்சத்திரங்களை நிலையாக நோக்கியவாறு இருக்கும் (Fixed Reference Point) இரு நட்சத்திரத்தின் திசை,தூரம் இவைகளை கணக்கிட்டு ராக்கெட் செல்லும் திசையையும், பூமியிலிருந்து இருக்கும் உயரத்தையும் அறிந்து கொள்வார்கள். இதில் உள்ள கம்ப்யூட்டரில் 50 நட்சத்திரங்களின் அமைவிடம் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவைகளை வழி காட்டியாகக் கொண்டு விண்வெளி ஓடம் பயணிக்கும்.
பூமியிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் செல்லும் அமெரிக்காவின் “TRIDENT” ஏவுகணைகளும் ஒரு நட்சத்திரத்தை நிலையான அடையாளமாக வைத்தே செயல்படுகின்றன. அமெரிக்காவின் அதிவேக உளவு விமானமான SR-71, 11 நட்சத்திரங்களை (பகலிலும்) வழிகாட்டியாக வைத்தே பறக்கின்றன. ரஷ்யாவின் நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் இரண்டு நட்சத்திரங்களை வழிகாட்டியாகக்கொண்டே இலக்கை அடைகிறது.
ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையை (Theory of Relativity) அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய 2004 ஏப்ரல் 4 ல் Gravity Probe-B என்னும் செயற்கைகோளை நாஸா ஏவியது. இது பூமியிலிருந்து 400 மைல் உயரத்தில் GYROSCOPE  கருவி உதவியுடன் IM-Pegasi என்னும் ( HR 8703) நட்சத்திரத்தை நிலையான அடையாளமாக வைத்து பூமியின் சுழற்சியை ஆய்வு செய்து சார்பியல் கொள்கையை நிரூபித்தது.
விண்வெளியில் பறந்து கொண்டே பிரபஞ்சத்தை ஆய்வு செய்யும் ஹப்பிள் தொலை நோக்கி, (Hubble Space Telescope-HST) தொலைதூர விண்மீன் கூட்டங்களை புகைப்படம் எடுக்க இரண்டு கைடு நட்சத்திரங்களை (Guide Stars) வைத்து தன்னை நிலைப்படுத்திக்கொள்கிறது. இதன் கம்ப்யூட்டர் நினைவகத்தில் சுமார் 20 மில்லியன் விண்மீன்கள் இருப்பிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூமியிலே வசிக்கும் மனிதர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழி காட்டவில்லை.அனைத்து ஜீவராசிகளுக்கும் அல்லாஹ்வுடைய வழி காட்டுதல் உள்ளது.ஏனெனில் மற்ற உயிரினங்களும் நம்மைப்போன்ற ஒரு இனமே! அல்லாஹ்வுடைய படைப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த சங்கிலித் தொடரின் கண்ணிகளே! அல்லாஹ் கூறுகிறான்.
 “பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும்,தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப்போன்ற இனமேயன்றி வேறில்லை.”  அல்குர்ஆன்.6:38.
கடந்த ஜனவரி 24  2013 , BBC யில் வந்த ஒரு ஆய்வுச் செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மலத்தை உருட்டிச் செல்லும் வண்டு (Dung Beetle) தன் பொந்திற்கு போகும் பாதையை தொலை தூரத்தில் உள்ள பால்வீதி நட்சத்திர மண்டல (Milky way Galaxy) ஒளியின் மூலம் வழி அறிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.  
Dung beetles guided by Milky Way
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உயிரியல் ஆய்வாளர் எரிக் வாரன்ட் ஸ்வீடன் லேன்ட் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். பூச்சிகளின் சிறப்புத் தன்மைகள் குறித்து பல ஆய்வுகள் நடத்தி புகழ்பெற்றவர். இரவில் இரை தேடும் சிறு பூச்சி போன்ற உயிரினங்கள் சந்திரன்,மற்றும் நட்சத்திரங்களை வைத்து வழி அறிவதாக முன்பு கண்டறிந்தார்.
இவரது சமீபத்திய ஆய்வில் சாணத்தை தன் உணவுக்காக உருட்டிச் செல்லும் வண்டு இரவில் தொலை தூர பால் வீதி நட்சத்திர மண்டல (Milky Way Galaxy) ஒளியை வைத்து திசை அறிவதாக அறிவித்தார். செயற்கையான கோளரங்கத்தில் (Planetarium) வைத்து பல்வேறு சோதனை நடத்தியும் இவ்வண்டுகள் மிகச் சரியாக நட்சத்திர மண்டல ஒளியை பின்பற்றி நேர்கோட்டில் சாணத்தை உருட்டிச் சென்றன.
இதுபோல் சில பறவைகள்,விலங்குகள்,ரெயின்டீர் மான்கள்,கடலில் உள்ள சீல் மீன்கள் போன்றவை நட்சத்திரங்களின் ஒளியின் மூலம் தங்கள் திசைகளை வழி அறிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அல்லாஹ் கூறுகிறான்,
“ (வழி காட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.” -அல் குர்ஆன்.16:16.
                   
“(இறைவன்) ஒவ்வொரு படைப்பினங்களுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழி காட்டியிருக்கிறான்.” -அல்குர்ஆன்.20:50.