“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும்

மனிதன் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?



நாம் வாழும் பூமியை சற்று ஆராயப் புகுந்தால் பல்வேறு ஆச்சரியங்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும். இந்த பேரண்டத்தில் கோள்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோதி பிறகு ஒரு சம நிலைக்கு வந்து இன்று வரை தனது ஓட்டத்தை தொய்வின்றி செய்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் எந்த மாற்றமும் இல்லாமல் சம அளவில் சுழன்று வருகின்றன.


ஆனால் நமது பூமி மட்டும் 23.45 டிகிரி யில் சற்று சாய்வாக சுழல்வதை நாம் அறிவோம். இந்த ஒரு ஏற்பாடு மட்டும் இல்லை என்றால் நீங்களோ நானோ கணிணி முன்னால் அமர்ந்து செய்திகளை பார்த்துக் கெண்டிருக்க முடியாது. ஆம். 23.45 டிகிரி சாய்வாக சுழல்வதால்தான் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் என்று மாறி மாறி வருகிறது. இந்த சாய்வில் கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் நமது கதி அதோ கதிதான். பூமியின் சாய்வான சுழற்சியினால் காற்று வீசும்போது அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு மாற்றப்படுகிறது. பூமியின் கால நிலையை சீராக வைப்பதற்கு காற்றின் பங்கும் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சாய்வு இல்லை என்றால் இந்த பூமிப் பந்தானது குளிரில் உறைந்து விடும. அல்லது ஒரேயடியாக வெப்பம் தாக்கி புல் பூண்டுகள் இல்லாமல் கருகி விடும். உயிரினங்கள் வாழ தகுதியற்றதாக இந்த பூமிக் கோளம் மாறி விடும்.





இவ்வாறு இந்த பூமி 23.5 டிகிரி சாய்வில் சுற்றினால்தான் இங்கு மனிதர்கள் வாழ முடியும் என்று தீர்மானித்த சக்தி எது? இதற்கு முதலில் பூமியின் அடர்த்தி என்ன? சூரியனின் ஈர்ப்பு சக்தியின் அளவு என்ன? அதேபோல் புதன், சுக்கிரன், வியாழன், வெள்ளி, சனி, நிலவு போன்ற அனைத்து கோள்களின் அடர்ததி மற்றும் அவற்றின் ஈர்ப்பு தன்மை தெரிந்த ஒரு சக்தியால்தான் இத்தனை மாற்றங்களையும் நிகழ்த்த சாத்தியம் உண்டு..

இந்த ஆச்சரியமான விபரங்களை எல்லாம் பல காலம் உழைத்து அறிவியல் அறிஞர்கள் உண்மைகளை கண்டு பிடித்துள்ளனர். ஆம்....இந்த கோள்களின் சஞ்சாரம் இரவு பகல் மாறி வருவது எவ்வாறு என்று அனைத்திற்கும் காரணத்தைக் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் இவைகளை இவ்வாறு சுழல விட்ட சக்தி எது? இதற்கு என்ன அவசியம் வந்தது? என்பதை அறிவியலால் சொல்ல முடியாது. அதனை ஆன்மீகத்தால்தான் சொல்ல முடியும். இனி ஆன்மீகத்துக்குள் நுழைவோம்.

--------------------------------------------------------------------------

'இறைவன் உங்களை பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான். பின்னர் அதிலேயே உங்களை மீட்டுவான். அதிலிருந்தே உங்களை வெளியேற்றுவான்'
-குர்ஆன் 71:17,18

"பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்."
- குர்ஆன் 7;10

'உங்களுக்கு பூமியில் குறிப்பிட்ட காலம் வாழ்விடமும் வசதியும் உள்ளன.'
-குர்ஆன் 2:36

'அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.'
-குர்ஆன் 30:25


பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்து நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

https://sites.google.com/site/earthrotation 

http://www.itacanet.org/the-sun-as-a-source-of-energy/part-1-solar-astronomy/

http://www.pveducation.org/properties-of-sunlight/declination-angle

ஆழ் கடல் வழிகளில் உள்ள இருள் வெளிகள்: ஓர் அற்புதம்!


ஆழ் கடல் வழிகளில் உள்ள இருள் வெளிகள்: ஓர் அற்புதம்!

'அல்லது ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை. அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள். அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது. இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.'

-குர்ஆன்24:40

விமானத்தில் பயணிக்கும் ஒருவர் மேகத்துக்கு மேல் பறந்தால் சூரியனின் பிரகாசத்தை நன்றாக உணருவார். அதே விமானம் மேகத்துக்கு கீழே பறக்கும் போது முன்பு இருந்த சூரியனின் பிரகாசம் மட்டுப் படுவதை உணருவார். சூரியனின் கதிர்கள் மேகத்தை ஊடுருவ முடியாமல் தடுக்கப்படுவதால்தான் இத்தகைய மாற்றத்தை நம்மால் உணர முடிகிறது.




மேகங்கள் தடுப்பதால் இன்றைய நவீன அளவைகளின் தொழில் நுட்ப உதவி கொண்டு சூரியனின் ஒளிக் கதிர்கள் 30 சதவீதம் வரை கடலின் மேற்பரப்பில் பிரதிபலிப்பதாக அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். ஒளி நிற மாலைகளின் ஏழு வண்ணங்களையும் கடலின் மேற்பரப்பு கிரகித்துக் கொள்கிறது. நீல நிறத்தைத் தவிர மற்ற வண்ணங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக 200 மீட்டர் ஆழத்துக்குள் உறிஞ்சப்படுகிறது. ஆனால் அதற்கு கீழே நீங்கள் செல்ல செல்ல நீல நிறமும் மறைந்து போய் இருள்வெளிகள் சூழ ஆரம்பித்து விடுகிறது. 1000 அடி ஆழம் வரை நீங்கள் சென்றால் எந்த ஒரு ஒளியையும் உங்களால் காண முடியாது. உங்கள் கைகளை நீங்கள் பார்க்க நினைத்தாலும் உணரத்தான் முடியுமே யொழிய கண்களால் பார்க்க முடியாது.



கடலின் ஆழத்தில் இருள் வெளிகள் எவ்வாறு உருவாகின்றது என்பதை விளக்கும் படம்.



இன்று நாம் கடலின் ஆழத்தையும் அதன் தன்மையையும் வெகு சுலபமாக கண்டு பிடித்து விட முடிகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கட்டிக் கொண்டு பல நாள் கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்கிறோம். நீர் மூழ்கி கப்பல்களின் உதவி கொண்டு கடலின் ஆழத்தை ஓரளவு நம்மால் நெருங்க முடிகிறது. ஆளில்லா நீர் மூழ்கி சாதனங்களில் கேமராக்களைப் பொறுத்தி கடலின் தன்மைகளை அடர்த்தியை இப்பொழுது அறிந்து கொள்கிறோம். இது போன்ற சிறந்த உபகரணங்கள் இல்லாமல் மனிதனால் 70 மீட்டருக்கு மேல் கடலின் ஆழத்துக்கு செல்ல முடியாது. அந்த காலத்தில் முத்து குளிப்பவர்கள் இருந்துள்ளார்களே என்ற கேள்வியும் வரும. அவர்கள் எல்லாம் கடல் ஆழம் குறைந்த பகுதிகளிலேயே தங்கள் தொழிலை செய்து வந்தனர. நாமோ ஆயிரம் மீட்டர் ஆழத்தையும் அதற்கும் கீழான ஆழத்தையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இருள் வெளிகள் ஆரம்பமாகும் 200 மீட்டர் ஆழம் வரை கூட மனிதனால் எந்த உபகரணமும் இல்லாமல் பயணிக்க முடியாது. இத்தனை வசதி வாய்ப்புகளும் விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பிறகுதான் கடலின் ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களை தற்காலங்களில் கண்டறிய முடிந்தது. 





மேல் அடுக்கில் உள்ள சிகப்பு நிறம் 10 மீட்டருக்குள் கிரகிக்கப்படுகிறது. பின்னர் 50 மீட்டர் ஆழத்தில் மஞ்சள் கதிர்கள் கிரகிக்கப்படுகிறது. 100 மீட்டர் ஆழத்தில் பச்சைக் கதிர்கள் உறிஞ்சப்படுகிறது. 200 மீட்டர் ஆழம் சென்றவுடன் நீல நிறக் கதிர்களும் மறைய ஆரம்பிக்கின்றன. கடைசியில் உறிஞ்சப்படும் நிறம் ஊதாவாகையால் நமது கண்களுக்கு கடலின் மேற்பரப்பு நீலமாகத் தெரிகிறது.

அடுத்து கடலின் அடியில் ஒன்றின் மேல் ஒன்றாக அலைகள் ஏற்படுவதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். இங்கு ஏற்படும் அலைகளின் கீழ் மட்ட நீரின் அடர்த்தியும் மேல் மட்ட நீரின் அடர்த்தியும் வேறுபடுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இங்கு ஏற்படும் இந்த அலைகளையும் அதன் அடர்த்தியையும் நாம் நமது சாதாரண கண்களைக் கொண்டும் காண இயலாது. மேலும அதற்க்கான கடல்சார்ந்த படிப்பும், கடலின் உப்புத் தன்மையைப் பற்றிய அறிவும், கடல் நீரின் அடர்த்தியை விளங்கும் ஆற்றலும் இருந்தால்தான் உங்களால் சாத்தியப்படும்.



கடலின் கீழ் பரப்பும் மேல்பரப்பும் அடர்த்தியில் வெறுபடுவதை சுட்டிக்காட்டும் படம்.

படத்தில் கடல் நீரின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் உள்ள அலைகளை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. கீழ் அடுக்கு மேல் அடுக்கை விட அடர்த்தி அதிகமாக உள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். இவை எல்லாம் சமீப காலங்களில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒளியின் வேகம் வினாடிக்கு 300000 கிலோ மீட்டராகவும் நீருக்கு அடியில் அதே ஒளியின் வேகம் 225000 கிலோ மீட்டராகவும் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரை கூட சூரிய ஒளியால் ஊடுருவிச் செல்ல முடியவில்லை. 200 மீட்டர் ஆழம் வரை சன்னம் சன்னமாக குறைந்துமுடிவில் ஒளியே இல்லாமல் போக காரணம் தண்ணீரின் மேல் மட்ட கீழ்மட்ட அடர்த்தியும் அதற்கு மேல் அங்கு அலைகள் தடுப்புகளாக தடுப்பதுவுமே முக்கிய காரணம். சராசரி கடலின் ஆழமாக விஞ்ஞானிகள் குறிப்பிடுவது 3795 மீட்டராகும். கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் ஆழத்தை அன்றைய மனிதனால் கற்பனையாவது செய்து பார்த்திருக்க முடியுமா? என்பதை இங்கு நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். 

'அல்லது ஆழ் கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை. அதன் மேலே மேகம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள். அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது. இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.'

-குர்ஆன்24:40

இந்த வசனத்தை இன்னும் சற்று ஆராய்வோம்:

1.நாம் கடலின் ஆழத்துக்கு சென்றோமானால் பல அடுக்குகளை கொண்ட இருள்களை காண முடியும் என்று இந்த வசனத்தில் விளங்குகிறோம்.

ظلمات 2. என்ற அரபி வார்த்தைக்கு இருள் என்று பொருள் வரும். இங்கு இந்த வார்த்தையை இறைவன் இருள்கள் என்று பன்மையில் குறிக்கிறான். இதுவும் கூட தேர்ந்தெடுத்து போடப்பட்ட வார்த்தை. ஏனெனில் கடல் நீர் பல அடுக்குகளால் பல வேறு அடர்த்தியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த சூழ்நிலையை இருள்கள் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். 

3.அடுத்து 'அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதைக் கூட அவனால் பார்க்க முடியாது' என்று சொல்லப்படுகிறது. மேலே நாம் பார்த்த அனைத்து உபகரணங்களும், அறிவியல் அறிவும் இருந்தால் தான் இப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடியும்.

ஆனால் முகமது நபியோ கடலை பார்த்திராதவர். எழுதப் படிக்கவும் தெரியாதவர். அங்கு வாழ்ந்த சமூகத்தினரும் கூட மெத்த படித்தவர்கள் கிடையாது. இந்த நிலையில் மேற்கண்ட வசனங்களை நாம் சிந்தித்து பார்ப்போம். எப்படி இந்த மனிதரால் இது போன்ற ஒரு வார்த்தை பிரயோகத்தை உபயோகப்படுத்த முடிந்தது?

அடுத்து இது போன்ற ஒரு வார்த்தையை அவர்கள் மத்தியில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் கடலின் ஆழத்தின் இருள்களைப் பற்றி அன்றைய மக்கள் முகமது நபியிடம் கேட்கவும் இல்லை. கடலையே பார்த்திராத அந்த மக்களுக்கு இது பற்றிய அறிவும் இருந்திருக்க வாய்ப்பும் இல்லை.



'இது முன்னோர்களின் கட்டுக் கதை அதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும் மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது.' எனவும் கூறுகின்றனர்.

'வானங்களிலும் பூமியிலும் உள்ள இரகசியத்தை அறிந்தவனே அதை அருளினான்' என முஹம்மதே கூறுவீராக! அவன் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.


-குர்ஆன் 25:5,6 

Professor Rao says: "It is difficult to imagine that this type of knowledge was existing at the time around 1400 years back. Maybe some of the things they have simple ideas about such, but to describe those things in great detail is very difficult. So, this is definitely not a simple human knowledge. A normal human being cannot explain this phenomenon in that much detail. So I thought the information must have come from a supernatural source."
Yes, the source of such knowledge must be from a level beyond that of man. It cannot be from nature, as Professor Rao said, but this is far beyond nature, and far beyond human capability. What Professor Rao was trying to say is that this is something which cannot be attributed to a natural being, for it is truly the speech of the one who knows nature, the universe and its secrets, as the Qur'an tells us:
Say: The (Qur'an) was sent down by Him who knows the secrets (that is) in the heavens and the earth... (Qur'an 25:6).


Prof. Ramakrishna Rao, in "Muhammad the Prophet of Islam": 

"The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. What a dramatic succession of picturesque scenes! There is Muhammad, the Prophet. There is Muhammad, the Warrior; Muhammad, the Businessman; Muhammad, the Statesman; Muhammad, the Orator; Muhammad, the Reformer; Muhammad, the Refuge of Orphans; Muhammad, the Protector of Slaves; Muhammad, the Emancipator of Women; Muhammad, the Judge; Muhammad, the Saint. All in all these magnificent roles, in all these departments of human activities, he is alike a hero." ... Muhammad is the "Perfect model for human life."



1000 மீட்டருக்கும் 5000 மீட்டருக்கும் இடைப்பட்ட கடலின் ஆழத்தில் மிக சக்தி வாய்ந்த கேமராககளின் துணை கொண்டு எடுக்கப்பட்ட காணொளி. எங்கும இருட்டு. எதிலும் இருட்டு. ஆனாலும் அங்கும் உயிரினங்களை இறைவன் பரவ விட்டிருக்கிறான். அங்கு வாழும் உயிரினங்களுக்கு பிரத்தியேகமாக உடலிலேயே ஒளி உமிழும் தன்மையை ஏற்படுத்தியுள்ளான். படைத்தவனின் கருணையை என்னவென்பது. இது வரை நான் பார்த்திராத உயிரினங்கள்.

'அவனே இறைவன்! படைப்பவன்: உருவாக்குபவன்: வடிவமைப்பவன்'-குர்ஆன் 59:23
ஆம்! வடிவமைப்பவனிலெல்லாம் சிறந்த வடிவமைப்பவன். என்ன ஒரு நேர்த்தி: என்ன ஒரு அழகு: புகழ வார்த்தைகள் இல்லை. இந்த காணொளியைப் பார்த்தவுடன் என் வாயிலிருந்து வந்த வார்த்தைகளே இவை....

கடல் மட்டம் உயர்ந்து வருவதை மெய்ப்பிக்கும் ஆய்வறிக்கைகள்!


"பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா?"

குர்ஆன் 13:41

”பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம்” என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா?"

குர்ஆன் 21:44

(தென் கிழக்கு அமெரிக்காவில் கடல் மட்டம் உயர்ந்துள்ளதைக் காட்டும் கூகுள் மேப்.)

கடல் மட்டம் கூடுவதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. 1. முதல் காரணம்

பல ஐஸ் மலைகள் உருகி கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு செல்கிறது. கிளிமஞ்சாரோ (அதாங்க.... எந்திரன் படத்தில் வரும் அதே மலைதான் :-)) மலை கடந்த 20 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அந்த மலையின் பல இடங்களை தற்போது காணவில்லையாம். உருகி கடலில் கலந்து விட்டது. இது போன்று ஆர்டிக் அண்டார்டிக் பிரதேசங்களில் பனி மலைகள் உருகுவதால் கடல் மட்டம் தற்காலங்களில் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்னும் 10 வருடங்களில் பங்களாதேஷின் பல பகுதிகள் கடலில் மூழ்கி விடுமாம்.

2. கடல் மட்டம் உயர இரண்டாவது காரணம்

கடல் மட்டம் மேலும் உயர மற்றொரு காரணம் கடல் தண்ணீரில் ஏற்படும் வெப்ப விரிவாக்கம் ஆகும். கடல் தண்ணீரில் வெப்ப நிலை உயரும் போது அதன் அடர்த்தி குறைந்து விடுகின்றது. இதனால் கடல் தண்ணீர் பெருக்கெடுத்து நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது.

கடந்த 18000 வருடங்களில் தோராயமாகக் கணக்கெடுக்கும் போது 120 மீட்டர் கடல் மட்டமானது உயர்ந்துள்ளதாக நாசாவின் ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. ஓசோன் குறைபாடுகளால் நமது பூமி மிகப் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. நமது பூமியை சூரியனின் கதிர்கள் அளவுக்கதிகமாக தாக்கி விடாமல் தடுப்பவை இந்த ஓசோன் படலங்களே! இந்த பிரதேசத்தில் இயற்கையாக உள்ள வாயுக்களைத் தவிர்த்து பூமியிலிருந்து மனிதர்களால் கரியமில வாயுவும் அளவுக்கதிகமாக இந்த பகுதியை அடைவதால் வாயுக்களின் அடர்த்தியானது மிகைக்கிறது.. இதனால் சூரியனின் தாக்கம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகத் தொடங்குகின்றன. ஆகவே கடலின் மட்டம் உயர்ந்து கடல் நீர் நிலப்பகுதிக்குள் வருகிறது. இந்த உப்பு நீரானது பல ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களையும் கபளீகரம் செய்து விடுகின்றன. நமது பக்கத்து நாடான பங்களாதேசின் பல பகுதிகள் இன்னும் 50 ஆண்டுகளில் கடலுக்குள் அமிழ்ந்து விடும் என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். இந்த ஓசோன் பிரச்னையை தீர்க்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. வழக்கம்போல் அமெரிக்கா எந்த பிடியும் கொடுக்காமல் இந்த விஷயத்தில் நழுவிச் செல்கிறது. :-(

--------------------------------------------------

1. பூமியின் வெப்பம் 1900 ஆம் ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூமியின் வெப்பம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி வெப்பம் ஏறியுள்ளது.

2. 20 ஆம் நூற்றாண்டின் ஏழு ஆண்டுகள் வெப்பம் மிகையான காலங்களாக பதிவாகி யுள்ளன. அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் மிகுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு மிகையாகி யிருக்கிறது! கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்..

4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன! வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

6. WHO [World Health Organization] பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வறட்சி, பஞ்சம், கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்] ஆண்டுக்கு 150,000 பேர் இறந்து விடுவர் என்று எச்சரிக்கிறது.

டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and [11 Facts About Global Warming]

இனி குர்ஆன் வசனத்துக்கு வருவோம். கடலையே தனது வாழ்நாளில் பார்த்திராத நபிகள் நாயகம் இப்படி ஒரு ஆய்வறிக்கையை குர்ஆனில் தனது கற்பனையால் சமர்ப்பிக்க முடியுமா? பிற் காலங்களில் இவ்வாறான மாற்றங்களெல்லாம் உலகில் ஏற்படும் என்பதை உணர்ந்தவராலேயே இந்த வார்த்தைகளை சொல்ல முடியும். முக்காலத்தையும் உணர்ந்த இறைவனிடம் இருந்து இந்த குர்ஆன் வந்திருந்தால் மாத்திரமே இத்தகைய அதிசயங்களை நிகழ்த்த முடியும். இந்த குர்ஆன் உங்களையும் என்னையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் இனியும் நமக்கு சந்தேகம் வருமா?

வானமும் பூமியும் எவ்வாறு நிலைபெற்றுள்ளது?


நாம் வசிக்கும் இந்த பூமியும் வானமும் எவ்வாறு கீழே விழாமல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? நம் முன்னோர்களில் சிலர் இந்த பூமியையும் வானத்தையும் நிலவையும் பற்றி என்ன சொல்லி வைத்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

ஒரு புராணம் நமது பூமியை மூன்று திமிங்கிலங்கள் ஒன்றினைந்து சுமந்து கொண்டிருக்கிறது என்கிறது. மற்றொரு புராணம் ஒரு மீனின் வாலில் பூமி நிலைபடுத்தப்பட்டுள்ளது என்கிறது. வேறு சில புராணங்கள் பன்றியின் மூக்கின் மீது இந்த பூமி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறது. மேலும் சில கதைகளில் ஒரு காளையின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் பூமி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது.

பல அரிய கருத்துக்களை கூறிய வள்ளுவரோ 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று நமது பாட்டிகளின் கதையை ஒட்டி கூறுவதைப் பார்க்கிறோம். அவர் பார்வையில் சந்திர கிரகணம் ஏற்படுவது பாம்பு விழுங்குவதால் ஏற்படுகிறது என்றும் பாம்பு அந்த சந்திரனை கக்குவதால் சந்திர கிரகணம் விலகுகிறது என்ற ரீதியில் சொல்வதைப் பார்க்கிறோம். இது நம் முன்னோர்கள் வானம், பூமி, சந்திரன் பற்றி எந்த அளவு விளங்கியிருந்தார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

சரி. குர்ஆன் இந்த நிகழ்வுகள் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் பார்ப்போம்.

'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி வானங்களை இறைவனே உயர்த்தினான்.....நீங்கள் உறுதியாக நம்புவதற்க்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.'
-குர்ஆன் 13:2

'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி இறைவனே வானங்களைப் படைத்தான். உங்களை சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.'
-குர்ஆன்: 31:10

ஆகாயத்தின் கட்டுமானத்தில் எந்த திசையில் எவ்வளவு தூரம் நீங்கள் சென்று பார்த்தாலும் கண்களுக்கு தெரியக் கூடிய எந்த ஒரு தூணையும் நீங்கள் காண இயலாது. ஈர்ப்பு விசையைக் கொண்டே ஒவ்வொரு கோள்களும் பிணையப்பட்டு அந்தரத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் காண இயலாது. ஒவ்வொரு முறையும் நாம் பூமியில் கண்ணுக்குப் புலப்படாத அந்த காந்த தூண்களை கடந்து அதனை உடைத்துக் கொண்டு நடக்கிறோம் ஆனால் அந்த உணர்வு நமக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. அந்த உணர்வு நமக்கு ஏற்படுமானால் நம்மால் பூமியில் எந்த இடத்தையும் கடக்கவும் முடியாது. படைத்த இறைவன் நமக்கு செய்துள்ள பல உதவிகளில் இதுவும் ஒன்று.

நம் கையில் உள்ள ஆப்பிள் தவறினால் நேராக பூமியை நோக்கி செல்கிறது. ஆப்பிள் பூமியை நோக்கி செல்கிறது என்பதை விட பூமியின் ஈர்ப்பு விசையானது ஆப்பிளை இழுக்கிறது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் பார்க்க முடிவதில்லை. இதைத்தான் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற அழகிய வார்த்தையைக் கொண்டு குர்ஆன் நமக்கு விளக்குகிறது.

அறிஞர் அரிஸ்டாட்டில் பூமியை மையமாக வைத்தே அனைத்து கோள்களும் சுழல்கின்றன என்று கூறி வந்தார். அன்றைய கிருத்தவ சபைகளும் அரிஸ்டாட்டிலின் கருத்தையே உண்மை என்று வாதிட்டது. இதன் பிறகு போலந்து நாட்டின் அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ் வானியலைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இந்த அறிஞர் கிறித்தவ சபையிலும் பணியாற்றி வந்தார். முடிவில் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் சுழலுகின்றன என்ற 'சூரிய மைய கோட்பாட்டை' உருவாக்கினார். கிறித்தவ சபைக்கு மாற்றாக இந்த கருத்து இருந்ததால் தான் கண்ட உண்மையை தனது நெருங்கிய நண்பர்களிடமே கோபர் நிக்கஸ் சொல்லி வந்தார். பிறகு தனது அறுபதாவது வயதில் ரோமில் 'சூரிய மையக் கோட்பாட்டை வலியுறுத்தி' உரை நிகழ்த்தினார். சும்மா இருக்குமா கிறித்தவ சபை! 'மத நிந்தனை' என்று குற்றம் சாட்டி அவர் கருத்து தவறு என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்து அவரை மன்னிப்பும் கேட்க வைத்தது கிறித்தவ சபை. இருந்தும் தனது எழுபதாவது வயதில் இறப்பதற்கு முன் சூரியனை மையமாக வைத்தே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை புத்தமாக வெளியிட்டு மறைந்தார் அந்த மேதை.

அறிஞர் நியூட்டனும் கிரக சஞ்சாரங்களை விளக்கி 'பேரண்டம் தாமாகவே காரணமின்றி நிலை பெற்றிருக்கவில்லை. அதனை நிலை நிறுத்தும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு பிணைப்பு உண்டு. அந்த பிணைப்பே பேரண்டம் மொத்தமும் பரவி நிற்க்கும் ஈர்ப்பாற்றலாகும்.' என்று கூறுகிறார்.

இதனையே குர்ஆன் கூறும் போது பின் வருமாறு விளக்குகிறது.

'வானங்களும் பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மை உடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.'
-குர்ஆன்: 35:41


இன்று இந்த உண்மைகளை எல்லாம் எல்.கே.ஜி படிக்கும் நம் குழந்தைகளுக்குக் கூட தெரிந்திருக்கும். ஆனால் இந்த குர்ஆன் இறங்கிய காலம் 1400 வருடங்களுக்கு முன்பு என்பதையும் அந்த மக்கள் வானியலைப் பற்றிய போதிய அறிவு இல்லாதவர்களாகவும் இருந்ததையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

குர்ஆன் கூறும் பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்!



'ஒவ்வொரு பெண்ணும் தனது கருவறையில் சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது.' குர்ஆன் 13:8

திருக் குர்ஆனின் 13;8 வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.

பொதுவாக மனித உடலுக்கு என சில தனிப் பட்ட தன்மைகள் உண்டு. தனக்குள் அது அன்னியப் பொருள் எதனையும் ஏற்றுக் கொள்ளாது. நாம் சாப்பிடும் உணவுகளையும் ஜீரணித்துக் கொண்டு பிறகு கழிவாக வெளியேற்ற முயற்சிக்கிறது. நம் கண்களை எடுத்துக் கொள்வோம். கண்களில் ஏதேனும் தூசிகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே கண் முயற்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் உடலின் இயற்கை தன்மைக்கு மாற்றமாக கருவறை அன்னிய உடலின் விந்துத் துளியை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் தனக்குள் விந்துத் துளியை கருவாக வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும் போது கருவறை விரிகிறது. இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. 

இனி டாக்டர் அனுராதா கிருஷ்ணன் அளிக்கும் விளக்கத்தைப் பார்போம்:

பெண்ணின் இடுப்புப் பகுதியில் பாதுகாப்பாக இருக்கும் கருப்பையில், கருத் தரித்தபோது கருவானது ஒரு திராட்சை அளவில் சிறியதாக இருக்கும். அதுவே பிரசவிக்க இருக்கும்போது அது ஒரு பலாபழ அளவில் இருக்கும். ஆக, கருப்பையானது கிட்டதட்ட 100 மடங்கு விரிவடைகிறது. இப்படி விரிவடையும்போது அது பெண்ணின் வயிற்றில் உள்ள பெருங்குடல், சிறுகுடல் மற்றும் இரைப்பையை பின் தள்ளச் செய்யும். இதனால், கருப்பைக்கு அழுத்தம் உண்டாகும்.

பெண்ணின் கருப்பையின் சுவர் வலிமையாக இருந்தால் மட்டுமே குடல் மற்றும் இரைப்பையின் அழுத்தத்தை அது தாங்கும். கரு வளர வளர இந்த அழுத்தம் அதிகமாகும் ஆகையால் கருப்பையின் தாங்குதலும் வலுவுள்ளதாக இருக்க வேண்டும். .

பலமில்லாத கருப்பையைக் கொண்ட பெண்களுக்கு இந்த அழுத்தம் தாங்காமையால் கருக்கலைப்பும் (7 மாதற்கு முன்னர் நிகழ்வது) குறைப் பிரசவமும் (7 மாதம் முதல் 9 மாதத்திற்குள்) நிகழும். ஆக, கருப்பையின் வலிமையின்மையே கருக்கலைப்பு மற்றும் குறைப்பிரசவங்களுக்கு காரணமாக இருக்கிறது. கருப்பை வலுவாக இருக்க நம் மண்ணீரலின் சக்தி தரமாக இருக்க வேண்டும்.

-dr anuradha krishnan

மருத்துவரின் மேற்படி கூற்றில் உள்ள அறிக்கை படி சிறிதாக உள்ள கருவறை குழந்தையின் வளர்ச்சிக்கு தக்க விரிவடைகிறது என்பதை பார்தோம். இந்த தன்மையை ஒரு பெண்ணின் வயிற்றில் உண்டாக்கியவன் யார்? வயிற்றில் பல பகுதிகள் இருந்தும் குறிப்பிட்ட இந்த பகுதி மட்டும் விரிவடையக் காரணம் என்ன? நம்மை படைத்த இறைவன் இத்தகைய ஏற்பாட்டை பெண்களின் வயிற்றில் உருவாக்காமல் இருந்தால் மனித இனம் பல்கிப் பெருக முடியுமா? அல்லது நாத்திகர்கள் சொல்வது போல் இவை எல்லாம தானாகவே உருவாக்கிக் கொண்டதா?

ஒரு பெண்ணின் கருவறை சுருங்கி கிடப்பதையும் அதன் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்குத் தக்க விரிவடைவதையும் நான் அறிவேன் என்கிறான் இறைவன். அந்த விரிவடைதல் எந்த அளவு இருக்க வேண்டும் என்பதையும் தானே நிர்மாணித்துள்ளதாகவும் இறைவன் கூறுகிறான். ஒன்பது மாதத்துக்கு மேல் கருவறை விரிவடைய ஆரம்பித்தால் அந்த பெண்ணின் வயிறு வெடித்து விடும் அபாயம் உண்டு. எனவே அதற்கு மேல் விரிவாக்கம் செல்லாமல் குழந்தையை வெளியேற்றும் ஒரு உந்துதலை அந்த வயிற்றில் ஏற்படுத்தியவன் யார்? அதற்கான கால நிர்ணயத்தையும் தானே உண்டாக்கியதாக இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான். 1400 வருடங்களுக்கு முன்பு இறக்கப்பட்ட ஒரு வசனத்தை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். 

'ஒவ்வொரு பெண்ணும் தனது கருவறையில் சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது.' குர்ஆன் 13:8 

source from :Suvanappiriyan

அதிர்ச்சியால் முடி நரைத்து விடும் - குர்ஆனின் அறிவியல்

'ஏக இறைவனை நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்?'

'அதில் வானம் வெடித்து விடும். அவனது வாக்குறுதி செய்து முடிக்கப்படும்'

-குர்ஆன் 73:17


சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தால் அந்த மக்கள் எந்த அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகினர் என்பதை தொலைக் காட்சிகளில் பார்தோம். அன்று ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியினால் பல ஆயிரக்கணக்கான கர்பிணிகளின் குழந்தைகள் குறையுடையதாக பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு மனிதனுக்கு ஏற்படும் அதிர்ச்சியானது அவனது உடலளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். சாதாரண பூகம்பத்திற்கே இந்த நிலை என்றால் வானம் வெடித்து சிதறும் போது,கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதி சின்னா பின்னமாகும் போது மனிதனின் நிலையை சொல்லவும் வேண்டுமோ? அது போன்ற ஒரு சூழல் எற்படும் போது சிறு குழந்தைகளின் தலை முடியும் நரைத்து விடும் என்கிறது இந்த வசனம். உலக முடிவு நாளுக்கும் தலைமுடி நரைப்பதற்கும் என்ன சம்பந்தம்?

1982ல் மலேசியன் ஏர்லைன்ஸில் விமானியாக பணியாற்றிய எரிக் மூடியின் (ERIC MOODY) ஆனுபவத்தை பார்போம். அவர் பயணிக்கும் போது விமானத்தின் நான்கு என்ஜின்களும் அடுத்தடுத்து பழுதடைந்து விட்டன. இனி இறப்புதான் என்ற முடிவுக்கு வந்தார். மிகப் பெரும் மன அழுத்தத்துக்கு அன்று ஆளானார். அதிர்ஷ்டவசமாக ஜகார்த்தாவில் அந்த விமானத்தை இறக்கி அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார். இந்த சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களிலேயே எரிக் மூடியின் தலைமுடியானது நரைக்கத் தொடங்கியது. விமானத்தில் அன்று விபத்து ஏற்படும் போது மன அழுத்தம் கொண்டாரல்லவா? அதுதான் நரைக்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறினர். மன அழுத்தத்துக்கும் தலைமுடி நரைக்கும் மிகுந்த ஒற்றுமை உள்ளதை இந்த சம்பவமும் மெய்ப்பிக்கிறது. இதனை பிபிசியும் வெளியிட்டுள்ளது.

வேதியலில் நோபல் பரிசு வென்ற ராபர்ட் லெப்ஃகோவிட்ஸ் (ROBERT LEFKOWITZ) தலைமையில் ஒரு குழு ஆய்வில் ஈடுபட்டது. அந்த ஆய்வின் முடிவில் மனிதர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி, மன அழுத்தம் போன்றவைகளால் உடலின் டிஎன்ஏக்களில் மாற்றம் ஏற்பட்டு அந்த மனிதனின் தலைமுடி நரைக்கத் தொடங்குவதாக கண்டு பிடித்தனர். முடி நரைத்தலானது ஒரு சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்ட ஓரிரு நாட்களிலேயே ஏற்படத் தொடங்கி விடும் என்றும் ஆய்வைறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கையானது 'நேசர்' அறிவியல் இதழில் ஆகஸ்ட் 21, 2011 ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. மனிதன் முதிர்ச்சியடைந்தால் இயற்கையாக முடி நரைக்கத் தொடங்கி விடும். நாம் இங்கு இள நரையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆய்வறிக்கையானது சமீபத்தில்தான் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் குர்ஆனோ மனிதனுக்கு உலக முடிவு நாளில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து மன அழுத்தத்தால் அதீத பயத்தால் சிறு குழந்தைகளின் தலை முடியும் நரைத்து விடும் என்ற அருமையான அறிவியலை சொல்லிச் செல்கிறது. நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைதான் இது என்பதற்கு இந்த வசனமும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

மனிதனுக்குள் ஏற்படும் மன அழுத்தமானது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல அழுத்தங்களைக் கொடுத்து அதனால் தலைமுடி இளமையிலேயே நிறம் மாறக் காரணமாகி விடுகிறது என்று பார்தோம். இன்றைய நவீன விஞ்ஞான உலகத்தில் வாழ்க்கையானது எல்லோருக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் பெருமபாலான மனிதர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர். ஒரு சிலருக்கு இந்த அழுத்தம் அதிகமாகவே தற்கொலைகளையும் நாடுகின்றனர். இவற்றிலிருந்தெல்லாம் விடுபட மனிதனுக்கு உள்ள ஒரே வழி இறை தியானம்தான். இந்து, இஸ்லாம், கிறித்தவம் என்ற முப்பெரும் மதங்களை எடுத்துக் கொண்டால் அதில் இஸ்லாமியர்களே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் அதிக சதவீதமாக இருப்பர். பெரும்பாலானவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழக் மூடியவர்களாகவும் இருப்பர். இஸ்லாமியர்களில் நாத்திகர்கள் மிகக் குறைந்த சதவீதத்திலேயே இருப்பர். ஒரு நாளைக்கு ஐந்து நேரம் சென்று தனது கவலைகளை எல்லாம் தன்னை படைத்த இறைவனிடம் முறையிட்டு விடுகின்றனர் முஸ்லிம்கள். இதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் வெகுவாக குறைகிறது. எனவே தான் பத்திரிக்கைகளில் தற்கொலைகள் செய்து கொள்பவர்களில் இஸ்லாமியர்களின் பெயர்கள் வருவதில்லை. அதற்கு காரணம் அவர்களின் இறை பக்தியே என்றால் மிகையாகாது.

The paper was published in the Aug. 21 online issue of Nature.

In the study, mice were infused with an adrenaline-like compound that works through a receptor called the beta adrenergic receptor that Lefkowitz has studied for many years. The scientists found that this model of chronic stress triggered certain biological pathways that ultimately resulted in accumulation of DNA damage.

"This could give us a plausible explanation of how chronic stress may lead to a variety of human conditions and disorders, which range from merely cosmetic, like graying hair, to life-threatening disorders like malignancies," Lefkowitz said.

http://www.sciencedaily.com/releases/2011/08/110821141135.htm

http://www.bbc.com/future/story/20121016-can-stress-turn-your-hair-grey


source from : 

வேறு கோள்களில் உயிரினங்கள்


பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதனல்லாத உயிரினங்கள் இருக்க முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது முழுமையாக நிரூபிக்கப்படாவிட்டாலும் சில கோள்களில் தண்ணீர் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதைச் சான்றாகக் கொண்டு இவ்வாறு ஊகம் செய்கின்றனர்.
திருக்குர்ஆன் இந்தச் சாத்தியத்தை மறுக்கவில்லை. மாறாக வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்க முடியும் என்று தெரிவிக்கிறது.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும்போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன். - 42:29

இவ்வசனம் (42:29) வானத்திலும் பூமியிலும் உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதாகக் கூறுகிறது. பூமியைத் தவிர மற்ற கோள்களில் அல்லது துணைக் கோள்களில் உயிரினம் இருக்கின்றன என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் சொல்கிறது.
இன்று ஊகமாக விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிக்குப் பின் கூறுவதை திருக்குர்ஆன் உறுதிபடக் கூறுகிறது. பூமி அல்லாத கோள்களில் உயிரினம் இருப்பது நிரூபணமாகும் போது இது இறைவனின் வார்த்தை என்பது மேலும் உறுதியாகும்.

மனிதர்கள் பூமியில் தான் வாழ முடியும்

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன'' என்றும் நாம் கூறினோம். - 2:36


இவ்வசனங்களில் (2:36, 7:10, 7:24, 7:25, 30:25) "இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும்' என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகில் அதன் துணைக்கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் பூமியின் துணைக்கோளான சந்திரனிலும் மனிதன் வாழமுடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5,80,00,000 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.
முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து, இக்கோளின் அதிகபட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும், குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.
அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.

வீனஸ் எனப்படும் வெள்ளிக்கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10,08,00,000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகபட்ச வெப்பத்தைப் போல் சுமார் 10 மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது.

மார்ஸ் எனப்படும் செவ்வாய்க் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது. சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலைவிலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகித அளவுக்குத்தான் ஆக்ஸிஜன் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரி சென்டிகிரேடும், குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால் இங்கும் மனிதன் வாழ முடியாது.

ஜூபிடர் எனும் வியாழன் கோள், சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.

சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே உள்ளது.
யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும், நெப்டியூன் கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும், புளூட்டோ கிரகம் சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில் கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.

பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர், காற்று எதுவும் இங்கு இல்லை. இங்கு பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும், இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.
சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.
சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்று கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.

மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும். சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும்.

உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில், அல்லது சந்திரனில் தங்குவதை "வாழ்வது' என்று கூறக் கூடாது.
அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால்தான் கோடை, குளிர், வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன.

வருடம் முழுவதும் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு "இதில் தான் வாழ்வீர்கள்'' என்று எவ்வாறு அடித்துக் கூற இயலும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

எறும்புகளுக்கும் அறிவு உண்டு


"அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது." - 27:18


இவ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும், அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது.

அப்படியானால் எறும்புகள் மனிதனின் கால்களில் மிதிபட்டுச் சாவது ஏன்? ஸுலைமான் நபி வருவதை அறிந்து மிதிபடாமல் தப்பித்தது போல் இப்போதும் எறும்புகள் தப்பிக்க வேண்டியதுதானே என்று சிலர் விதண்டாவாதம் செய்வார்கள்.
அந்த எறும்புகள் எதை அறிந்து கொண்டதாக இவ்வசனம் கூறுகிறதோ அதை எறும்புகள் இப்போதும் அறிந்து கொள்ளத்தான் செய்கின்றன.

ஸுலைமான் என்ற தனி மனிதர் வருவதை எறும்புகள் அறியவில்லை. ஸுலைமானும் அவரது படையினரும் வருவதைத் தான் அறிந்து கொண்டன.

பெரிய படைகள் படைகளுக்கே உரிய அதிர்வுகளை எழுப்பித்தான் நடைபோடுவார்கள். அவர்களுடன் உள்ள யானை மற்றும் குதிரைப் படைகளாலும் நிலத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படும். இப்படி நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் கண்டுபிடிப்பு இதுதான்
நியூயார்க்: பூகம்பம் ஏற்படப் போவதை, சிறிய உயிரினமான, எறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூகம்பத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக, உயிர் அறிவியல் துறை ஆய்வாளர், கேப்ரியல் பார்பெரிக், தன்னுடைய சக ஆய்வாளருடன், 3 ஆண்டுகள் சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதற்காக, பிரத்யேக மென்பொருளில் உருவான, வீடியோ காமிரா துணையுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள், இரவு நேரங்களில் தன்னுடைய இடமான புற்றில் ஓய்வெடுக்கும். ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலை ஏற்பட்டதும் திரும்பி விடுகின்றன.

பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக, எறும்புகள் வெளியேறுகின்றன.
இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை அப்படியே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வதாக இருந்தால் அது படைத்த இறைவனால் தான் இயலும்.
ஒரு படை வருவதை பொதுவாக அறிந்து கொள்வது சரிதாஅன். ஸுலைமான் நபியையும், அவரது படைகளையும் எறும்புகள் எப்படி அறிய முடியும்? என்ற சந்தேகம் வரலாம்.
எறும்புகளால் மனிதர்களை அவர்களது பெயர்களுடன் அறிந்து கொள்ள முடியாது. வேறு எந்த உயிரினத்தினாலும் இதை அறிந்து கொள்ள இயலாது.
ஆனால் ஸுலைமான் நபியவர்களுக்கு மாபெரும் ஆட்சியை அல்லாஹ் வழங்கினான். ஷைத்தான்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தனர். பறவைகள் மற்றும் ஜீவராசிகளின் மொழிகள் அவருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு இருந்தன. (பார்க்க 27:16)
ஹுத் ஹுத் பறவையுடன் ஸுலைமான் நபி அதன் மொழியில் பேசியுள்ளார். (பார்க்க 27:20)
அவரது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த ஜீவராசிகளுடன் ஸுலைமான் நபி அவர்கள் அந்த ஜீவராசிகளின் மொழியில் பேசுவார். அப்படி பேசியதன் அடிப்படையில் எறும்புகளுக்கு தன்னைப் பற்றி ஸுலைமான் நபி தெரிவித்து இருந்தால் ஸுலைமான் நபியை அந்த எறும்புகள் அறிந்து கொண்டதில் வியப்பு இல்லை.
பெரும் படையுடன் ஒரு கூட்டம் வருவதை எறும்புகள் உணர்ந்தவுடன் இந்தப் பகுதியில் இப்படி ஒரு படை வருவதாக இருந்தால் அது ஸுலைமான் நபியின் படையாகத்தான் இருக்க முடியும் என்று எறும்புகள் அறிந்து கொண்டன.

தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயக் கடமை

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்488 என்பதை அறிந்து கொள்ளுங்கள்! - 2:333

 தாய்ப்பால் ஊட்டுவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும், தாய்க்கும் ஏராளமான நன்மைகளைத் தருவதால் குழ்ந்தைக்கு இரு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

இதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இது குறித்து ஆய்வு செய்து, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றும், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றும் கூறியுள்ளார்.

தங்களது குழந்தைகளுக்குப் பெண்கள் பாலூட்ட வேண்டும் என்பதை மதக் கட்டளையாக இஸ்லாத்தில் மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளது. வேறு எந்த மதத்திலும் இது குறித்து கட்டளை எதுவும் போடப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் நவீன காலத்தில் புட்டிப்பால் கொடுத்தே குழந்தைகள் வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.
ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். தாய்மார்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்ற உண்மையும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் காக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு :
இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களைப் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது

நீருக்குள் பிரசவம்

பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
திருக்குர்ஆன் 19:23.24

பிரசவ வலியில் துடிப்பதற்கும், கீழே நீரூற்றை ஏற்படுத்துவதற்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருப்பதை இன்றைய அறிவியல் உலகம் கண்டு பிடித்து குர் ஆன் இறைவனின் வார்த்தை என்பதை மேலும் மெய்பித்திருக்கிறது.

பிரசவம் நடைபெறும் லேபர் வார்டில் கணவனை அனுமதிப்பது தற்போது இந்தியா விலும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரசவமாகும் பெண்ணுக்கு இது மனதளவில் தைரியத்தை தரும் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது தாய்க்கு பிரசவத்தை எளிதாக்குகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை வயிற்றில் கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. குளிர் நீரில் பிறப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் கூடுகிறது. ரஷ்யாவில் பிரசவ மருத்துவமனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார் நிலையில் உள்ளன.
தினமலர் 22-9-2009

வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்!

சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.

சூரியக் குடும்பத்தின் ஆற்றல் (Energy of Solar system) இரும்பை உறுவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு இந்த சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப்போல நான்கு மடங்கு ஆற்றல் (Four Times energy of Entire solar System is Required to Produce a Single Atom of Iron) தேவைப்படுகிறது. எனவே பூமியில் உள்ள இரும்புகள் எங்கிருந்தோ வானத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்கின்றனர் NASA விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.


Iron Was Sent down from Another Giant StarIron Sent Down
தற்கால அறிவியலாளர்கள், தற்போது பூமியில் காணப்படும் இரும்புகள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனை விடப் பன்மடங்கு பெரிதாகவிருந்த ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துகள்கள் சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு அதனோடு மோதி பூமியில் இரும்புக்கான தாதுப்பொருட்கள் பரவலாக கிடைக்க வழி வகுத்தது என்று கூறுகிறார்கள். 




இந்த அறிவியலாளர்கள் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் இளகிய நிலையில் இருந்த இந்த பூமி தற்போதுள்ள அளவை விட மிகச் சிறியதாக இருந்ததாகவும் இரும்பின் தாதுப்பொருட்கள் அடங்கிய மிகப்பெரிய ஆஸ்ட்ராயிட்ஸ் எனப்படும் விண்கற்கள் 10 க்கும் மேற்பட்டவைகள் பூமியில் மோதியதாகவும் ஒவ்வொரு தடவையும் மோதும் போது பூமி தன் அளவில் பெரியதாக ஆனதாகவும் கூறுகிறார்கள். 

பூமி, சந்திரன், சூரியன் இவைகளெல்லாம் மிகப்பெரிய வெடிப்பின் மூலம் (Big Bang) தோன்றியது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு வெடித்துச் சிதறியதால் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் தோன்றிய அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சிறியதும், பெரியதுமான விண்கற்கள் (Asteroids and Meteoroids) தோன்றி அவைகளும் இப்பரந்த விண்வெளியில் சுற்றித் திரிகின்றன.

பெரிய கற்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் அவைகள் வெடித்துச்சிதறி புதிய புதிய கற்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. அவைகள் அவ்வபோது பூமி, சந்திரன் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு இவைகளின் மீது மோதுகின்றன.
பூமி உருவான காலகட்டத்தில் பூமியின் மீது தொடர்ச்சியாக விண்கல்மாரிகள் பொழிந்தவண்ணமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தை (Bombardment Period) என்று கூறுவர். விழுந்த கற்களில் பல்வேறு தாதுப்பொருட்கள் இருந்தது. இவ்வாறு விண்ணிலிருந்து வந்த விண்கற்கள் மூலமாக கிடைத்ததே இந்த பூமியிலுள்ள இரும்புகள் அனைத்தும் என்கின்றனர் வல்லுனர்கள்.

Bombardment Period
தற்போது அவ்வபோது இந்த மாதிரி விண்ணிலிருந்து விண்கற்கள் மூலமாக இரும்புகள் பூமியை நோக்கி வந்தவண்ணம் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள் இதற்கு ஆதாரமாக 1947 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்த விண்கல்லை (Meteorite) காட்டுகின்றனர். இக்கல்லில் நான்கு சதவிகிதம் நிக்கல் என்ற பொருளும் ஏனைய பெரும்பகுதி இரும்பாகவும் இருந்ததாகக் கூறுகின்றனர்.

பூமியில் காணப்படும் இரும்புகள் அனைத்தும் பூமியில் தாமாகவே உருவாகவில்லை! மாறாக வானத்தில் வேறு எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்தது என்பது தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும்.


ஆனால் இந்தப் பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துலகங்களைப் படைத்த அந்த இறைவன் உலக மாந்தர்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டிட அவன் இறக்கியருளிய அவனுடைய சத்தியத் திருவேதத்திலே இதைக் குறித்து குறிப்பிட்டு மக்கள் சித்தித்து தெளிபெறுமாறு அறிவுறுத்துகிறான்.

Iron Ingot
அல்லாஹ் கூறுகிறான்: -
“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் இறக்கினோம். அதில் கடும் அபாயம் இருக்கிறது; எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன – (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்” (அல்குர்ஆன்: 57:25)