“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

விண்வெளி கண்டுபிடிப்புக்களும் திருக்குர்ஆனும்

பேராசிரியர் யோஷிஹைடு கோசாயி அவர்கள்: விண்ணியல் சம்பந்தமான உண்மையான கருத்துக்களை திருக்குர்ஆனில் கண்டு நான் மிகவும் கவரப்பட்டேன்.
The Hourglass Nebula This is an image of MyCn18, a young planetary nebula located about 8,000 light-years away, taken with the Wide Field and Planetary Camera 2 (WFPC2) aboard NASA's Hubble Space Telescope (HST).  This  Hubble image reveals the true shape of MyCn18 to be an hourglass with an intricate pattern of etchings in its walls.  This  picture has been composed from three separate images taken in the light of ionized nitrogen (represented by red), hydrogen (green), and doubly-ionized oxygen (blue).
பேராசரியர் கோசாய் அவர்கள் ஜப்பானிலுள்ள டோக்கியோ மாநிலத்தைச் சேர்ந்த ஹோங்கோ நகரத்தில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். டோக்கியோ மாநிலத்திலுள்ள மிகாடா தேசீய விண்வெளி ஆய்வு மையத்pன் டைரக்டராகவும் இருந்தார். படைப்பின் ஆரம்பம் பற்றியும், வானங்கள் பற்றியும் பூமிக்கு வானங்களோடு உள்ள தொடர்பு பற்றியும் உள்ள எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்களை நாம் அவருக்கு வழங்கினோம். இந்த வசனங்களை ஆராய்ந்த பிறகு திருக்குர்ஆன் பற்றியும் அது அருளப்பட்ட காலத்தைப் பற்றியும் பேராசிரியர் கோசாய் அவர்கள் நம்மிடம் கேட்டார். அது 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்டது என்று கூறி விட்டு இந்த வசனங்கள் கொண்டிருக்கும் உண்மைகள் பற்றி அவரிடம் கேட்டோம். ஒவ்வொரு பதிலிற்கும் பிறகு திருக்குர்ஆனின் வசனத்தை நாம் அவரிடம் காண்பித்;தோம். அவர் தன் வியப்பைக் காட்டினார். மிகவும் உச்சத்திலிருந்து கொண்டு இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும் தெளிவாகவும் கண்டு உரைப்பது போன்று திருக்குர்ஆன் இப்பிரபஞ்சத்தைப் பற்றிக் கூறுகின்றது என்று கூறினார். இதைக் கூறிய அவன் உள்ள அனைத்தையும் காண்கின்றான். எந்த இடத்திலிருந்து பார்த்தால் எல்லாமே தெளிவாக தெரியுமோ அந்த இடத்திலிருந்து காணும் போது பார்க்கப்பட முடியாதது என ஒன்றுமே இருக்க முடியாது.
This NASA Hubble Space Telescope (HST) image reveals a pair of one-half light-year long interstellar twisters -- eerie funnels and twisted-rope structures -- in the heart of the Lagoon Nebula (Messier 8) which lies 5,000 light-years away in the direction of the constellation Sagittarius. The central hot star, O Herschel 36 (lower right), is the primary source of the ionizing radiation for the brightest region in the nebula, called the Hourglass.  Other  hot stars, also present in the nebula, are ionizing the extended optical nebulosity.  The  ionizing radiation induces photo-evaporation of the surfaces of the clouds and drives away violent stellar winds tearing into the cool clouds. The Lagoon Nebula and nebulae in other galaxies are sites where new stars are being born from dusty molecular clouds.
Fig. 17.1
ஒரு காலத்தில் வானம் புகை உருவத்தில் இருந்ததா என்று அவரிடம் கேட்டோம். ஒரு காலத்தில் இந்த வானம் வெறும் புகையாகத்தான இருந்தன என்று அனைத்து அத்தாட்சிகளும் குறிப்புக்களும் நிரூபிக்க குவிந்துள்ளன என்று அவர் கூறினார். நிரூபிக்கப்பட்ட காணும் உண்மையாக இது நிலைநாட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் நாம் காண்பது போன்று (படம் 17.1) இப்பிரபஞ்சம் தோன்றிய அந்தப் புகையிலிருந்து புதிய நட்சத்திரங்கள் உருவாகுவதை தற்போதும் அறிவியலாளர்கள் காணலாம்.
Astronomy
Fiq.17.2
விண்வெளிக் கப்பலின் துணையுடன் சமீபத்தில்தான் இப்படம் பெறப்பட்டது. புகையிலிருந்து ஒரு நட்சத்திரம் உருவாகுவதை அது காண்பிக்கின்றது. புகையின் வெளிப்புற சிவந்த பாகங்கள் சூடாகவும் ஒன்று கூடவும் ஆரம்பித்திருப்பதை காணுங்கள். மேகத்தின்;; மத்திய பாகத்தை கவனியுங்கள். அது ஒளியை பிரதிபலிக்கக் கூட இயலாத அளவிற்கு அதிலுள்ள புகைப் பொருட்கள் அடர்த்தியாக உள்ளது. நாம் இன்று காணும் மின்னும் நட்சத்திரங்கள் இப் பிரபஞ்சம் இருந்ததைப் போன்றே புகை உருவத்தில் இருந்தன. அவருக்கு திருக்குர்ஆன் வசனத்தை அளித்தோம். அது கூறுகின்றது:
பிறகு அவன் வானத்தின்; பக்கம் திரும்பினான். அது புகையாக இருந்தது. அவன் அதற்கும் பூமிக்கும்; ”நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் ”நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (திருக்குர்ஆன் 41:11)
இந்த புகையை சில அறிவியலாளர்கள் ஷபனி| என்று கூறுகின்றார்கள். திருக்குர்ஆன் கூறும் துக்கான் (-புகை) என்பதோடு பனி என்ற வார்த்தை ஒத்துப் போகவில்லை என்பதை பேராசிரியர் கோசாய் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். ஏனெனில் பனி என்பது குளிர்ந்த தன்மை கொண்டது. ஆனால் பிரபஞ்சப் புகையானது ஒரு வகையான சூடானது. பரவியிருக்கும் புகையோடு திடப் பொருள்களும் சேர்ந்திருக்கும் ஒன்றுதான் துக்கான் என்பது. இதுதான், நட்சத்திரங்களெல்லாம் உருவாவதற்கு முன்னால் எதிலிருந்து பிரபஞ்சம் தோன்றியதோ அந்தப் புகை பற்றிய மிகச் சரியான விவரணமாகும். புகை உஷ்ணமானதாக இருப்பதால் அதை பனி என்று குறிப்பிட முடியாது. துக்கான் என்பதுதான் மிக மிக சரியான வார்த்தையாகும். இவ்வாறாக நாம் அளித்த திருக்குர்ஆன் வசனங்களை பேராசிரியர் கோசாய் அவர்கள் ஆராயத் தொடங்கினார்.
இறுதியாக நாம் அவரிடம் கேட்டோம்: அறிவியல் இப்பிரபஞ்சத்தின் ரகசியங்களை கண்டுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்த உண்மைகள் திருக்குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதை தாங்களே கண்டுள்ளீர்கள். இது பற்றி தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?|திருக்குர்ஆன் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஒரு மனிதரால் அளிக்கப்பட்டது என்று நினைக்கின்றீர்களா?
பேராசிரியர் கோசாய் அவர்கள்; பதிலளிக்கின்றார்: திருக்குர்ஆனில் உண்மையான விண்ணியல்; கருத்துக்கள் உள்ளதைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன். நவீன கால விண்ணியல் அறிஞர்களான நாம் பிரபஞ்சத்தின் ஒரு சிறிய துண்டைப் பற்றித்தான் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். மிகவும் சிறிய பகுதியபை; பற்றிப் புரிந்து கொள்வதில் நம்முடைய முயற்சிகளை ஒன்று கூட்டியுள்ளோம். முழு பிரபஞ்சமும் நம் கவனித்திற்கு வராமல், தொலை நோக்கிகளை வைத்துக் கொண்டு வானத்தின் ஒரு சில பகுதிகளை மாத்திரம்தான் நம்மால் காண முடியும். ஆகவே, திருக்குர்ஆனை படிப்பதன் மூலமும் மேலும் கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலமும் பிரபஞ்சத்தை ஆய்வு செய்யக்கூடிய எதிர்கால வழியை நான் காண முடியும் என்று நான் நம்புகின்றேன்.
It may look like a butterfly, but it's bigger than our Solar System. NGC 2346 is a planetary nebula made of gas and dust that has evolved into a familiar shape. At the heart of the bipolar planetary nebula is a pair of close stars orbiting each other once every sixteen days. The tale of how the butterfly blossomed probably began millions of years ago, when the stars were farther apart. The more massive star expanded to encompass its binary companion, causing the two to spiral closer and expel rings of gas. Later, bubbles of hot gas emerged as the core of the massive red giant star became uncovered. In billions of years, our Sun will become a red giant and emit a planetary nebula - but probably not in the shape of a butterfly, because the Sun has no binary star companion.
Fig.17.3
திருக்குர்ஆன் மனித மூலத்திலிருந்து வந்திருக்கச் சாத்தியமில்லை என்று பேராசிரியர் கோசாய் அவர்கள் நம்புகின்றார்கள். அறிவியலாளர்களான நாம் நம்முடைய ஆராய்ச்சியை ஒரு மிகச்சிறிய பகுதியில்தான் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால்;; திருக்குர்ஆனை நாம் படித்தோமானால், இப்பிரபஞ்சம் பற்றிய மிகப்பெரும் படத்தை நாம் காணலாம். விஞ்ஞானிகள் கட்டுக்கடங்கிய குறுகிய கண்ணோட்டத்தில் அதை காணாமல் பரந்து விரிந்த கண்ணோட்டத்தில் அதைக் காண வேண்டும். இப்பிரபஞ்சம் சம்பந்தமாக, தன்னுடைய எதிர்காலப் பாதையை தற்போது அவரால் வரையறுக்க முடியும் என்று பேராசிரியர் கோசாய் அவர்கள் ஒத்துக் கொள்கின்றார்கள். பிரபஞ்சம் பற்றிய திருக்குர்ஆனின் பரந்து விரிந்த கண்ணோட்டத்தை வழிகாட்டியாகக் கொண்டு, இது முதல் தன்னுடைய ஆராய்ச்சியை திட்டமிடப் போவதாக அவர் மொழிகின்றார்.
ரப்பே புகழ் அனைத்தும் உனக்கே! நீ உயர்ந்தோனாவாய்! இது அவ்வப்போது புதுமையாகிக் கொண்டிருக்கும் என்றென்றும் நிலைத்திருக்கும் அற்புதமாகும். இது உயிரளிக்கும் அற்புதமாகும். அது முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் நம்பச் செய்கின்றது. தீர்ப்பு நாள் வரை வரும் சந்ததிகளை அது நம்பச் செய்யும். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்;. (திருக்குர்ஆன் 4:166).
இன்னும் கூறுவீராக: ”எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” (திருக்குர்ஆன் 27:93).

திருமறையும் நவீன கருவியலும்

திருமறைக் குர்ஆனானது கருவின் வளர்நிலைகளைப் பற்றிக் கூறும் போது:
நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளிpயாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம். பின்னர் அவ்விரத்தக்கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம். பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழுமனிதனாக) உருவாக்கினோம்.ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும் பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன். (அல்-குர்ஆன் 23:12-14)
இனித் தொடராக வரக்கூடிய குர்ஆனின் வசனங்கள் யாவும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவைகளே. அரபி மொழியில் இருக்கும் வசனங்கள் தான் குர்ஆன் எனப்படும். அதில் தான் நாம் குர்ஆனின் முழுமையான அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் வரும் அலக்காعـلـقة) ) எனும் அரபிச் சொல்லுக்கு, அதன் அகராதிப் பொருள்படி,
1)      அட்டைப் பூச்சி.
2)      தொடுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்
3)       இரத்தக் கட்டி
(Figure 1: Drawings illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (Leech drawing from Human Development as Described in the Quran and Sunnah, Moore and others, p. 37, modified from Integrated Principles of Zoology, Hickman and others.  Embryo drawing from The Developing Human, Moore and Persaud, 5th ed., p. 73.)
இந்த அலக்கா (عـلـقة) நிலையிலுள்ள கருவை அட்டைப் பூச்சி (டுநநஉh)-ன் புறத்தோற்றத்துடன் ஒப்பீடு செய்வோமானால், படத்தில் உள்ள உருவ ஒற்றுமையைக் காண முடிகின்றது.(* The Developing Human, Moore and Persaud 5th ed., P.08.)
மேலும், இந்த அலக்கா (عـلـقة) என்ற நிலையில் கருவானது தாயின் கருவறையில் ஒட்டிக் கோண்டிருக்கும்  நிலையில் தாயின் இரத்தத்தை உறிஞ்சி  தன் வளர்நிலைகளுக்கு சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது.  இந்த செயல்பாடு குளத்தில் காணப்படும் அட்டைப் பூச்சியானது பிற பிராணி அல்லது விலங்கினங்களின் தோலின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டு, அந்த பிராணியின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்வதை ஒத்து இருக்கின்றது.(* Human Development as Described in the Qur’an and Sunnah, Moore and Others. P.36.)
அலக்கா (عـلـقة) எனும் அரபிப் பதத்திற்கான இரண்டாவது பொருளானது தொட்டுக் கொண்டு அல்லது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனப்படும்.  தாயின் கர்ப்ப அறையில், கருவின் முதல் ஆரம்ப வளர் நிலையில் எவ்வாறு கரு அமைந்திருக்கும் என்பதையும், அது எவ்வாறு கர்ப்ப அறையில் தொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் நுண்ணிய புகைப்படப் பிரதி 2 மற்றும் 3 ல் காண்கின்றீர்கள்.
Figure 2: We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. (The Developing Human, Moore and Persaud, 5th ed., p. 66.)  (Click on the image to enlarge it.)
அலக்கா (عـلـقة) எனும் அரபிப் பதத்திற்கான இரண்டாவது பொருளானது தொட்டுக் கொண்டு அல்லது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனப்படும்.  தாயின் கர்ப்ப அறையில், கருவின் முதல் ஆரம்ப வளர் நிலையில் எவ்வாறு கரு அமைந்திருக்கும் என்பதையும், அது எவ்வாறு கர்ப்ப அறையில் தொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் நுண்ணிய புகைப்படப் பிரதி 2 மற்றும் 3 ல் காண்கின்றீர்கள்.
Figure 3: In this photomicrograph, we can see the suspension of an embryo (marked B) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother.  The actual size of the embryo is about 0.6 mm. (The Developing Human, Moore, 3rd ed., p. 66, from Histology, Leeson and Leeson.)
மேலும் அலக்கா (عـلـقة) எனும் பதத்திற்கான மூன்றாவது பொருளாக இரத்தக் கட்டி எனப் பொருள் கொள்ளப்படுகின்றது.  கருவின் ஆரம்ப வளர்நிலையில் அதை நோக்குவோமானால், அதன் புறத் தோற்றமும் அதை மூடி இருக்கும் பை போன்ற சவ்வுத் தோற்றமும், உறைந்த நிலையில் உள்ள இரத்தக் கட்டி போன்ற அமைப்புடன் இருப்பதை காண முடியும்.  கருவின் ஆரம்;ப நிலையில் அதிகப்படியான இரத்த ஓட்டம் கருவின் மீது பாய்ச்சப்படுவதால், அதன் புறத் தோற்றம் உறைந்த நிலையிலுள்ள இரத்தக் கட்டி போன்று தோற்றமளிக்கின்றது. (படம். 4).* (Human Development as Described in the Qur’an and sunnah, Moore and Others., Page.37-38).
மேலும் கருவின் வளர்நிலையில் அதனது மூன்றாவது வாரம் வரை இரத்த ஓட்டச் சுழற்சி செயல்படாதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.* (The Developing Human, Moore and Persuad, 5th ed., P.65).
மேற்கண்ட அலக்கா (عـلـقة) எனும் அரபிப்பதத்திற்கான மூன்று அர்த்தங்களுமே அது தரும் பொருள்களுக்கான விளக்கத்திற்கு எந்த வித மாறுபாடும் இல்லாமல் ஒத்திருப்பதை நாம் காண முடிகின்றது.

Figure 4: Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage.  The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The Developing Human, Moore, 5th ed., p. 65.)  (Click on the image to enlarge it.)
கருவின் அடுத்த வளர்நிலையாக முத்கா (مضغة)  எனும் அரபிப்பதத்தைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. முத்கா (مضغة) எனும் சொல்லுக்கு அரபி அகராதியானது பற்களால் மென்று துப்பிய பொருள் (ஊhநறநன-டமைந ளரடிளவயnஉந)  சூவிங்கம் மிட்டாயைக் கடித்து மென்று துப்பும் போது, அதில் பற்களின் வரிகள் பட்டு எவ்வாறு தோற்றம் தருமோ அது போலத் தோற்றத்தை, முத்கா நிலையில் உள்ள கரு தோற்றம் தரும்.  இது கரு வளர்நிலையில் 28-வது நாளில் தெளிவாகக் காணப்படும்.  மேலும் பற்களின் வரிகள் போன்ற அமைப்பையும் கருவின் முதுகுப் புறத்தில் தெளிவாகக் காணலாம்.  படம். * The Developing Human, Moore and Persuad, 5thed., P.8.
Figure 5: Photograph of an embryo at the mudghah stage (28 days old).  The embryo at this stage acquires the appearance of a chewed substance, because the somites at the back of the embryo somewhat resemble teeth marks in a chewed substance.  The actual size of the embryo is 4 mm. (The Developing Human, Moore and Persaud, 5th ed., p. 82, from Professor Hideo Nishimura, Kyoto University, Kyoto, Japan.)
Figure 6: When comparing the appearance of an embryo at the mudghah stage with a piece of gum that has been chewed, we find similarity between the two.
A) Drawing of an embryo at the mudghah stage.  We can see here the somites at the back of the embryo that look like teeth marks. (The Developing Human, Moore and Persaud, 5th ed., p. 79.)
B) Photograph of a piece of gum that has been chewed.
(Click on the image to enlarge it.)

அறிவியல் என்ற துறை இருப்பதையே அறியாத அந்தக் காலத்தில், இன்று இருப்பது போல எக்ஸ்-ரே கருவிகள், ஊவு ஸ்கேன் கருவிகள், நுண் பெருக்கிகள் (ஆiஉசழளஉழிந)இ போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளே இல்லாத, அவற்றை எண்ணிக் கூடப் பார்க்க இயலாத 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள சமூகத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு இணையான  அறிவியல் கூற்றுக்கு முற்றும் மாற்றமில்லாத வகையில் எவ்வாறு இவ்வளவு தெளிவான முறையில் கரு வளர்ச்சியைப் பற்றிக் கூற முடிந்தது!!!
கி.பி. 1677-ல் தான் ஆணின் விந்தில் உள்ள ஸ்பெர்மெடோஸோவா ((Spermatazoa)) எனும் விந்தணுச் செல்லை உருப்பெருக்கி (Miroscope) மூலம் ஹாம் மற்றும் லீயுவென்ஹேக் எனும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் வாழ்ந்த அந்தக் காலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை விட 1000 ஆண்டுகள் பிந்தைய காலமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இவர்கள் விந்தணுவைக் குறித்து ஆய்வு செய்த போது, விந்தணுவில் இருக்கும் மனிதனின் மாதிரித் தோற்றம் தான், பெண்ணின் கருப்பையை அடைந்து, வளர்கிறது எனும் (தவறான) கொள்கையை அன்றைய மக்கள் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. * The Developing Human, Moore and Persuad, 5th ed., P.9.
உடற்கூறு இயல் (Anatomy)  கருவியல் (Embryology) ஆகிய மருத்துவத் துறையில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும் இவற்றில் முனைவர் (P.hன.) பட்டங்களும் பெற்றுள்ள டாக்டர் எமிரிடஸ் கீத் டு. மூர் என்பவர் ‘மனிதனின் வளர்நிலைகள்’ (The Developing Human) எனும் ஆய்வு நூலை எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 8 வௌ;வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் எழுதிய இந்த அறிவியல் பூர்வமான ஆய்வானது, தனிப்பட்ட ஒருவரால் ஆய்வு செய்து எழுதப்பட்ட சிறந்த நூலாக, அமெரிக்காவில் உள்ள இதற்கான சிறப்பு ஆய்வுக் குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும், மருத்துவத் துறைப்பிரிவில் அடிப்படை அறிவியல் ((Basic Science)) பிரிவில் உதவித் தலைவராகவும், உடற்கூறு இயல் (Anatomy) துறையில் 8 ஆண்டுகள் சேர்மனாகவும் பணிபுரிந்துள்ளார். 1984-ல் கனடாவின் உடற்கூறு இயல் துறை அசோஸியேஸனின் சிறப்பு விருதான து.ஊ.டீ. வுpருதை, டாக்டர். கீத் மூர் அவர்களின் உடற்கூறு இயல் ஆய்வுக்கான சிறப்பு விருதாக வழங்கி கவுரவிதிதுள்ளது. உலக அளவில் பல்வேறு அஸோஸியேஸன்களையும் குறிப்பாக அமெரிக்க மற்றும் கனடாவின் உடற்கூறு இயல் மற்றும் பல்வேறு ஆய்வுப் பிரிவுக் கவுன்சில்களையும் வழி நடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.
1981-ல் சௌதி அரேபியாவின் தம்மாம் (Dammam) நகரில் நடைபெற்ற 7-வது மருத்தவ கருத்தரங்கில் டாக்டர்.கீத் மூர் அவர்கள் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனிதனுடைய கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன் கொண்டுள்ள கருத்துக்களை ஆய்வு செய்து உதவுவதில் நான் பெருமைப்படுகின்றேன் என்றார்.  மேலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த அறிவியல் கருத்துக்கள் கொண்ட வசனங்களை கடவுளிடம் இருந்து தான் முஹம்மது அவர்கள் பெற்றிருக்க முடியும்.  ஏனெனில், அவர்கள் வாழ்ந்து, மறைந்து பன்னெடுங் காலம் வரையும் இதற்கான அறிவும் ஆய்வும் நடைபெறவில்லை.  மாறாக, மிக நீண்ட காலத்திற்குப் பின்பே இந்த ஆய்வுகள் யாவும் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளின் மூலமாக முஹம்மது அவர்கள் இறைவனின் திருத்தூதர் தான் என்பதை உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
(The reference for this saying is “This is the Truth (video Tape).  For a copy of this video tape Please contact one of the Organisations listed on page …. )
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் குர்ஆனானது இறைவனின் வேதம் தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? ஏனக் கேட்ட பொழுது இதில் எனக்கு எந்த சிரமமும்ல்லை எனப் பதில் கூறினார். (This is the TRUTH video tape).
மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது, மனித கரு வளர்ச்சியானது பல தொகுதிகளைக் கொண்ட மிகவும் சிக்கலான, இடைவிடாத தொடர்ச்சியான பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வளர்நிலைகளைக் கொண்டது. இந்த வளர்நிலைத் தொடர் மாற்றங்களை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மணிமொழி (ஹதீஸ்) களைப் பயன்படுத்தி தனித் தனிப் பிரிவுகளாக அல்லது நிலைகளாக பிரித்தறிவதற்கான புதிய முறைகளை ஏற்படுத்த முடிந்துள்ளது. (இது நவீன விஞ்ஞானத்தற்கு குர்ஆன் வழங்கியுள்ள பேருதவியாகும் – ஆசிரியர்)  இந்த புதிய முறையானது இலகுவானதாகவும், விரிவானதாகவும், இன்றைய அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்புடையதாகவும் அமைந்துள்ளது.  7-ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்த அண்ணலார் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கிய குர்ஆனையும் அவர்களது போதனை (ஹதீஸ்) களையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதன் விளைவாக, மனிதனின் கருவளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அறிவை இன்றைய நவீன அறிவியல் உலகத்திற்கு தெளிவுபடுத்த முடிந்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியமானதே!!! என்று குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும் அவர் பேசும் போது:
கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்தி, இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான்.  ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்த வரை, இந்த 20-ம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர். இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும், அது 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்து, திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது.  மேலும், திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது.  ஏனெனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது.

மனிதப்படைப்பின் படிநிலைகள்

மனிதப்படைப்பின் படிநிலைகள் (அ)
பேராசிரியர் மூர் அவர்கள் வளரும் மனிதன்|எனும் புகழ் பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்கள்.  கனடாவிலுள்ள டோரோண்டோ பல்கலைக்கழத்தில் உடற்கூறு இயல் மற்றும் செல் இயங்கியல் ஆகிய துறைகளில் பேராசிரியர் ஆவார். அவர் பாகல்டி ஆப் மெடிசினில் அடிப்படை அறிவியல்கள் துறையில் டீன் ஆகவும் இருந்தார். எட்டு வருடங்களாக உடல் கூறு இயல் துறையின் தலைவராகவும் இருந்திருக்கின்றார். டாக்டர் மூர் அவர்கள் கனடாவிலுள்ள வின்னிபெக் பல்கலைக்; கழகத்திலும் பதினொரு ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். பல பன்னாட்டு உடல்கூறு இயல் நிபுணர்களின் கூட்டமைப்புக்களுக்கும் உடல் இயங்கியல் அறிவியலாளர்களின் கூட்டமைப்பிற்கும் தலைமை தாங்கியுள்ளார்.  பேராசிரியர் மூர் அவர்கள்
Royal Medical Association of Canada.
The International Academy of Cytology.
The Union of American Anatomists.
The Union of North and South American Anatomists
ஆகிய அமைப்புக்களின் உறுப்பினராகவும் தேர்ந்;தெடுக்கப்பட்டுள்ளார். கனடாவின் உடல் இயங்கியல் துறையில் மிகவும் புகழ் பெற்ற விருதான து.ஊ.டீ.புசயவெ யுறயசன என்ற விருதை 1984ம் ஆண்டு கனடா உடல் இயங்கியலாளர்கள் அசோசியனிடமிருந்து பெற்றார்.
ஊடiniஉயட யுயெவழஅல யனெ நுஅடிசலழடழபல ஆகிய துறைகளில் அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவைகளில் எட்டு புத்தகங்கள் மருத்துவ பள்ளிகளில் குறிப்புப் புத்தகங்களாக உபயோகிக்கப்படுகின்றன மேலும் அவைகள் ஆறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆனுடைய வசனங்கள் மற்றும் நபியின் பொன்மொழிகள் ஆகியன பற்றி அவருடைய ஆராய்ச்சியை நமக்குத் தரும்படி அவரிடம் கேட்ட போது அவர் மிகவும் வியந்தார். அறிவியலாளர்கள் கடந்த முப்பதாண்டுகளில் மாத்திரமே தெரிந்து கொண்ட விசயங்களை, எவ்வாறு நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் கருவையும் அதனுடைய வளர்ச்சிப் படிகளையும் அத்தனை துல்லியமாகவும் விவரமாகவும் கூற முடிந்தது என ஆச்சரியத்திற்குள்ளானார். மிக விரைவாகவே பேராசிரியர் மூர் அவர்களின் இந்த ஆச்சரியமானது வேத வெளிப்பாடு, நேர்வழி ஆகியவற்றின் மேலுள்ள மதிப்பாக மாறிப் போனது. இந்த கண்ணோட்டத்தை அவர் அறிவுஜீவிகள் மற்றும் அறிவியலாளர்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தினார். திருக்குர்ஆனும் நபி மொழியும் நவீன கருவியலுடன் எவ்விதம் ஒத்துப்போகின்றது என்பது குறித்து அவர் ஒரு சொற்பொழிவே ஆற்றியுள்ளார். அதில் அவர் கூறுவதாவது:-
மனித வளர்ச்சி பற்றி திருக்குர்ஆனில் காணப்படும் கூற்றுக்களைப் பற்றி தெளிவுபடுத்த உதவுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த கூற்றுக்கள் அனைத்தும் முஹம்மது அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்தே அல்லது கடவுளிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்பது எனக்கு தெளிவாகத் தெரிகின்றது. ஏனெனில் ஏறக்குறைய இந்த அறிவு அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு பிற்பாடே கண்டு பிடிக்கப்பட்டது. முஹம்மது அவர்கள் நிச்சயாக அல்லாஹ்வின் தூதராகவே இருந்திருக்க வேண்டும் என்பதை இது எனக்கு நிரூபிக்கின்றது.
மிகவும் புகழ் பெற்ற மரியாதைக்குரிய கருவியல் துறையின் அறிவியலாளர் அவர் துறை சம்பந்தப்பட்ட திருக்குர்ஆனின் வசனங்களை ஆராய்ச்சி செய்த பின்னர் அறிவிப்பதையும் மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவருடைய முடிவையும் யோசித்துப் பாருங்கள்.
மனிதனின் படைப்பில் உள்ள படிநிலைகளை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான் :-
நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (திருக்குர்ஆன் 23:12-14)
அலக்கா|என்ற அரபி வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. முதல் அர்த்தம் அட்டைப் பூச்சி|என்பதாகும். இரண்டாவது அர்த்தம் : மிதந்து கொண்டிருக்கும் ஒன்று|என்பதாகும். மூன்றாவது அர்த்தம் இரத்தக் கட்டி என்பதாகும்.
fig 3.1
சாதாரண தண்ணீரிலிருக்கும் அட்டைப்பூச்சியை அலக்கா படிநிலையுடன் பேராசிரியர் மூர் அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்த போது அவைகளுக்கிடையே மிகப்பெரும் ஒற்றுமையை கண்டார். அலக்கா படிநிலையின் போது கருவானது அட்டைப்பூச்சியைப் போன்ற தோற்றத்தை அடைகின்றது என்று அவர் கண்டு கொண்டார். கருவின் ஒரு படத்தையும் அட்டைப்பூச்சியின் ஒரு படத்தையும் அருகருகே வைத்தார். இந்த படங்களை பல மாநாடுகளில் அறிவியலாளர்களுக்கு அவர் காண்பித்தார்.
அலக்காவின் இரண்டாவது அர்த்தம் மிதந்து கொண்டிருக்கும் ஒன்று|| என்பதாகும். இதுதான் அலக்கா படிநிலையின் போது கருவானது தாயின் கர்ப்ப அறையில் மிதந்து கொண்டிருப்பதை நாம் காணலாம். அலக்காவின் மூன்றாவது அர்த்தம் இரத்தக் கட்டி என்பதாகும். பேராசிரியர் மூர் அவர்கள் கூறியது போல் கருவானது அலக்கா படிநிலையில் பல வகையான உள் மாற்றங்களுக்குள்ளாகின்றது. மூடப்பட்ட நாளங்களின் வழியாக இரத்த ஓட்டம் உருவாகுதல் போன்றவைகள் உருவாகி, வளர்சிதை மாற்றங்கள் தொப்புள் கொடிவழியாக முடிவாகும் வரை மாறுதலுக்கு உள்ளாகுகின்றது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அலக்கா படிநிலையின் போது அது அட்டைப் பூச்சி போன்று தோன்றுவதோடல்லாமல், இரத்தம் மூடப்பட்ட நாளங்களில் (-ஓடாமல்) அப்படியே பிடிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அது இரத்தக்கட்டி போன்ற தோற்றத்தை அடைகின்றது. இரண்டும் விளக்கங்களும் அற்புதமான முறையில் அலக்கா எனும் ஒரே வார்த்தையால் திருக்குர்ஆனால் அளிக்கப்படுகின்றது.
முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த வகையில் அதை அறிந்திருக்க முடியும்? பேராசிரியர் மூர் அவர்கள் கருவை அதன் முத்கா (சுவிங்கத்தை சப்புவது போன்று கடித்துச் சப்பப்பட்ட ஒன்று) படிநிலையிலும் ஆராய்ந்தார். அவர் களி மண்ணை எடுத்து வாயில் வைத்து அதை சப்பிய பிறகு அத்துடன் முத்கா நிலையிலுள்ள கருவினோடு ஒத்துப் பார்த்தார். முத்கா படிநிலையில் கரு சப்பப்பட்ட பொருளின் தோற்றத்தை மிகவும் சரியாக ஒத்திருக்கின்றது என்பதை கண்டார். பல கனடா இதழ்கள் பேராசிரியர் மூர் அவர்களின் விபரங்களை பிரசுரித்தன. திருக்குர்ஆனில் ஆயிரத்து நானுறு வருடங்களாக இருந்து வரும் கூற்றுக்கள் தற்கால நவீன அறிவியலுடன் எவ்விதம் ஒத்துப்போகின்றது என்பது பற்றி மூன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எடுத்துக்காட்டினார். இதன் விளைவாக, பேராசிரியர் மூர் அவர்களிடம் பின் வரும் கேள்வி கேட்கப்பட்டது: – நீங்கள் திருக்குர்ஆனை அல்லாஹ்வின் வாக்குத்தான் என்று நம்புவதாக நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா|? அதற்கு அவர்: அவ்வாறு ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த வித சிரமுமில்லை| என்று பதிலளித்தார். நீங்கள் இயேசுவை நம்பியிருக்கும் போது முஹம்மதுவை எவ்வாறு நம்ப முடியும் என்று கேட்கப்பட்ட போது அவர் இரண்டுமே ஒரே பள்ளியிலிருந்து வந்தவைதான் என்று நான் நம்புகின்றேன்| என்று அவர் பதிலளித்தார்.
fig 3.2
உலகிலுள்ள நவீனகாலத்து அறிவியல் அறிஞர்கள் அனைவரும் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இறக்கியருளப்பட்டதுதான் என்பதை தெரிந்து கொள்ள முடியும். வல்லமைமிக்க அல்லாஹ் கூறுவது போன்று: அல்லாஹ் இறக்கியருளியதை அவனுடைய சொந்த அறிவிலிருந்தே இறக்கியருளியுள்ளான் என்று அவன் சாட்சி கூறுகின்றான்| (திருக்குர்ஆன் 4:166)
முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று ஏற்றுக் கொள்வதில் நவீன காலத்து அறிவியலாளர்களுக்கு எந்த வித சிரமுமில்லை என்று இதிலிருந்து தெளிவாகின்றது.
மனித படைப்பின் படிநிலைகள்; (ஆ)
பேராசிரியர் கீத் மூர் அவர்;களால் எழுதப்பட்ட வளரும் மனிதன்|| எனும் புத்தகம் எட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் அறிவியல் குறிப்புப் புத்தகமாக கருதப்படுகின்றது மேலும் ஒரே ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகம் என்று அமெரிக்காவிலுள்ள சிறப்புக் கமிட்டியினரால் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியரை நாம் சந்தித்து அவருடைய துறையான கருவியல் சம்பந்தப்பட்ட பல திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீதுகளையும் நாம்; அளித்தோம்.
நாம் அளித்த ஆதாரங்களில் பேராசிரியர் மூர் அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். நாம் அவரிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டோம்:- மத்திய காலகட்டத்தில் கருவியல் பற்றிய அறிவியலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், அது பற்றி மிக மிக குறைவாகவே தெரிந்திருந்தது என்று தங்களின் புத்தகத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அதே நேரத்தில் திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு அல்லாஹ் அவருக்கு அருளியதைக் கொண்டு மக்களை அவர் வழி நடத்திக் கொண்டிருந்தார். மனிதனின் படைப்பு பற்றியும் மனித வளர்ச்சியின் பல படிநிலைகள் பற்றியும் திருக்குர்ஆனில் மிகவும் விபரமான விளக்கங்கள் காணப்படுகின்றன.
தாங்களோ உலகப் புகழ் பெற்ற அறிவியலார் ஆவீர்கள், அகவே தாங்கள் ஏன் இந்த உண்மைகளை தங்களின் புத்தகத்தில் குறிப்பிட்டு நீதியை நிலைநாட்டக் கூடாது? என்று கேட்டோம். அதற்கு அவர்: உங்களிடம்தான் ஆதாரங்கள் உள்ளன: என்னிடம் இல்லை. அதை ஏன் எங்களிடம் நீங்கள் கொடுக்கக்கூடாது? என்று பதிலளித்தார்.
நாங்கள் உண்மைகளை அவரிடம் கொடுத்தோம். பேராசிரியர் மூர் அவர்கள் தான் ஒரு மிகப்பெரும் அறிஞர்தான் என்பதை செயலில் காட்டினார். அவருடைய புத்தகத்தின் மூன்றாம் பதிப்பில் அவர் சில சேர்ப்புக்களைச் செய்தார். நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று இந்த புத்தகம் ரசியன், சைன, ஜப்பானிய, ஜெர்மனிய, இத்தாலிய, போர்த்துக்கீசிய, யூகோஸ்லாவிய மொழிகளில் – எட்டு மொழிகளில் – மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
மத்திய காலங்களைப் பற்றி பேராசிரியர் மூர் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில்:- மத்திய கால கட்டத்தில் அறிவியல் வளர்ச்சி மிகவும் பின்தங்கியிருந்தது. அக்காலத்தில் கருவியலின் சில கருத்துக்கள் குறித்து செய்யப்பட்ட சில ஆராய்ச்சிகள் நமக்கு தெரியும். ஆண் பெண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் கலவையிலிருந்தே மனிதர்கள் உருவாக்கப்படுகின்றார்கள் என்று முஸ்லிம்களின் புனித வேதமான திருக்குர்ஆன் கூறுகின்றது. இந்திரியத்துளியிலிருந்து மனிதன் படைக்கப்படுகின்றான் என்பதற்கான பல குறிப்புக்கள் வருகின்றன. அவ்வாறு வரும் அந்த ஒன்று ஆறு நாட்களுக்குப் பிறகு பெண்ணில் ஒரு விதையைப் போன்று தங்கி விடுகின்றது என்று மேலும் கூறப்படுகின்றது.
Fig 4.1
இந்திரியத்துளி இரத்தக் கட்டியாகவும் வளர்ச்சியடைகின்றது எனவும் திருக்குர்ஆன் கூறுகின்றது. (ஊன்றப்பட்ட கருவோ அல்லது தானாக அபார்சனாகிப் போன கரு இரத்தக் கட்டியைப்போன்றே தோன்றும்.) கரு, அதன் தோற்றத்தில், அட்டைப்பூச்சியைப் போன்றோ அல்லது இரத்த உறிஞ்சியைப் போன்றோதான் தோன்றுகின்றது. கரு -சுவைக்கப்பட்ட ஒன்றைப் போன்று – பசை அல்லது மரம் – இருப்பதாக சொல்லப்படுகின்றது. (சுவைக்கப்பட்ட பொருளில் உள்ள பற்களின் அடையாளங்களை கரு முதுகந்தண்டு ஒத்துள்ளது.)
வளரும் கரு 40 அல்லது 42 நாட்களில் மனிதனாக கருதப்படுகின்றது. இந்தப் படிநிலையில் அது மேலும் மிருகக் கருவைப் போன்று தோன்றுவதில்லை. (மனித கரு மனித குணங்களை இந்தப் படிநிலையில்தான் பெறுகின்றது.) கரு மூன்று இருள் திரைகளுக்குள் வளர்கின்றது என்று குர்ஆன் கூறுகின்றது. இது ஏறக்குறைய 1 – தாயின் முன்புற வயிற்றுச் சுவர் 2 – கருப்பைச் சுவர் 3 – அமினோகோரினிக் சவ்வு அகியவற்றைக் குறிப்பிடுகின்றது. இடப்பற்றாக் குறையினால், பிறப்புக்கு முந்தியுள்ள மனித வளர்ச்சி பற்றி திருக்குர்ஆனில் கூறப்படும் மேலும் பல சுவையான குறிப்புக்களைப் பற்றி விவாதிக்க முடியவில்லை.
Fig 4.3
இதுதான் டாக்டர் மூர் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளவை. அவருடைய அந்தப் புத்தகம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. இந்த உண்மைகளை அவருடைய புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என்பதை அறிவியல் அறிவு அவருக்கு கடமை ஆக்கி விட்டது. தற்பொழுது உலகம் முழுவதும் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் நவீன கால கருவளர்ச்சி படிநிலைகள் எளிமையானதோ அல்லது மிகவும் விரிவானதோ அல்ல என்ற முடிவிற்கு டாக்டர் மூர் அவர்கள் வருகின்றார்கள். அந்தப் படிநிலைகள் கருவளர்ச்சியை புரிந்து கொள்ள உதவுவதில்லை ஏனெனில் அவைகள் படிநிலை 1, படிநிலை 2, படிநிலை 3 என்று எண்களாக வருகின்றன. திருக்குர்ஆனில் அருளிச் செய்யப்பட்டுள்ள படிநிலைகள் எண்ணிக்கை முறையைச் சார்ந்திருக்கவில்லை. அவைகள், கரு வளர்ந்து செல்லக்கூடிய ஒவ்வொரு நிலையையும் தெளிவானதும் மிகவும் எளிமையாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய உருவங்களை வைத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பிறப்பிற்கு முந்தியுள்ள வளர்சியை திருக்குர்ஆன் பின்வருமாறு அடையாளப்படுத்துகின்றது: – நுத்பா இதன் அர்த்தம் ஒரு துளி|அல்லது மிகக் குறைந்த அளவு நீர்|: அலக்கா இதன் அர்த்தம் அட்டைப் பூச்சியைப் போன்ற ஒரு பொருள்|: முத்கா இதன் அர்த்தம் சுவைக்கப்பட்டது போன்ற ஒரு அமைப்பு|: இத்காம் இதன் அர்த்தம் எலும்புகள் அல்லது எலும்புக் கூடு என்பதாகும். கிஸாவுல் இத்காம் பில் லஹம் இதன் அர்த்தம் எலும்புகளை சதையாலோ அல்லது இறைச்சியாலோ மூடுவது: அல் நச்அ இதன் அர்த்தம் வேறு ஒரு கருவாக உருவாக்குதல். பிறப்பிற்கு முந்தியுள்ள பல்வேறு வித்தியான படிநிலைகளை அடிப்படையாகக் கொண்டே திருக்குர்ஆனின் இந்த பகுப்புக்கள் அமைந்துள்ளன என்று பேராசிரியர் மூர் அவர்கள் கண்டு கொண்டார். இந்த பகுப்புக்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதும் நடை முறைக்கு மிகவும் உகந்ததுமான அழகான விஞ்ஞான விபரங்களை தருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் பேராசிரியர் மூர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்: தாயினுடைய கர்ப்பப் பையில் அல்லது கருவறையில் கருவானது மூன்று திரைகளால் அல்லது அடுக்குகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அது அடுத்த ஸ்லைடில் காண்பிக்கப்படுகின்றது. (அவர் காண்பித்த ஸ்லைடு இப்புத்தகத்தில் கொடுக்கப்படவில்லை). அ – தாயின் முன்புற வயிற்றுச் சுவர் ஆ – கருப்பைச் சுவர் இ – அமினோகோரினிக் சவ்வு. மனித வளர்ச்சிப் படிநிலைகள் மிகவும் சிக்கலாக இருப்பதாலும், வளர்ச்சியின் போது தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாவதாலும், திருக்குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தைகளை உபயோகித்து புதிய பகுப்பு முறை உருவாக்கப்பட முடியும் என என்னால் பரிந்துரைக்கப்படுகின்றது. பரிந்துரைக்கப்படும் இந்த முறை மிகவும் எளிமையானதும், நன்கு புரிந்து கொள்ளப்படக் கூடியதும் தற்போது உள்ள கருவியல் அறிவியலோடு ஒத்துப் போவதும் ஆகும்.
Fiq 4.4
திருக்குர்ஆனையும் ஹதீதையும் கடந்த நான்காண்டுகளாக தீவீரமாக செய்த ஆராய்ச்சிகள் மனித கரு பகுப்பு பற்றிய புதிய முறையை வெளிப்படுத்தியுள்ளது மிகவும் வியப்பிற்குரியதாகும் ஏனெனில் அவைகள் ஏழாம் நூற்றாண்டில் பதியப்பட்டவைகளாகும். கருவியல் அறிவியலின் நாயகனான அரிஸ்டாட்டில், கி.மு. நான்காம் நூற்றாண்டில் கோழி முட்டைகளை வைத்து ஆராய்ச்சி செய்து கோழியின் கரு ஒவ்வொரு படிநிலையாக வளர்கின்றது என்பதை உணர்ந்திருந்தாலும், அந்த படிநிலைகளைப் பற்றிய எந்த விபரங்களையும் அவர் தரவில்லை. கருவியல் சரித்திரத்திலேயே நமக்குத் தெரிந்த வரை, பண்ணிரெண்டாம் நூற்றாண்டு வரை படிநிலைகள், பகுப்புக்கள் பற்றி மிகவும் குறைவாகவே தெரிந்திருந்தது. இதன் காரணமாகவே, மனித கரு பற்றி திருக்குர்ஆனில் காணப்படும் விபரங்கள் ஏழாம் நூற்றாண்டில் நிலவிய அறிவியல் அறிவை அடிப்படையாகக் கொண்டது என்று கூற முடியாது. இந்த விபரங்கள் முஹம்மது அவர்களுக்கு அல்லாஹ்வினால் இறக்கி அருள் செய்யப்பட்டது என்பதே அறிவு பூர்வமான முடிவாகும். அவர் அந்த விபரங்களை தெரிந்திருக்கவே முடியாது. ஏனெனில் அவர் கல்வி கற்காத எந்தவொரு அறிவியல் பயிற்சியும் இல்லாத மனிதர்.
நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனாலும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீதுகளிலிருந்து நாங்கள் தங்களுக்கு அளித்த கருவியல் சம்பந்தமான உண்மை மற்றும் ஆதாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது தாங்கள் அளித்த விபரங்கள் மிக மிக குறைவானது. ஆகவே, தாங்கள் நிபுணத்துவம் பெற்ற இந்த துறை சம்பந்தமான அனைத்து திருக்குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து ஏன் நீதி செய்யக்கூடாது? என அவரைக் கேட்டோம்.
நிபுணத்துவம் மிக்க அறிவியல் புத்தகம் ஒன்றில் தகுந்த பல இடங்களில் பொருத்தமான பல குறிப்புக்களை சேர்த்திருப்பதாக பேராசிரியர் மூர் அவர்கள் பதிலளித்தார். ஆயினும், இஸ்லாம் இது பற்றி கூறுபவைகளை புத்தகத்தில சேர்ப்பதற்கு நம்மை அழைத்துள்ளார். இது சம்பந்தப்பட்ட அனைத்து திருமறை வசனங்களையும் ஹதீதுகளையும் மேலும் அவைகளின் பல்வேறு அற்புத தன்மைகளையும் கோடிட்டு காட்டுமாறும் அவைகளை அந்த புத்தகத்தில் பொருத்தமான இடங்களில் சேர்ப்பதற்காகவும் கூறினார்.
இது நிறைவேற்றப்பட்டது. இந்த இஸ்லாமிய சேர்ப்புக்கள் இணைக்கப்பட்ட அவருடைய புத்தக பிரதிக்கு அவர் முன்னுரை எழுதியுள்ளார். அதைத்தான் தாங்கள் தங்கள் முன் காண்கின்றீர்கள். கருவியல் பற்றிய அறிவியல் உண்மைகள் வரும் ஒவ்வொரு பக்கத்திலும், அது சம்பந்தமான திருமறை வசனங்களையும் ஹதீதுகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளோம். திருமறை குர்ஆனிற்கும் நபிமொழிகளுக்கும் இணையாக எதுவும் இல்லை என்பதை இது நிரூபிக்கின்றது. புதிய தளங்களிலுள்ள நீதிமிக்க பாராபட்சமற்ற மனிதர்களின் மூளைகளில் இஸ்லாம் நுழைந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் தற்போது கண்டு கொண்டிருக்கின்றோம்.
Fiq 4.5

மனித மூளை Human Brain

மூளை பற்றி திருக்குர்ஆன்
AboutHumanBody_04நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழுது கொண்டிருந்த போது அவரைத் தடுத்த கொடிய நிராகரிப்பவர்களில் ஒருவரைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:-
அப்படியல்ல! அவன் விலகிக் கொள்ளவில்லையானால் நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றியைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றியை. (திருக்குர்ஆன் 96:15-16).முன்னெற்றியை திருக்குர்ஆன் ஏன் தவறிழைத்து பொய்யுரைக்கும்| என்று கூறுகின்றது? அந்த மனிதர் தவறிழைத்து பொய்யுரைப்பவர் என்று திருக்குர்ஆன் ஏன் கூறிடவில்லை? தவறிழைத்து பொய்யுரைப்பதற்கும் முன் நெற்றிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
தலையின் முன்பாகத்தில் மண்டையோட்டிற்குள் நாம் பார்வையைச் செலுத்தினால் செரப்ரத்தின் முன் பாகத்தை நாம் காணலாம். இந்த பாகத்தின் செயல்பாடு பற்றி பிஸியாலஜி என்ன கூறுகின்றது? உடல் இயங்கியல் மற்றும் பிஸியாலஜி ஆகியவற்றின் அடிப்படைகள் என்ற புத்தகம் இந்த பாகத்தைப் பற்றி கூறுகின்றது: செயல்பாடுகளை திட்டமிடவும் தொடங்கவும் தேவையான தூர நோக்குப்பார்வை மற்றும் அதற்கான உந்துதல் முன்பக்;கமுள்ள மூளையின் பின்பாகத்தில் ஏற்படுகின்றது அதாவது நெற்றிப்பகுதி (படம் 9.1 காண்க). இதுதான் அஸோஸியேஸன் கோர்டக்ஸின் பகுதியாகும். அந்த புத்தகம் மேலும் கூறுவதாவது: முன்நெற்றிப்பகுதி தூண்டும் பகுதியாக இருப்பதால் அத்துமீறும் செயல்பாடுகளின் மையத்தளமாகவும் அதுதான் விளங்குகின்றது …
ஆகவே செரப்ரத்தின் இந்தப் பகுதிதான் திட்டமிடவும் தூண்டவும் நல்ல அல்லது கெட்ட செயல்களை தொடங்கவும் காரணமாக உள்ளது. அதுதான்; பொய் சொல்லவும் உண்மையை கூறவும்; காரணமாக உள்ளது.  ஆகவே எவராவது ஒருவர் பொய்யுரைக்கும் போதோ அல்லது பாவம் செய்யும் போது திருக்குர்ஆன்; கூறியது போன்று அவரின் முன்நெற்றி தவறிழைத்து பொய்யுரைக்கின்றது என்று சொல்வது பொருத்தமானதாகும். தவறிழைத்து பொய்யுரைக்கும் நாஸியா (முன்நெற்றி)! கடந்த அறுபது வருடங்களுக்கு முன்புதான் அறிவியலாளர்கள் முன்நெற்றியின் இந்த செயல்பாடுகளை கண்டுபிடித்தனர் என்று பேராசிரியர் மூர் அவர்கள் கூறுகின்றார்கள்.

வானவியல் பற்றிய உண்மைகள்

திருக்குர்ஆன் முழு உலகத்திற்கும் நினைவூட்டக் கூடிய வேதம் என்று அல்லாஹ் அவனுடைய வேதத்தில் தெளிவாக்குகின்றான்:
eagle nebula
”இது உலகெங்களுக்கெல்லாம் நினைவூட்டும் வேதமேயன்றி வேறல்ல. நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.” (திருக்குர்ஆன் 38:88)
இவ்வாறாக திருக்குர்ஆன் இறுதி நேரம் வரை மனிதர்களுக்கு நினைவூட்டி வரும் ஒரு வேதமாகும். அவ்வப்பொழுது மனிதன் கண்டு பிடிப்பவைகளைப் பற்றிய தகவல்களை அது உள்ளடக்கியுள்ளது. ஏனெனில், அல்லாஹ் கூறியது போல், இந்தக் குர்ஆன் அல்;லாஹ்வின் அறிவிலிருந்து இறக்கப்பட்டது. அதில் உள்ள ஒவ்வொரு வசனமும் அல்;லாஹ்வின் அறிவு கொண்டு இறக்கப்பட்டது.
அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: உமக்கு அனுப்பியிருப்பதை அவன் தன்னுடைய சொந்த அறிவிலிருந்து அனுப்பியுள்ளான். (திருக்குர்ஆன் 4:166)
ஒவ்வொரு வசனத்திலும் இறை ஞானம் உள்ளது. ஆனால் மனித இனம் சிறிது சிறிதாகத்தான் அதை அறிந்து வருகின்றது. மனித இனம் உயர் மட்டத்திலுள்ள அறிவியல் அறிவை அடையும் போது ஒரு குறிப்பிட்ட வசனத்திலுள்ள இறை ஞானத்தை விளங்கும் சக்தியை அது பெறுகின்றது. இவ்வாறாக, இந்த வசனம் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதுதான் என்று அறிந்து கொள்கின்றது. எப்பொழுதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மனித முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு வசனமாக தொடர்ந்து புரிந்து கொள்ளும் அறிவை அவன் பெறுவான். இவ்வாறாக மனித இனம் தொடர்ந்து மேலும் மேலும் பல வசனங்களை புரிந்து கொள்ளும். இது திருக்குர்ஆனின் தனிப்பட்ட அற்புதத்தன்மையாகும்.
பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் அமெரிக்காவின் நாஸாவில் (NASA) பணி புரிகின்றார். நாஸா என்பது தேசீய விமான ஓட்டும் கலை மற்றும் விண்வெளி நிர்வாகம் என்பதாகும். (National Aeronautics and Space Adminstration). அங்கே அவர் மிகவும் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆவார். நாம் அவரைச் சந்தித்து விண்ணியல் குறித்துக் கூறும் பல திருக்குர்ஆன் வசனங்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்டோம். இரும்பைக் குறித்தும் அது எவ்வாறு உருவாகியது என்பது குறித்தும் அவரிடம் கேட்டோம். பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளும் எவ்வாறு உண்டாகியது என்று அவர் விளக்கினார். அவைகள் எவ்விதம் உண்டாகின்றது என்பதை அறிவியலாளர்கள் மிகவும் சமீபத்தில்தான் கண்டுபிடித்தார்கள் என்று அவர் கூறினார். இரும்பின் மூலக்கூறை உண்டாக்கும் அளவிற்கு ஆரம்ப கால சூரியக் குடும்பத்திற்கு போதுமான சக்தி இருந்திருக்கவில்லை என்று அவர் கூறினார்.
இரும்பின் ஒரு அணுவை உண்டாக்க வேண்டிய சக்தியை கணக்கிட்டால், முழு சூரியக் குடும்பத்திலும் இருந்ததை விட நான்கு மடங்கு அதிக சக்தி வேண்டியதிருந்தது என்று கண்டு பிடிக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பூமி, சந்திரன், புதன் அல்லது மற்ற எந்த கோள்களிலுமுள்ள முழு சக்தியும் கூட, ஏன் முழு சூரியக் குடும்பமும் சேர்ந்து கூட, ஒரு இரும்பணுவை உருவாக்க முடியவில்லை. அதனால்தான் இரும்;பென்பது வெளி உலகத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர் பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கூறினார். அவருக்கு திருக்குர்ஆனின் வசனத்தை வாசித்துக் காண்பித்தோம்.
இரும்பையும் நாம் தான் இறக்கி வைத்தோம். அதில் கடும் அபாயமுமிருக்கிறது. எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 57:25)
பிறகு வானத்தைப்பற்றி அவரிடம் கேட்டோம். அதில் ஏதாவது பிளவுகளோ அல்லது பள்ளங்களோ உள்ளனவா என்று கேட்டோம். நாம் பேசிக் கொண்டிருப்பது விண்ணியலில் ஒரு பிரிவான ஒருங்கிணைந்த வானம்|என்பதாகும். அதை தற்காலத்தில்தான் அறிவியலாளர்கள் கண்டு பிடித்தார்கள் என்று அவர் சொன்னார். உதாரணத்திற்கு, வெளிப்புற வானில் ஒரு பொருள்;; ஏதேனும் ஒரு திசை நோக்கி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பறக்கின்றது. பிறகு அதே தூரத்தை வேறொரு திசையில் பறக்கின்றது என்றால், (அதனுடைய) கன எடை எல்லா திசைகளிலும் ஒரே மாதிரி இருப்பதை காண்பீர்கள். ஏனெனில் இந்த உருவம் அதனுடைய சொந்த சம நிலையை கொண்டுள்ளது. அதாவது எல்லா திசையிலுமுள்ள அழுத்தங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இந்த சமநிலை இல்லையெனில், முழு பிரபஞ்சமுமே குலைந்து விடும். திருக்குர்ஆனிலுள்ள அல்லாஹ்வின் வசனத்தை நான் நினைவு கூர்ந்தேன்:
அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (திருக்குர்ஆன் 50:6)
The Helix Nebula (Images  courtesy: NASA)
பிரபஞ்சத்தின்; கோடியை அடைய அறிவியலாளர்களின் முயற்சிகளையும் அதில் அவர்கள் வெற்றியடைந்தார்களா என்பது பற்றியும் பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களிடம் கேட்டோம். பிரபஞ்சத்தின் கோடியை அடைய அவர்கள் தீவீரமாக போராடிக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் கூறினார். பிரபஞ்சத்தை உற்று நோக்க சக்தி வாய்ந்த சாதனங்களை நாங்கள் நிறுவிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் புதிய நட்சத்திரங்கள் நம்முடைய கேலக்ஸிக்குள்ளேயே இருப்பதைப்பதான் எங்களால் காண முடிகின்றது. பிரபஞ்சத்தின் கோடியை நாங்கள் இன்னும் அடைய முடியவில்லை. கீழ்வரும் திருக்குர்ஆன் வசனத்தை அவர் அறிவார்:
அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்;. (திருக்குர்அன் 67:5)
உண்மையில் இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் கீழ் வானத்திற்கான அலங்காரங்களே. அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தின் கடைசியை அடைந்திடவில்லை என்று அவர் கூறுகின்றார். பூமியிலிருந்து தொலை நோக்கி மூலம் உற்று நோக்கும் போது தூசுகளாலும் மற்ற சுற்றுச்சூழல் தடைகளாலும் சரியாக கவனிக்க முடியவில்லை என்றும் இதன் காரணமாக, விண்வெளியில் மேலும் பல தொலைநோக்கி நிலையங்களை நிறுவுவது பற்றி அவாகள் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். ஒளியை உபயோகிக்கும் விஷன் தொலை நோக்கிகள் நீண்ட தூரங்கள் செல்ல இயலாதவை. ஆகவே மேலும் தெரியும் வகையில், அவைகளை அகற்றி விட்டு விட்டு, ரேடியோ மூலம் இயக்கப்படும் தொலை நோக்கிகளை வைத்தோம். ஆயினும் இன்னும் நாங்கள் எல்லைக்குள்ளேதான் உள்ளோம் என்றார் அவர். அவருக்கு இந்த வசனத்தை நான் குறிப்பிட்டேன்:
பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா? பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.
ஒவ்வொரு முறையும் பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் ஒரு அறிவியல் உண்மையை கூறும் போது அது சம்பந்தமான திருக்குர்ஆன் வசனத்தை அவருக்கு எடுத்துக் காண்பித்தோம். அவைகள் அனைத்தும் சரியென அவர் ஒப்புக் கொண்டார்;. பின்பு நாம் அவரிடம் கேட்டோம்: மனிதர்களால் உண்டாக்கப்பட்ட நவீன கருவிகள், ராக்கெட்டுகள், விண்வெளிக் கப்பல்கள் ஆகியவற்றின் உதவி கொண்டு நவீன விண்ணியலின் உண்மையான இயல்பை தாங்கள் பார்த்தும் கண்டுபிடித்தும் உள்ளீர்கள். இதே உண்மைகள் திருக்குர்ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடப்பட்டுள்ளதையும் தாங்கள் கண்டீர்கள். ஆகவே இது பற்றி தங்களின் கருத்து என்ன?
அவர்; கூறினார்: நம்முடைய உரையாடல் தொடங்கியதிலிருந்தே நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கலான கேள்வி அதுதான். புராதான குறிப்புக்களில் சில எந்த அளவிற்கு நவீன விண்ணியலுடன் ஒத்துப் போகின்றது என்பது குறித்து நான் மிகவும் புல்லரித்துப் போனேன். 1400 ஆண்டுகளுக்கு முன் நிலவி சூழ்நிலைகள் பற்றி (அதாவது அவர்களுக்கு எந்த அளவிற்கு விண்ணியல் பற்றிய அறிவு இருந்தது என்பது பற்றி) முழுமையாகவும் நம்பும் வகையிலும் எடுத்துக் கூறும் அளவிற்கு போதுமான நிபுணத்துவம் பெற்ற மானிட சரித்திரம் பயின்ற சரித்திர அறிஞரல்ல நான்.
நிச்சயமாக, நான் இங்கு கண்டது மிக மிக முக்கியமானது என்பதை கூறிக் கொள்கின்றேன். அதற்கு அறிவியல் விளக்கம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். நமக்குத் தெரிந்த மனித உணர்வுகளுக்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்றுதான் நாம் கண்ட இந்த வசனங்கள்; உருவாவதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். இந்நேரத்தில் அது சம்பந்தமாக பதிலளிப்பது என்னுடைய நோக்கமும் அல்ல என்னுடைய நிலமையும் அதுவல்ல. நான் எதை கூற வேண்டுமென்று தாங்கள் விரும்புகின்றீர்களோ அதை குறிப்பிட்டு கூறாமலேயே அது பற்றி அதிகமான வார்த்தைகளை உதிர்த்து விட்டேன் என்று நான் நினைக்கின்றேன். விஞ்ஞானி என்ற முறையில் குறிப்பான ஒரு சில கேள்விகளை விட்டும் ஒதுங்கியிருப்பது என்னுடைய கடமை என்று நான் கருதுகின்றேன். நீங்கள் விரும்பும் பதிலை முழுமையாக கொடுக்காமல் சற்று குறைத்து இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது என்று நான் கருதுவதுதற்கு அதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கின்றேன்.
ஆம். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு அல்லாஹ்வின் வேதத்தில் இறக்கப்பட்ட இந்த அறிவு நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஒரு மனித மூலத்திருக்கு வந்திருக்க முடியும் என்று நினைப்பது மிகவும் கடினமானது. அறிவியலாளர்கள் தங்களின் அறிவைப் பெறும் மற்றொரு மூலம் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் வானங்கள் பூமி ஆகியவற்றின் ரகசியங்களை அல்லாஹ் மாத்திரம்தான் அறிவான். பல்வேறு அறிவியலாளர்களிடமிருந்து பல மாநாடுகளில் நாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் எண்ணிப் பார்த்தால் நாம் புதியதொரு சகாப்தத்தின் நுழைவாயிலில் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மதமும் அறிவியலும் ஒன்றையொன்று தழுவிக் கொள்ளும் காலமாகும் இது. அதாவது, உண்மையான மதமும் உண்மையான அறிவியலும். அந்த இரண்டுக்குமிடையே எந்த வித முரண்பாடும் இருக்க முடியாது மேலும் எந்த எதிர்ப்பும் இருக்கக்கூடாது. இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். அதாவது, இறை வெளிப்பாட்டின் மூலம் வந்த, தெளிவாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையோடு முரண்படுவதற்கான சாத்தியமே இல்லை. நாம் தற்பொழுது விண்வெளிக்குப் போய் கொண்டிருக்கும் காலத்தில் இருக்கின்றோம் என்று அவர்கள் சொன்னால், அது உண்மைதான், மதமும் அறிவியலும் இசைந்து போகும் காலம் இதுதான் என்று நாம் அவர்களிடம் கூறுவோம். ஆனால் உண்மையான அறிவிற்கும் உண்மை மார்க்கமான இஸ்லாத்திற்கும் இடையேதான் இது நடக்க முடியும். அந்த மார்க்கத்தைத்தான் அல்லாஹ் எல்லா விதமான பொய்மைகளிலிருந்தும் மாற்றங்களிலிருந்தும் காத்துள்ளான்.

எறும்புகள்

colkarincalari
ஒரு அந்நிய நாட்டிற்கோ அல்லது ஒரு புதிய நகரத்திற்கோ நாம் பயணம் செய்யும்போது நமக்கு ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது. குறிப்பாக நாம் போகின்ற நாடு அல்லது நகரத்தை பற்றிய விபரம் அறியாதபோது, கண்டிப்பாக நமக்கு ஒரு வரைபடமோ அல்லது ஒரு திசைகாட்டியோ அவசியமாகிறது. நம்மிடம் உள்ள வரைபடம் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை காண்பிப்பதற்கும், திசைகாட்டும் கருவி நாம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவியாக இருக்கும். இந்த கருவிகளைப் பயன்படுத்தி நாம் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கிறோம். அத்துடன் நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்ள அங்குள்ள மனிதர்களிடமும் கேட்டறிகிறோம். மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்கள் தாங்கள் செல்ல வேண்டிய பாதையை எப்படி அறிந்து கொள்கின்றன என நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? பாலைவனத்தில் உள்ள ஒரு எறும்பு தனது உணவைத் தேடிக் கண்டுபிடித்து, தனது கூட்டிற்கு எப்படி திரும்பி வருகிறது என்பதை எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா?
21compass_ant
துனீசியா நாட்டின் மத்தியதரைக்கடல் பகுதியில்; வாழும் ஒருவகை கறுப்பு எறும்புகள் (டீடயஉம யுவெள) பாலைவனத்தில் கூடுகளை அமைத்து வாழ்ந்து வரும் எறும்பினமாகும். இந்த வகை எறும்புகள் பரந்தவிரிந்த பாலைவனத்தில், திசைகாட்டும் கருவியோ அல்லது வரைபடமோ இன்றி தங்களது கூடுகளுக்குச் செல்லும் பாதையை கண்டுபிடிப்பதில் அபாரமான திறமை கொண்டவை.
காலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் பாலைவனத்தின் வெப்பநிலை எழுபது டிகிரி சென்டிகிரேடாக உயரும். மேற்படி வெப்பநிலை உள்ள பகல் வேளையில் தனக்குத் தேவையான உணவைத் தேடிக்கொள்வதற்காக எறும்பு தனது கூட்டை விட்டு வெளியேறுகிறது. அடிக்கடி நின்றும், திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு, தனது கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் செல்லும் ஒரு பாதையில் செல்வது போல தனது உணவைத் தேடிச் செல்கிறது. எறும்பு ஊர்ந்து செல்லும் விதத்தை இத்துடன் உள்ள படத்தில் நீங்கள் பார்க்கலாம். வளைந்தும் நெளிந்தும் செல்லும் இந்த பாதையில் பயணிப்பதால் எறும்பு தனது கூட்டை விட்டு காணாமல்போய் விடுமோ என்று பயப்படாதீர்கள். எறும்பு தனது இறையத் தேடிக் கண்டுபிடித்தவுடன் தான் பயணித்த 200 மீட்டர் பரப்பளவில்(655 அடி)உள்ள நேரான பாதையில் சரியாக தனது கூட்டிற்கு திரும்புகிறது. எறும்புகளின் நீளம், உயரம், பருமன், எடை இவைகளை கருத்தில்கொண்டு அவைகள் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித சக்தியோடு ஒப்பிடும்போது, அதே பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம்வரை மனிதன் பயணிப்பதற்கு சமமானதாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த காரியத்தை, எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே. இது எப்படி?
black ant
எறும்புகள் பருப்பொருட்களைக் கொண்டு தனது பாதைகளை அறிவது என்பது முடியாத காரியம். பாதைகளுக்கு அறிவதற்கு அடையாளமாக பயன்படும் மரங்கள், பாறைகள், ஆறுகள் அல்லது ஏரிகள் போன்றவைகளை பாலைவனத்தில் காண்பது மிகவும் அரிது. பாலைவனம் முழுவதும் மண் நிரம்பியதாகவே இருக்கும். அப்படியே ஏதேனும் அடையாளங்கள் இருந்தாலும் இந்த அடையாளங்களால் எறும்புகளுக்கு எந்தவித பயனும் இல்லை. ஏனெனில் எறும்புகள் இந்த அடையாளங்களை நினைவில் வைத்துக்கொண்டு அவைகள் எங்கே இருக்கின்றன என அறிவதற்கும், அவைகளை பயன்படுத்தி தனது வசிப்பிடத்தைக் கண்டுகொள்ளவும் எறும்புகளால் முடியாது. இப்படியெல்லாம் சிந்தனை செய்து பார்க்கும்போது எறும்புகள் செய்யக்கூடிய காரியங்களின் முக்கியத்துவம் நமக்கு மேலும் தெளிவாகும். இருப்பினும் எறும்புகள் இந்த கடினமான காரியங்களை செய்ய முடியும். ஏனெனில் அல்லாஹ் எறும்புகளுக்கு வழங்கியிருக்கும் பிரத்யேகமான உடலமைப்பு.
எறும்புகளின் கண்களில் பிரத்யேகமாக திசையை அறியக்கூடிய அமைப்பு ஒன்று உள்ளது. அல்லாஹ்வால் எறும்புகளுக்கு வழங்கப்பட்ட இந்த அமைப்பு, மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட திசைகாட்டும் கருவியைவிட பண்மடங்கு ஆற்றல் கொண்டது. இந்த பிரத்யேகமாக திசையை அறியக்கூடிய அமைப்பின் உதவியுடன், மனிதர்களால்கூட உணரமுடியாத ஒரு வகையான கதிர்களை எறும்புகள் உணர்கின்றன. உணரும் இந்த கதிர்களைக் கொண்டு எறும்புகள் வடக்கு, தெற்கு என திசைகளை அறிகின்றன. இவ்வாறு திசைகளை அறியும் எறும்புகள் தங்களது கூடுகளையும் தவறாமல் அடையாளம் கண்டு கொள்கின்றன. அல்லாஹ் வழங்கிய இந்தத் திறமைக்காக வல்ல அல்லாஹ்வுக்கு எறும்புகள் நன்றி செலுத்த வேண்டும்.
ant_sand
மனத இனம்கூட ஒளியின் குணநலன்களைப் பற்றி தாமதாகத்தான் தெரிந்து கொண்டது. ஆனால் அதற்கும் முன்பாகவே, எறும்புகள் தோன்றிய உடனேயே ஒளியின் குணநலன்களை தெரிந்து கொண்டு, அதனை பயன்படுத்தியும் வருவது மிகவும் ஆச்சரியகரமான ஒன்று. எறும்புகள் தங்கள் கண்களில் கொண்டிருக்கும் திசைகாட்டும் கருவி போன்ற அமைப்பு கண்டிப்பாக எந்தவித நோக்கமும் இன்றி தற்செயலாகப் பெறப்பட்டது என்று காரணம் கற்பிக்க முடியாது. எறும்புகள் உலகில் தோன்றும்போதே கண்களுடன்தான் தோன்றியிருக்க வேண்டும். இல்லையெனில் எறும்புகளால் தங்களது கூடுகளை கண்டுபிடிக்க இயலாது. தங்களது கூடுகளை சென்றடைய முடியாத எறும்புகள் பாலைவன வெப்பத்தை தாங்க முடியாமல் இறந்து போயிருக்கும். உண்மையாகவே பாலைவனத்தில் வாழும் எல்லாவகையான எறும்புகளின் கண்களும் மேலே கூறப்பட்ட பிரத்யேக அமைப்புடன், அவைகள் உலகில் முதன் முதில் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருகின்றது. எல்லாவற்றையும் நன்றாக அறிந்த அல்லாஹ்வே எறும்புகளுக்கு மேலே குறிப்பிடப்பட்ட பிரத்யேக அமைப்புடன் கூடிய கண்களை படைத்தான்.
அருள்மறை குர்ஆனிலே அல்லாஹ் கூறுகிறான்:
‘வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் (அதற்கு) சக்தி பெறாதவைகளையும் அல்;லாஹ்;வை விட்டு விட்டு இவர்கள் வணங்குகிறார்கள். ஆகவே நீங்கள் அல்;லாஹ்;வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்: நிச்சயமாக அல்;லாஹ்; தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன், ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள்.’ (அத்தியாயம் 16 ஸுரத்துன் நஹ்ல் – 73 மற்றும் 74ஆம் வசனங்கள்)

விலங்கினங்களின் பாதுகாப்பு நடவடிக்கை

mull fish
Puffer மீன்
விலங்குகள் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், உயிரினங்களில் காணப்படும் அற்புதங்களில் ஒன்றாகும். பல உயிரினங்கள் தங்களுக்கு வரக்கூடிய இடையூறுகளைப் பற்றி மதிப்பிட்டு அதனை தடுக்கக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டுபிடிக்கும் திறமைகளைக் கொண்டுள்ளன.
உதாரணத்திற்கு முந்தைய தொடரில் நாம் ஏற்கெனவே அறிந்த கறையான்கள் உருவாக்கும் புற்றின் சுவர்கள் ஒரு பெரிய கடப்பாறையைக் கொண்டு தகர்க்க முடியாத அளவுக்கு கனமும், பலமும் கொண்டது. தூக்கணாங்குருவிகள் தங்களது பிரதான எதிரியான பாம்புகள் கூட நுழையமுடியாத அளவுக்கு தங்களது கூடுகளின் வாசலை அமைத்துக் கொள்கின்றன. சில வகை சிலந்திகள் தங்கள் வலைகளில் அறியாமல் நுழைந்து விடும் பிற பூச்சியினங்களுக்கென தனியாக ஒரு பகுதியை அமைத்து, அதில் அந்த பூச்சியினங்களை சிறைப்படுத்திவிடுகின்றன.
thookkanaanguruvi
தூக்கனாங்குருவி கூடு
தேனீக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள பிரத்யேக பாதுகாப்பு முறையை கையாளுகின்றன. தேன்கூட்டை பாதுகாப்பதற்கு என நியமிக்கப்பட்டிருக்கும் தேனீக்கள், தேன்கூட்டின் மேல் பகுதியில் இருந்துகொண்டு, தங்களது கூட்டில் உள்ள தேனீக்களைத் தவிர பிற பூச்சியினங்கள் எவற்றையும் உள்ளே அனுமதிப்பதில்லை. தேன்கூட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு தேனீ வெளியேறும்போது, மற்றொரு தேனீ அந்த பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. எல்லாவற்றிர்க்கும் மேலாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த தேனீக்கள் தங்களது சொந்த உயிரை பணயமாக வைத்தே பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றன.
ஆங்கிலத்தில் ‘பீவர்’ ( Beaver) என அழைக்கப்படும் எலி இனத்தைச் சார்ந்த ஒருவகை விலங்கினம், தனது தங்குமிடத்தை தண்ணீருக்கு அடியில் அமைத்துக் கொள்கிறது. அவைகளின் தங்குமிடத்தை அடைய வேண்டுமெனில், ‘பீவர்;’ கள் மட்டுமே அறிந்திருக்கக் கூடிய ரகசியமான சுரங்கம் வழியாக மாத்திரமே அவைகளின் தங்குமிடத்தை அடைய முடியும். சுரங்கத்தின் உட்பகுதியில் உள்ள கடைசிப் பகுதியில் அவைகள் தங்கள் குடும்ப சகிதம் குடியிருப்பதைக் காணலாம்.
beaver-2
பீவர் என்ற விலங்கின் கூடு
உயிரினங்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் உயரிய பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து உயிரினங்களிடம் தங்களை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய நுண்ணிறவு உள்ளது என அறிந்து கொள்ளலாம். அதற்கு அத்தாட்சியாக மேலே சுட்டிக்காட்டப்பட்ட உதாரணங்கள் மாத்திரம் நமக்கு போதுமானது. தவிர, ஒரு இனத்தின் எதிரி மற்றொரு இனமே என்பதை நீங்கள் உங்களது கவனத்தில் கொள்ள வேண்டும். எப்படியிருப்பினும், ஒவ்வொரு உயிரினமும் தங்களது எதிரி யார் என்பதை நன்றாக அறிந்து வைத்திருப்பதோடு, அவைகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கென விலாவாரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. கறையானோ அல்லது தூக்கணாங்குருவியோ அவைகளுக்கு அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படக்கூடிய சிந்தனை திறன் இல்லாவிட்டாலும், தங்களது எதிரிகளைப் பற்றிய அனைத்து விபரங்களையும் அறிந்து வைத்திருக்கின்றன என்பது மிகவும் வியப்பானதுதான்.
Praying-Mantis-on-spider-web-2
சிலந்தி அமைத்திருக்கும் சிறை
இதனை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் உங்களையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை அறிந்திராத அல்லது பார்த்திராத ஒரு விலங்கினத்தைப் பற்றிய அல்லது இப்போதுதான் முதன் முறையாக நீங்கள் பார்க்கின்ற ஒரு விலங்கினத்தைப் பற்றிய முழு குணநலன்களையும் உடனடியாக கூறிட முடியுமா? நீங்கள் பார்க்கின்ற அந்த விலங்கினம் உண்னும் உணவு என்ன? அது எப்படி வேட்டையாடும்? அதன் எதிரிகள் யார்? என்ற விபரங்களை அந்த விலங்கினத்தை பார்த்த மாத்திரத்தில் உங்களால் கூறிட முடியுமா? கண்டிப்பாக முடியாது. நீங்கள் முதன்முதலாக பார்த்த அந்த விலங்கினத்தைப் பற்றிய முழு விபரங்களையும் நீங்கள் அறிய வேண்டுமெனில் அந்த விலங்கினத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகம் உங்களுக்குத் தேவைப்படும். அல்லது அந்த விலங்கினத்தைப் பற்றி முன்னரே அறிந்திருக்கும் யாராவது ஒருவர் உங்களுக்கு விபரங்கள் அறிவிக்க வேண்டும். ஆனால் சிந்தித்து செயலாற்றும் திறன் இல்லாத இந்த விலங்கினங்கள் மற்றொரு உயிரினத்தைப் பார்த்ததும், அவைகளைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்கிறதே. இது எப்படி சாத்தியம்? அவைகள் தங்கள் எதிரிகளின் பழக்கவழக்கங்கள், அவைகள் வேட்டையாடும் முறை பற்றி முன்னரே தெரிந்து கொண்டு, அவைகளிடமிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முறைகளை தங்களுக்குள்ளே வளர்த்துக் கொள்கின்றனவா? நிச்சயமாக இல்லை.
animal-defenses-
எறும்பு தின்னி
மனிதனைத் தவிர எந்த விலங்கினமும் சிந்தித்து செயல்படக்கூடிய திறன் படைத்தவை அல்ல. அத்தோடு, விலங்கினங்களுக்கு தங்கள் எதிரிகளைப் பற்றிய விபரங்கள் ‘எதேச்சையாக’ கிடைத்திருக்கும் என்று கூறுவது நடைமுறைக்கு ஒவ்வாததும், அறிவுக்கு எட்டாதததுமாகும். ஏனென்றால் விலங்கினங்கள் தங்கள் எதிரிகளைப் பற்றி ஆய்வு செய்ய எடுக்கும் முதல் முயற்சியே அதன் மரணமாகும்.
bee
தேனி
நிச்சயமாக விலங்கினங்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகளையும், அதன்படி அமையும் அவைகளின் செயல்பாடுகளையும் முடிவு செய்பவன் வல்ல அல்லாஹ் ஒருவனே. நாம் அன்றாடம் நம் வாழ்வில் காணும் விலங்கினங்கள் மட்டுமின்றி, உலகில் வாழுகின்ற ஒவ்வொரு உயிரினமும் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மதிநுட்பத்தைக் கொண்டுதான் தங்களை பாதுகாத்துக் கொள்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

Source:  harunyahya.com/

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா ?

man from monkey 

பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.
கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்று கிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!
எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.
குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.
அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.
உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனித னுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர்.
குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.
பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது. அநேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மனிதன் குரங்கிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.
இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை’ என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.
டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?
இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.
வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.
ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர். ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.
டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும்.
இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.
குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.
இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.
முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.
மனிதன் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும். ஆனால் டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.
‘என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு’ எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.
எனவே உலகுக்குக் கேடு விளைவிக்கும் உளறலே டார்வின் தத்துவம்.
இதையெல்லாம் விட உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.
உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் – நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.
ஆடு, மாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்று இருந்ததாம்! அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததாம்! இதனால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டதாம்! டார்வினிஸ்டுகள் உளறுகின்றனர்.
உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்.
இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது.
ஆனால், பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை. எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறிவு என்பது வரவே முடியாது. இந்தச் சாதாரண அறிவு கூட டார்வினுக்கு இருக்கவில்லை.
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது.
யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?
கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?
யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?
கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா? பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?
தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை?
இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.
மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.
மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.