நபி மொழிகளில் நவீனவிஞ்ஞானம்
3334 عَنْ أَنَسٍ يَرْفَعُهُ إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الْأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لَا تُشْرِكَ بِي فَأَبَيْتَ إِلَّا الشِّرْكَ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசானவேதனை தரப்படுபவரிடம், ''பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம்என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்தவேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?'' என்று அல்லாஹ்கேட்பான். அதற்கு அவன், ''ஆம்'' என்று பதிலளிப்பான்: அப்போது அல்லாஹ், ''நீஆதமின் முதுகந் தண்டில் (கருவாகாமல்) இருந்த போது இதை விடஇலேசான ஒன்றை எனக்கு (எதையும் எவரையும்) இணைகற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னைஅனுப்பிய போது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீஒப்புக்கொள்ளவில்லை'' என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (3334)
மேற்கண்ட ஹதீஸ் இணைவைத்தல் எவ்வளவு கடுமையான பாவம் என்பதைஉணர்த்துகிறது. மறுமை நாளில் இப்பூமியில் உள்ள பொருட்கள் அனைத்தையும் ஈடாகக்கொடுத்தாலும் இணைவைப்பவனின் நரக வாழ்க்கை முடிவுறாது. அவ்வளவுகொடுங்குற்றம் இறைவனுக்கு இணைவைக்கின்ற பாவம்.
மேற்கண்ட நபி மொழியில் மற்றுமொரு மாபெரும் அறிவியல் உண்மை புதைந்துகிடக்கிறது. பல நூறு ஆண்டுகள் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டறிந்த ஒருஉண்மையை இறைவனின் உண்மைத் தூதர் முஹம்மது நபியவர்கள் எவ்வித விஞ்ஞானவளர்ச்சியும் இல்லாத காலத்தில் அந்த உண்மையை எடுத்துரைக்கிறார்கள். நிச்சயமாகமுஹம்மது நபியவர்கள் இந்த வார்த்தைகளை அவர்களாக கூறியிருக்க முடியாது.இவை இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட இறைச்செய்திகள்தான் என்பதற்குஇன்றைய விஞ்ஞானம் சான்றாகத் திகழ்கிறது.
அந்த வார்த்தைகள் என்ன? இதோ அந்த சத்திய வார்த்தைகள்
, ''நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்த போது இதை விடஇலேசான ஒன்றை எனக்கு (எதையும் எவரையும்) இணைகற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன்''
மேற்கண்ட நபியவர்களின் வார்த்தைகளில் இவ்வுலகில் பிறந்த மனிதர்கள்அனைவரும் ஆதம் அவர்களின் முதுகந்தண்டிலிருந்து அதாவது ஆதம் நபியவர்களின்இந்திரியத்திலிருந்து பிறந்தவர்கள்தான் என்ற உண்மை வெளிப்படுகிறது.
உலக மக்கள் அனைவரும் ஒரு ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள்தான்என்பதை திருமறைக் குர்ஆனும் உறுதிப்படுத்தியுள்ளது.
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا (4: 1(
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனைஅஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்துஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனைமுன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்தஅல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ்உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4 : 1)
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (49 : 13(
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும்,கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்க ளில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரேஅல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(அல்குர்ஆன் 49 : 13)
ஆதம் நபியவர்களின் முதுகந்தண்டிலிருந்து தோன்றிய வாரிசுகள் மூலமாகத்தான்இவ்வுலகில் அனைத்து மனிதர்களும் உருவாகியுள்ளார்கள் என்பதையும் திருக்குர்ஆன்உறுதிப்படுத்தியுள்ளது.
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آَدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ (7 : 172(
''ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமதுஇறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான்.நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) ''ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். ''இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்துவிட் டோம்'' என்றோ, ''இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்;நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின்செயலுக் காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில்1 நீங்கள்கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தோம்.)
(அல்குர்ஆன் 7 : 172)
ஒரு மனிதரிலிருந்துதான் இவ்வுலகில் அனைத்து மனிதர்கள் தோன்றியுள்ளார்கள்என்பதை நபியவர்கள் தம்முடைய வார்த்தைகளின் மூலம் தெளிவு படுத்துகிறார்கள். இதுஎப்படி என்பதை நவீன விஞ்ஞானம் உறுதிப்படுத்துவதைக் காண்போம்.
உயிரினங்கள் அனைத்தும் செல் எனும் நுண்ணிய பகுதியால்ஆக்கப்பட்டுள்ளதாகும். மரம், செடி, கொடி, தாவரங்கள் அனைத்தும் செல்லின் தொகுப்பே.சுருக்கமாகச் சொல்வதானால் உயிரினத்தின் துவக்கமே செல்தான்.
முக்கியமாக செல் சுவர், அதனை அடுத்து திரவவடிவத்திலான சைட்டோபிளாசம்,அதில் மிதக்கும் மைட்டோ காண்ட்ரியா, அதன் மையத்தில் உட்கருவாகத் திகழும்நியூக்ளியஸ் ஆகிய பகுதிகளை முக்கிய அங்கங்களாகக் கொண்டதுதான் ஒரு செல்.மைட்டோ காண்ட்ரியாவின் பணிகளில் ஒன்று செல் சுவாசிப்பதற்குத் துணைபுரிவதாகும்.
இதயம் போன்று விளங்கும் உட்கருவான நியூக்ளியஸ் ஒரு செல்லின் மிக, மிகமுக்கியப் பகுதியாகும். இந்த உட்கரு இன்றி ஒரு செல் தனது பயணத்தை துவங்கமுடியாது. இந்த நியூக்ளிஸித்திற்குள் சிறிய துணுக்குகளாக புரோட்டீன்கள் உள்ளன.இதனை குரோமோசோம் என்று கூறப்படும்.
ஒவ்வொரு செல்லினுள் 46 குரோமோசோம்கள் உள்ளன. இந்தகுரோமோசோமத்திற்குள்தான் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளைபோன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் என்று ஒன்று உண்டு.அதனைச் சுருக்கமாக டி.என்.ஏ. (DNA) (டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்) என்றுகூறப்படும். இது முதன் முதலில் 1953 ஆம் ஆண்டுதான் பிரிட்டனில் காவண்டிஷ் ஆய்வுக்கூடத்தில் வாட்சன், (WATSON) க்ரிக் (CRICK) ஆகிய இரு உயிரியல் விஞ்ஞானிகளால்கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டி.என்.ஏ. (DNA) ஆய்வில் பல அறிஞர்கள் ஈடுபட்ட போதுவியக்கத்தக்க பலகோடி அரிய செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
வம்ச பரம்பரைச் செய்திகள், பின்வரும் வாரிசுகள் பற்றிய செய்திகள், ஒருமனிதனை வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் செய்திகள் என வேறுபட்ட பலசெய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது ஒரு மனிதனின் செல்லில் உள்ள டி.என்.ஏ. (DNA) வில்தான் வம்சபரம்பரைச் செய்திகள், பின்வரும் வாரிசுகள பற்றிய செய்திகள், ஒரு மனிதனைவேறுபடுத்தி அடையாளப் படுத்தும் செய்திகள் பதிவு செய்யப்பட்டடுள்ளன.
அதாவது முதன் மனிதராகிய ஆதம் அவர்களின் டி.என்.ஏ. (DNA) வில்அவருக்கு பின்னால் வரும் அனைத்து வம்ச பரம்பரைச் செய்திகளும்அடங்கியுள்ளன. அதிலிருந்துதான் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தச் செய்திகள்பரவியுள்ளன. எனவே உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் ஆதம் அவர்களின்முதுகந்தண்டிலிருந்து வெளிப்பட்ட இந்திரியத்தின் அணுவிலிருந்துஉருவானவர்கள்தான் என்ற உண்மை தெளிவாகிறது.
இவ்வாறு வெவ்வேறு செய்திகளைக் குறிப்பிட நியூக்ளிக் அமிலங்கள் கொண்ட பலதொகுப்புகள் இந்த டி.என்.ஏ.வில் உள்ளது. இந்த தொகுப்புகளைத்தான் ஜீன் என்றுகுறிப்பிடுகின்றனர்.
கண், காது, மூக்கு, கை, கால் , உடலமைப்பு உறுப்புகள் எவ்வாறு எந்த இடத்தில்எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பது இந்த ஜீன்தான்.முன்னோர்களின் தோற்றம் வாரிசுகளுக்கு ஏற்படுவதற்குக் காரணமும் இந்த டி.என்.ஏ.வில் உள்ள ஜீன்தான்.
கருவில் வளரும் குழந்தை பிறந்தது முதல் இறக்கும் வரை அதன் இயக்கம்எவ்வாறு இருக்க வேண்டும், அதன் இரத்த அழுத்தம், பார்க்கும் , கேட்கும், விளங்கும்திறன் அனைத்தையும் தீர்மானிப்பது இந்த ஜீன்கள்தான். ஒவ்வொரு வயதிலும்உடலமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதும் இந்த டி.என்.ஏ. ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருக்கும்.
இந்த ஜீன்களின் தீர்மானத்தில் சிறு சறுக்கல் ஏற்பட்டு விட்டால் கூட கண் இருக்கவேண்டிய இடத்தில் காதும், மூக்கு இறுக்க வேண்டிய இடத்தில் வாயும் என மாறிவிடும்மேலும் பல்வேறு பிறவி நோய்கள், பிறவி ஊனங்கள் ஏற்படுவதற்கும், புற்று நோய்தோன்றுவதற்குக் காரணமாகவும் அது அமைகிறது.
இதில் வியப்பு என்ன வெனில் இந்த டி.என்.ஏ. வில் பதிவு செய்யப்பட்டுள்ளசெய்திகளில் மூன்று விழுக்காடுகள்தான் இதுவரை அறியப்பட்டுள்ளன. மீதமுள்ள 97விழுக்காடு செய்திகள் இதுவரை அறியப்படவில்லை என்று விஞ்ஞான உலகம் கையைவிரிக்கிறது. அவ்வளவு செய்திகளை அதனுள் பதிவு செய்து வைத்தவன் யார்?திகைப்பூட்டும் இந்த ஆய்வு இறுதியில் இறைநம்பிக்கையில் போய் முடிகிறது. அறியமுடியாத அந்த 97 விழுக்காடு செய்திகள் அதனைப் பதிந்து வைத்த இறைவனுக்கேவெளிச்சம்.
No comments:
Post a Comment