“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

பிரபஞ்சத்தின் அற்புதங்கள்

படைப்புக் கொள்கை

'வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்'
-குர்ஆன் 40:57

'படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்'
-குர்ஆன் 79:27


வானங்களையும் கோள்களையும் உள்ளடக்கிய இம் மாபெரும் பேரண்டத்தை இறைவன் 'ஆகு' என்ற ஒரு வார்த்தையில் உண்டாக்கினான் என்பதை குர்ஆனின் துணை கொண்டு முன்பு பார்த்தோம். அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் ஆராய்ச்சியின் வழியாக அறிவியல் பூர்வமாகவும் குர்ஆனின் வார்த்தை உண்மையானது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். அதன் பிறகு படைப்புக் கொள்கைக்கு வருவோம்.

இம்மாபெரும் பேரண்டத்தைப் படைத்த எனக்கு மனிதர்களாகிய உங்களை படைப்பது எனக்கு வெகு சுலபமே என்று மனிதர்களைப் பார்த்து இறைவன் குர்ஆனில் கூறுகிறான். பேரண்டத்தைப் படைக்க இறைவனின் ஆற்றல் அவசியம் என்பது போல் மனிதனைப் படைப்பதற்கும் இறைவனின் ஆற்றல் இங்கு அவசியமாகிறது. (ஒரு செல் உயிரி பரிணாமம் அடைந்து குரங்கு வரை வந்து பிறகு மனிதனானது என்ற வாதம் நாத்திகத்தை கொண்டு செல்ல டார்வினால் வைக்கப்பட்டது. ஆனால் இன்றைய கால கட்டம் வரை அறிஞர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. உலக முடிவு நாள் வரையில் அவர்களால் நிரூபிக்கவும் முடியாது.)

'பூமியில் உங்களை அதிகாரத்துடன் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வாழ்க்கைக்குரிய வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தியுள்ளோம். இருப்பினும் நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்'
-குர்ஆன் 7:10

'நீங்கள் எவைகளை எல்லாம் இறைவனுக்கு இணை கற்ப்பித்தீர்களோ அவைகள் சிறந்தவையா? அல்லது பூமியை வசிப்பிடமாக்கி அவற்றிற்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்ட கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.'
-குர்ஆன் 27:61


மேற்கண்ட இரண்டு வசனங்களின் மூலம் இந்த பூமியை மனிதர்களுக்காக பிரத்யேகமாக இறைவன் உண்டாக்கியுள்ளான் என்பதை அறிகிறோம். இந்த பூமியானது தானாகவே மனிதர்களுக்கு எற்றவாறு மாற வில்லை என்பதும் இறைவன் அத்தகைய ஏற்பாட்டை கொண்டு வந்தான் என்பதையும் விளங்குகிறோம். பிரபஞ்சத்தின் வேறு எந்த கோள்களிலும் மனிதன் வாழ முடியாது என்பதையும் இதிலிருந்து விளங்குகிறோம்.


பெரு வெடிப்பிலிருந்து படிப்படியாக உருவாகி வரும் ஒரு நட்சத்திரக் குடும்பத்திலுள்ள ஒரு கோள் நம் போன்ற உயிரினங்கள் வாழும் வாழ்விடமாக மாற்றுதல் என்பது இறைவனின் ஆற்றலுக்கு மிக எளிதானது. இதையே நாம் அறிவியல் பார்வையில் பார்க்க வேண்டுமானால் மிக மிக மிக கடினமான காரியமாகும். 

இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு கோளுமே மனிதன் வாழ தகுதியுடையதாக இல்லை பூமியைத் தவிர. பூமியைப் படைத்த இறைவன் அதை மனிதனுக்காக பிரத்யேகமாக படைத்ததாகவும் கூறுகிறான். இந்த பூமியை மனிதனுக்காக படைக்கவில்லை என்றால் மற்ற உயிரினங்களைப் போலவே எந்த சட்ட திட்டங்களும் இல்லாமல் சாதாரணமாக இருந்திருப்பான். ஆடு மாடுகளைப் போல் எப்படி வேண்டுமானாலும் மனிதனும் இருந்து கொள்ளலாம். நன்மை தீமைகளை பிரித்தறியும் கடமையும் அவனக்கு இருந்திருக்காது. இத்தனை வசதி வாய்ப்புகளை நமக்காக ஏற்படுத்திய இறைவன் அவன் சொல்படி நாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இந்த எதிர்பார்ப்பும் நியாயமான ஒன்றே!

பூமியைப் போன்ற ஒரு கோள் அல்லது துணைக்கோள் உயிரின வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் அது பிரதானமாக கீழ்காணும் ஆறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவியலார் ஷெப்லி அவர்கள் கூறுகின்றார். அது என்னவென்று பார்ப்போம்:

1. அந்தக்கோள் நட்சத்திரங்களிலிருந்து சரியான தூரத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும். 

2. அந்தக் கோள் சரியான வெப்ப நிலையை பெற்றிருக்கும் பொருட்டு அதன் சுற்றுப் பாதை (Orbit) அதற்க்கேற்ற விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

3. அந்தக் கோளுக்கு விஷம் கலவாத ஒரு வளி மண்டலம் (Atmosphere) இருக்க வேண்டும்.

4. அந்தக் கோளிற்கு நஞ்சு கலவாத நீர் ஊற்றுகள் (Sources) இருக்க வேண்டும். 

5. காற்றும் நீரும் உயிரினங்களுக்குத் தகுதி வாய்ந்த இரசாயனக் கலவையாக (Chemical Composition) இருக்க வேண்டும்.

6. அந்தக் கோள் காற்று மண்டலத்தை நிலை நிறுத்தும் அளவிற்குப் பெரிதாகவும் இருக்க வேண்டும்.

ஆதாரம்: OF STARS AND MEN, PAGE 66-67.

மேற்கண்ட சிறப்பம்சங்கள் உயிரின வாழ்க்கைக்குப் பொதுவாக தேவைப்படும் அம்சங்களாகவே ஷேப்லி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது ஆய்வு குறிப்பாக மனித வாழ்க்கையின் தேவைகளை குறித்ததாக இருப்பதால் மேற்கண்ட அம்சங்களோடு மேலும் சில சிறப்பம்சங்களையும் மனிதன் வாழுகின்ற கோள் அல்லது துணைக் கோள் பெற்றிருக்க வேண்டும். அவற்றையும் பார்ப்போம்:

7. அந்தக் கோள் மனிதனின் உணவிற்க்கும் ஏனைய உபயோகங்களுக்கும் ஏற்ற தாவரம் மற்றும் விலங்கினங்களின் உற்பத்தியைப் பெற்றிருக்க வேண்டும். 

8. விவசாயம் செய்வதற்கேற்ற பருவ காலங்களை அக்கோள் பெற்றிருக்க வேண்டும். 

9. இரவு பகல் மாறி வருவதற்க்கேற்ப அக்கோள் சீரான அச்சின் சுழற்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். 

10. மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் ஏற்ற விதத்திலான புவியீர்ப்பு விசையை அக்கோள் பெற்றிருக்க வேண்டும். 

இங்கு நாம் இந்த இடத்தில் நமது அறிவைக் கொண்டு சற்று சிந்திக்க வேண்டும். கோடிக்கணக்கான விண் மீன்கள் கோளகள் குறுங்கோள்களையுடைய இந்த பேரண்டத்தில் பூமியில் இத்தகைய வசதி வாய்ப்புகள் உருவானது எவ்வாறு? தானாகவே அசெம்பிள் பண்ணிக் கொண்டதா? அதை நமது அறிவு ஏற்கிறதா? 

மனிதனின் உடலமைப்பு நீரில் வாழ உகந்ததாக இல்லை. ஆனால் கடலில் வாழும் மீன்களே செல்ல முடியாத ஆழத்துக்கு சில உபகரணங்களின் துணையால் மனிதன் சென்று விடுகின்றான். தனக்கு இறக்கை இல்லாவிட்டாலும் பறவைகளே போக முடியாத தூரத்துக்கு வானத்தின் மேல் பறந்து காட்டுகிறான். காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை ஒரு கூண்டுக்குள் அடைத்து தான் சொல்வதை எல்லாம் கேட்கும்படி பழக்கி விடுகிறான். இந்த ஆற்றல் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கல்வித் திறனால் வந்தது. இல்லை என்றால் விலங்குகளைப் போலவே மரங்களிலும் குகைகளிலும் தனது வாழ்க்கையை இன்றும் கழித்து வந்திருப்பான் மனிதன். சிங்கம் புலி ஆடு மாடு போன்றவை தங்களது அறிவை மெருகேற்றி இன்று தங்களுக்கென்று ஒரு குடிலை அமைத்துக் கொள்வதில்லை. மனிதர்கள் அமைத்துக் கொடுத்தால் அதில் வந்து அமர்ந்து கொள்ளும். இல்லை என்றால் மரத்து நிழல்களிலோ காடுகளிலோ தங்களது இருப்பிடத்தை அமைத்து கொள்ளும்.

இவ்வளவு அறிவையும் ஆளும் திறனையும் மனிதனுக்கு அள்ளித் தந்த இறைவன் அந்த மனிதன் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அடுத்து இன்றைய அறிவியல் உலகம் மனிதனின் தோற்றத்திற்கோ அவனுடைய காலக்சியின் தோற்றத்திற்க்கோ இவ்வளவு பெரிய பேரண்டம் தேவையில்லை என சொல்லி வருகிறது. இப்பேரண்டம் இருப்பதால்தான் மனிதனின் சிந்தனை விரிவடைந்து மேலும் மேலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நாள் தோறும் வெளியிட்டு வருகிறான். மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இப்பேரண்டம் அவசியம் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. பிற்காலத்தில் இன்னும் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படும்போது இப்பேரண்டத்தின் முக்கியத்துவத்தை மனித குலம உணர்ந்து கொள்ளும். அதுவரை நாமும் பொறுப்போம்.

அனைத்தும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!


அனைத்தும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!

'பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே'
-குர்ஆன் 6:38


ஊர்வன, நீந்துவன, பறப்பன, என்று உலகில் உள்ள எந்த உயிரினங்களும் மனிதர்களைப் போன்று சமுதாயமாகவே கூடி வாழ்வதாக இறைவன் கூறுகிறான். அன்பு, பண்பு, பாசம், கோபம் என்ற உணர்வுகள் அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டுள்ளது. உயிரியல் நிபுணர்கள் இதுவரை 1.75 மில்லியன் உயிரினங்களை கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் தனித் தனி குடும்பங்களாக வாழ்ந்து வருவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் இன்னும் கண்டு பிடிக்காத உயிரின வகைகள் 4.5 மில்லியனாகக் கூட இருக்கலாம் என்பது அறிவியலாரின் கணிப்பு. 3.8 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரினங்களின் படிமங்கள் இன்று நமக்கு கிடைத்துள்ளன. இன்று எவ்வாறு நாம் அந்த உயிரினங்களைப் பார்க்கிறோமோ அதே அமைப்பிலேயே 3.8 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களும் தோன்றுகின்றன. எந்த மாற்றமும் தென்படவில்லை. டார்வினின் பரிணாமக் கொள்கை இங்கும் அடிபட்டுப் போகிறது. பரிணாமம் அடைந்த இடைப்பட்ட படிமங்களை இன்று வரை பரிணாவியலார் எங்கும் சமர்ப்பிக்கவும் இல்லை. அவ்வாறு சமர்ப்பித்த ஒன்றிரண்டு படிமங்களும் பொய்யாக புனையப்பட்டது என்று அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சார்லஸ் லினோஸ் என்ற ஸ்வீடன் நாட்டின் தாவரவியல் வல்லுனர் தனது புத்தகமான 'சிஸ்டமா நேச்சுரா' ‘Systema Naturae’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். (1735) அதில் அவர் கூறுவதாவது 'ஒவ்வொரு உயிரினமும் அதன் உடலமைப்புக்கு தக்கவாறு மிக நேர்த்தியாக இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு உயிர் மற்றொரு உயிராக பரிணமிக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறு பரிணமித்தால் அதன் டிஎன்ஏ யிலிருந்து அவ்வுயிரின் உட்புறங்களில் மிக அதிகமான மாற்றங்கள் நிகழ வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை' என்று கூறி அதற்கான ஆதாரங்களை வரிசையாக பட்டியலிடுகிறார். தாவரங்கள் மண்ணிலிருந்து தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொள்ளும் விதத்தில் அதன் உடலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று மிருகங்களும் மனிதர்களும் பறவைகளும் தங்களின் உணவை தேடிக் கொள்ளும் வகையிலேயே உடலமைப்பை இயற்கை கொடுத்துள்ளது என்கிறார். இவர் இயற்கை என்கிறார். அதனை நாம் கடவுள், இறைவன், அல்லாஹ் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம்.

எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு அறையில் பூனை ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றது. மிக அழகாக இருக்கும். வெளி ஆட்கள் யாரும் வந்தால் குட்டிகள் ஓடி ஒளிந்து கொள்ளும். அவ்வப்போது மீன், கறி துண்டுகள் என்று நான் கொடுப்பது உண்டு. தாய் பூனை அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அந்த குழந்தைகளுக்கு ஊட்டும் அழகே தனி. நான் அருகில் சென்றால் தாய் பூனை 'வந்திருப்பது நமது கூட்டாளிதான். பயமில்லை வெளியே வாருங்கள்' என்று சங்கேத மொழியில் தனது குட்டிகளுக்குக் கூறும். அதனை விளங்கிக் கொண்டு அந்த சிறிய குட்டிகள் ஒவ்வொன்றாக தலையை வெளியில் நீட்டும் அழகே அழகு..... அந்த குட்டிகள் பெரிதானவுடன் அதே தாய் பூனை தன்னோடு அண்ட விடாது விரட்டுவதையும் பார்த்திருக்கிறேன். குட்டிகள் பெரிதாகி விட்டன. இனி நமது உதவி அவைகளுக்கு தேவையில்லை என்பதாலேயே தனது குட்டிகளை தாய் பூனை விரட்டுகிறது. இவை எல்லாம் அனைத்து உயிரினங்களும் மனிதர்களைப் போல ஒரு சமுதாயமாகவே வாழ்ந்து வருகின்றன என்பதை நமக்கு அறிவுறுத்துகின்றன. இவற்றை எல்லாம் சிந்திக்கும் போது இறைவனின் படைப்பாற்றலை நினைத்து அதிசயிக்காமல் ஒருவனால் இருக்க முடியாது.

சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை!

பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்'

- குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

- குர்ஆன் 7;10


இந்த இரண்டு குர்ஆன் வசனங்களையும் மெய்ப்பிக்கும் விதமாக இன்று தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை வந்துள்ளது. குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இந்த கட்டுரையும் ஒரு அத்தாட்சியாக உள்ளது. கட்டுரையை அவசியம் படித்துப் பாருங்கள்.

-----------------------------------------

சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை!

குளிர் காலத்தில் காட்டுப் பகுதியில் இரவில் குளிர் காய்வதற்காக சுள்ளிகளைப் போட்டு தீ மூட்டுவர். அதைச் சுற்றிலும் கும்பலாகப் பலர் உட்கார்ந்திருப்பர். மிக அருகில் உட்கார்ந்தால் சூடு அதிகம் தாக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். மிகவும் தள்ளி உட்கார்ந்தால் இதமான வெப்பம் கிடைக்காது. எனவே, இதமான வெப்பம் கிடைக்கின்ற அளவுக்கு உகந்த தூரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். பூமியும் சரி, ‘குளிர் காய்வதற்கு’ ஏற்ப சூரியனிலிருந்து உகந்த தூரத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், புதனும் வெள்ளியும் சூரியனுக்கு அருகில் உள்ளன. செவ்வாய் கிரகம் சற்றே தள்ளி அமைந்துள்ளது.

முதலில் நாம் சூரிய மண்டல அமைப்பு பற்றிக் கவனிப்பது நல்லது. ஒரு காகிதத்தில் ஒரு புள்ளி வையுங்கள். அதுதான் சூரியன். அந்த புள்ளியைச் சுற்றி நெருக்கமாக ஒரு சிறிய வட்டம் போடுங்கள். புதன் கிரகம் அந்த வட்டத்தில் அமைந்தபடியாக சூரியனைச் சுற்றுகிறது. முதல் வட்டத்தைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அதுதான் வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை. அதைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அந்த வட்டத்தில்தான் பூமி அமைந்துள்ளது. நான்காவது வட்டத்தில் செவ்வாய் கிரகம்.

பனிக்கட்டி, பாறை: கோள்கள்

மேலும் வட்டங்களைப் போடலாம். ஐந்து முதல் ஒன்பது வரையிலான வட்டங்களில்தான் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை அமைந்துள்ளன. இந்த ஐந்துமே பனிக்கட்டி உருண்டைகள். இவை எல்லாமே சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருப்பவை. பூமியிலிருந்து பார்த்தால் சூரியன் 25 பைசா அளவில் தெரிவதாக வைத்துக்கொண்டால், வியாழன் கிரகத்திலிருந்து பார்க்கும்போது சூரியன் மிளகு அளவில்தான் தெரியும். வியாழனில் வெயில் சிறிதும் உறைக்காது. எனவேதான் வியாழனும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களும் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.

மாறாக புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவற்றைப் பாறைக் கோள்கள் என்று சொல்வர். அதாவது, இந்த நான்கிலும் தரை உண்டு. மண் உண்டு. மலைகள், பள்ளத்தாக்குகள் ஆகியனவும் உண்டு.

பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு உகந்த மற்ற சூழ்நிலைகளையும் கவனிப்போம். முதலாவதாக பூமியில் போதுமான அடர்த்தி கொண்ட காற்று மண்டலம் உள்ளது. இரண்டாவதாக இந்தக் காற்று மண்டலம்தான் சூரியனிலிருந்து வருகின்ற ஆபத்தான எக்ஸ் கதிர்களைத் தடுத்து உயிரினங்களைக் காப்பாற்றுகிறது. உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய சில வகை புற ஊதாக் கதிர்களையும் காற்று மண்டலம் தடுக்கிறது. விண்வெளியிலிருந்து வருகின்ற கதிர்வீச்சிலிருந்தும் நம்மை இந்தக் காற்று மண்டலம் காக்கிறது.

நீர்சூழ் உலகு!

மூன்றாவதாக பூமியில் உயிரினத்துக்குத் தேவையான தண்ணீர் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் 71 சதவிகிதம் கடல்களால் ஆனது. தண்ணீரானது துருவப் பகுதிகளில் பனிக்கட்டி வடிவில் உள்ளது. காற்றில் ஆவி வடிவில் உள்ளது. பூமியின் நிலப் பகுதிகளில் ஆறுகளாக ஓடுகிறது. பூமி ஒன்றில்தான் நீர் வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் ஆவி வடிவிலும் தண்ணீர் இருக்கிறது.

நான்காவது சாதக அம்சம் பூமியின் பருமன். பூமி தகுந்த பருமன் கொண்டதாக உள்ளதால், அதற்குச் சரியான ஈர்ப்பு சக்தி உள்ளது. அவ்விதம் ஈர்ப்பு சக்தி உள்ளதால்தான் பூமி தனது காற்று மண்டலத்தை இழக்காமல் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டுள்ளது.

ஐந்தாவது அம்சம், பூமியின் சுழற்சி வேகம். பூமி தனது அச்சில் உகந்த வேகத்தில் சுற்றுவதால்தான் பூமியில் பொதுவில் கடும் குளிரோ கடும் வெப்பமோ இல்லை. இல்லத்தரசிகள் நெருப்பில் அல்லது தணலில் அப்பளம் சுடும்போது அப்பளம் தீய்ந்து விடாமல் இருக்க அதைத் தக்கபடி திருப்பிப் போடுவார்கள். பூமியின் சுழற்சி வேகம் அந்த அளவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் சந்திரனில் 14 நாள் பகல். 14 நாள் இரவு.

ஆறாவது அம்சம், பூமியின் காந்தப் புலம். சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் பூமியைத் தாக்காதபடி இந்தக் காந்தப் புலம் தடுக்கிறது. மேலே கூறிய அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து பூமியில் உயிரினம் தோன்றித் தழைக்க உதவியுள்ளன.

வியாழன் உள்ளிட்ட ஐந்து பனிக்கட்டி உருண்டைகளும் உயிரினத்துக்கு உகந்த சூழல்களைக் கொண்டவை அல்ல. மீதியுள்ள புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்களில் உள்ள நிலைமைகளைக் கவனிப்போம்.

சாத்தியமற்ற கிரகங்கள்

புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. எனவே, பகல் வேளையில் அதிகபட்ச வெப்பம் 430 டிகிரி செல்சியஸ். இரவாக உள்ள பகுதியில் குளிர் மைனஸ் 170 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தில் உயிரினம் கிடையாது என்பதில் வியப்பில்லை. தவிர, புதன் கிரகத்தில் அனேகமாகக் காற்று மண்டலம் கிடையாது.

வெள்ளி கிரகத்துக்கு ஜோசிய சாஸ்திரத்தில் சுக்கிரன் என்று பெயர். சுக்கிரன் என்றாலே சுக்கிர தசைதான் நினைவுக்கு வரும். ஆனால், வெள்ளி கிரகத்துக்கு சுக்கிர தசை அடிக்கவில்லை. மாறாக, நிரந்தர ‘சனி தசை’தான். வெள்ளி கிரகத்துக்குக் கடந்த காலத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் அனுப்பிய ஆளில்லா விண்கலங்கள் ‘அமுக்குப் பிசாசு’ அழுத்தியதுபோல நொறுங்கின. வெள்ளி கிரகத்தில் நிலவும் பயங்கரக் காற்றழுத்தமே அதற்குக் காரணம். அது போதாதென வெள்ளியில் எந்த இடமானாலும் வெப்பம் 460 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. வெள்ளி கிரகம் ஒரு அக்கினிக் குண்டம். இது போதாதென வானிலிருந்து அமில மழை பெய்கிறது.

செவ்வாய் தேறுமா?

சூரியனிலிருந்து தள்ளி நான்காவதாக அமைந்த செவ்வாயில் வெயில் தாக்கம் குறைவு. மெல்லிய காற்று மண்டலம் உள்ளது. தண்ணீர் கிடையாது. வடிவில் பூமியை விடச் சிறியது என்பதால், காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்துக்கொள்ள இயலவில்லை. இன்னமும் அது தனது காற்று மண்டலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது. செவ்வாயின் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உண்டு என்றாலும் காற்று மண்டல அடர்த்தி இன்மை காரணமாக செவ்வாயில் பனிக்கட்டிகள் உருகி நீராக மாறாமல் நேரடியாக ஆவியாக மாறுகின்றன. சூரிய மண்டலத்தில் பூமிக்கு வெளியே குறைந்தது நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்பு கொண்ட ஒரே கிரகம் செவ்வாய்தான். ஆனால், இதுவரை தேடியதில் செவ்வாயில் நுண்ணுயிர்கள்கூட இல்லை.

ஆக, சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமியைத் தவிர, வேறு எந்தக் கிரகத்திலும் உயிரினம் கிடையாது.

பூமி பெற்றுள்ள விசேஷ சாதகங்களால் பூமியில் உயிரினம் தோன்றியதாகக் கூறலாம். அப்படியானால் சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற ஒரு கிரகம் பூமி போன்று அதே சாதக நிலைமைகளைப் பெற்றிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியான கிரகத்தில் உயிரினம் இருக்குமா? அப்படியும் சொல்லிவிட முடியாது.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
19-11-2015

விண்கற்களை சாம்பலாக்குவது யார்? குர்ஆனின் அறிவியல்

'அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா? இரு தடவை பர்வையைச் செலுத்துவீராக! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மை பார்வை திரும்ப அடையும்'

அல்குர்ஆன் 67:3,4

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.

அல் குர்ஆன் 21:32


இந்த இரண்டு வசனங்களையும் நாம் சிந்தித்தால் மனிதர்கள் இந்த பூமியில் வாழ இறைவன் எத்தகைய பாதுகாப்பு ஏற்காடுகளை ஏற்படுத்தியுள்ளான் என்பது நமக்கு விளங்கும். நமது பூமியைச் சுற்றியுள்ள பரப்பை வளி மண்டலம் என்று கூறுகிறோம்.

வளிமண்டலம் ஐந்து அடுக்குகளால் சூழப்பட்டுள்ளன. 

1.கீழ் அடுக்கு - புவியின் மேற்பரப்பிலிருந்து 16 கிலோ மீட்டர் உயரம் வரை.

2. படுகை அடுக்கு - 16 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் உயரம் வரை

3. நடு அடுக்கு - 50 கிலோ மீட்டரிலிருந்து 80 கிலோ மீட்டர் வரை.

4. வெப்ப அடுக்கு - 80 கிலோ மீட்டரிலிருந்து 1600 கிலோ மீட்டர் வரை.

5 - வெளி அடுக்கு: 1600 கிலோ மீட்டர் முதல் 10000 கிலோ மீட்டர் வரை

இந்த ஐந்து அடுக்குகளே நம்மை பல ஆபத்துகளிலிருந்து தடுத்துக் கொண்டிருக்கின்றன. சூரிய ஒளியாகட்டும், பெரும் கற்களாகட்டும் இவை எல்லாம் நமது பூமியை ஒரு நொடியில் நிர்மூலமாக்கி விடும் சக்தி பெற்றவை.

'வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்.'

-அல்குர்ஆன் 67:17


வானத்திலிருந்து மழை பொழிவதைப் பார்த்திருப்போம். ஆனால் கற்களே மழையாக பொழிய வாய்ப்புள்ளதா? செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே ஆயிரக்கணக்கான விண் கற்கள் சுழன்று வருகின்றன. இவற்றில் சில புவியின் ஈர்ப்பு சக்தியால் கவரப்பட்டு மணிக்கு 43200 கிமீ முதல் 57600 கிமீ வரையிலான அசுர வேகத்துடன் பூமியை நோக்கிப் பாய்ந்து வருகின்றன. இவை நேராக பூமியை அடையுமானால் இந்தப் பூமி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விடும். இந்த பூமியில் வசித்து வரும் நாமெல்லாம் சிதறுண்டு போவோம். ஏனெனில் மேலிருந்து வரக் கூடிய கற்களில் சில 96000 சதுர மீட்டருக்கும் அதிகமான குறுக்களவு கொண்டவை. இந்த பிரம்மாண்டமான கற்கள் பூமியை நேராக அடைந்து விடாமல் ஆகாய அடுக்குகள் நம்மை ஆபத்திலிருந்து பாதுகாக்கின்றன. மேலிருந்து வரும் கற்களை வெப்பமடைய வைக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கி நமது பூமியின் மீது விழ வைக்கின்றன. பூமியின் மீது இவ்வாறு விழும் சாம்பலின் எடை கூட நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த கற்களை நம் மீது வீழ்ந்து விடாமல் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். 

எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி

இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் (கி.மு. 1032 – கி.மு. 975) ஓர் பேரரசர். ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர்.  பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர். சுலைமான் (அலை) அவர்களின் படையில் மனிதர்கள் மட்டுமன்றி ஜின்கள், பறவைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. அதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றின் மொழிகளும் அன்னாருக்குத் தெரியும். காற்று அவர்களுக்குப் பணிவிடை செய்தது. தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்; நேர்மையாளர்.
ஒருமுறை அவர்களின் பிரமாண்டமான படைகளின் அணிவகுப்பு நடந்தது. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் புடைசூழ பவணி வந்தார்கள். வழியில் ஒரு பள்ளத்தாக்கைக் கடக்க வேண்டியிருந்தது. அதில் எறும்புகள் கூட்டமாக வாழ்ந்த ஓடை ஒன்றும் இருந்தது.
அப்போது ஓர் எறும்பு பேசியதை நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்டு முறுவலித்தார்கள். இதைத் திருக்குர்ஆன் இப்படிச் சொல்லும்.
அவர்கள் எறும்புகளின் ஓடைக்கருகே (வாதிந் நம்ல்) வந்தபோது ஓர் எறும்பு, “எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் (மஸாகின்) நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவருடைய படையினரும் உங்களை மிதித்துவிட வேண்டாம்” என்று கூறியது. அது கூறியதைக் கேட்டு சுலைமான் புன்னகைத்துச் சிரித்தார். (27:18,19)
இங்கு ‘எறும்பு ஓடை’ என்பதைக் குறிக்க ‘வாதிந் நம்ல்’ எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது.
  • நம்லத்-எறும்பு;
  • நம்ல்-எறும்புகள்.
  • ‘வாதீ’ என்பதற்கு பள்ளத்தாக்கு (Conyon), கணவாய் (Ravine), மலை இடுக்கு (Gully), இடுக்கு வழி (Gorge), ஓடை (Rivulet)
ஆகிய பொருள்கள் உள்ளன.
இந்தச் சொல்லாக்கத்தைப் பார்த்து கீழை அறிஞர்கள் சிலர் நகைத்ததுண்டு. ஏனெனில், புற்றுகளில் எறும்பு இருக்கும்; மண் தரையில் வழியமைத்து சிறிய அளவில் வீடுகளை அமைத்து வாழும். எறும்புகளுக்குப் பெரிய அளவில் ஓடையோ சுரங்கமோ எங்கே உள்ளது என்று அவர்கள் குர்ஆன்மீது வினா தொடுத்தார்கள்; அதன் நேர்மையில் கல் எறிந்தார்கள்.
இதைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ நம்மில் சிலரும் ‘வாதிந் நம்ல்’ என்பதற்கு ‘எறும்புப் புற்று’ என்றே பொருள் செய்துவருகிறோம். உண்மையில் புற்றைக் குறிக்க இவ்வசனத்தில் வேறொரு சொல் (மஸாகின் – குடியிருப்புகள்) ஆளப்பெற்றிருப்பது கவனத்திற்குரியது.
ஆக, எறும்புக்கு ஓடையோ சுரங்கமோ இல்லை என்றே உலகம் கருதிவந்த நிலையில் அண்மையில் அப்படி ஒன்று உண்டு என்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதுதான் வியப்பு.

பிரேசிலில் அகழ்வாராய்ச்சி
பிரேசில் நாட்டில் அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பூமிக்கடியில் எறும்புகளின் ஒரு 1நகரமே கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எறும்புகளுக்கான சாலைகள், தோட்டங்கள் என எல்லாம் உள்ளன. சீனாவின் பெருஞ்சுவரைப் போல மிகப்பெரும் அற்புதமாக இது காட்சியளிக்கிறது. பல மில்லியன் எறும்புகள் சேர்ந்து இச்சாதனையைப் புரிந்துள்ளன.  Refer MailOnline
இந்த எறும்பு நகரத்தில், பொதுச்சாலைகள், கிளை நடைபாதைகள், பூங்காக்கள் உள்பட ஒரு நகரத்திற்கு வேண்டிய எல்லா கட்டமைப்புகளும் உள்ளன. இதுதான் உலகிலேயே எறும்புகளின் பெரும்கூட்டம் வசிக்கும் இடமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
3காற்று வாங்குவதற்காகக் கால்வாய் போன்று எறும்புகள் தயாரித்துள்ள இடைவெளிகளில் 10 டன் வெள்ளை சிமிண்டை முதலில் நிபுணர்கள் கொட்டினார்கள். இதனால் அக்கால்வாய்கள் வலுவாகவும் உறுதியாகவும் மாறக்கூடும். பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே 8 மீட்டர் ஆழத்தில் 46.5 ச.மீட்டர் பரப்பை நிரப்புவதற்காக சிமிண்ட் கொட்டும் பணிக்கே 10 நாட்கள் பிடித்தது.

ஒரு மாதத்திற்குப்பின், பேராசிரியர் லூயிஸ் ஃபோர்ஜி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு பூமியை அகழும் பணியைத் தொடங்கியது. அப்போதுதான் எறும்புகளின் இந்தப் பிரமாண்டமான நகரத்தைக் கண்டுபிடித்து, சீனப் பெருஞ்சுவர் போன்ற உலக அற்புதம் இது என்று வர்ணித்தனர்.

எறும்பின் ஆற்றல்
2கட்டமைப்புகளை உருவாக்குவதில் வியத்தகு ஆற்றல் பெற்றது எறும்புக் கூட்டம். ஒவ்வோர் எறும்புக்கும், தன் எடையைப்போல் 50 மடங்கு எடையைச் சுமக்கும் ஆற்றல் உண்டு. அதைத் தூக்கிக்கொண்டு பல பத்து கி.மீ. தூரம் நடக்கவும் அதற்கு முடியும். இதைத் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்பச் செய்யும் திறன் படைத்தது.
இந்த அடிப்படையில்தான், இந்தச் சுரங்கத்தைக் கட்ட சுமார் 40 டன் மண்ணை ஒரு பெரிய எறும்புக் கூட்டம் தோண்டி எடுத்துள்ளது. இதன்மூலம் எறும்புகள் புதிய காற்றைச் சுவாசிக்கவும் சுருக்க வழியில் பயணிக்கவும் வழி பிறந்தது.

5இந்த எறும்பு நகரத்தில், அறைகளை இணைக்கும் முதன்மைச் சாலைகள் உண்டு. புற்றுகளுக்குச் செல்லும் குறுக்குச் சாலைகளும் உண்டு. அங்கு சிறு தானியங்களையும் சேமித்த உணவுகளையும் எறும்புகள் பாதுகாக்கின்றன. அவ்வாறே, எறும்புகள் கொண்டுவந்து சேர்த்த பச்சைப் புற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் உண்டு. இவை எறும்புகளின் முட்டைப் புழுக்களை (Larva) காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இப்போது சொல்லுங்கள்! அந்த வசனத்தில் எறும்பு ஓடை, அல்லது பள்ளத்தாக்கு (வாதிந் நம்ல்) என்று அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு பொருத்தம்! எவ்வளவு பெரிய ஆராய்ச்சி! எத்துணை பெரும் உண்மை! சுப்ஹானல்லாஹு!

Science in Quran - in Tamil (வானத்து பாதைகள்)


குர்ஆனில் அற்புதம் (Pulses Star)


அல் குர்ஆனின் விஞ்ஞான அற்புதம்


Science in Quran - in Tamil 02 (பல்சுவை கனிகள்)


கருவில் குழந்தையின் வளர்ச்சி


பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?


வானத்தை பாதுகாப்பான முகடாக்கினோம்!


தேன் உருவாகுவது எப்படி?


ஆழ்கடலின் இருட்டு


இரும்பை நாமே இறக்கி வைத்தோம்


குரான் கூறும் பிர்அவ்னின் சம்பவம்


நிலத்தடி நீர் எப்படி வருகிறது?


குரான் ஓர் அற்புதம்


குரான் கூறும் விண்வெளிப்பயணம்


பூமிக்குள் செல்ல முடியுமா?


ஓடிக்கொண்டிருக்கும் சூரியன்


எறும்புகள் பேசுகின்றன (அதிசயம்)


கடல் பிளந்த உண்மை சம்பவத்தின் அதிர்ச்சி தரும் தடயங்கள் கண்டுபிடிப்பு

மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும், மூஸா (அலை) அவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் இரண்டாக பிளந்து வழிவிட்ட கடல் பிரவ்னின் கூட்டத்தை முழ்கடித்ததும் நாம் அறிந்ததே!! இது குரானின் அத்தாட்சியாகும்.
செங்கடல் என்பது பல நூறு மைல்கள் நீளமானதும் எண்ணைதாங்கி கப்பல்கள் பயணம் செய்யும் அளவு ஆழமான கடல். எகிப்து முதல் எதியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும், சவூதி அரேபியா, ஏமன் போன்றவற்றின் மேற்கு எல்லையாகவும் செங்கடல் இருக்கிறது. இதில் மூன்று குடாக்கள் காணப்படுகின்றன. சுயஸ் குடா (Gulf of Sues) ,அகபா குடா (Gulf of Aqaba) மற்றும் ஏடன் குடா (Gulf of Adan).


இவ்வளவு நீளமான செங்கடலின் எந்த இடத்தில் கடல் பிளவுபட்டு மூஸா(அலை) அவர்களின் கூட்டத்திற்கு வழிவிடப்பட்டது என்ற கேள்வி பலஆண்டுகளாக அகல்வாராய்ச்சியாலர்கள் மத்தியில் இருந்ததுவந்தது. ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ச்சி செய்து வந்தபோது, அகபா குடாவின் ஒரு இடத்தில் இருகரைகளும் தொடர்ச்சியான கற்குன்றுகளாக இருந்தபோதும் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் இருகரைகளிலும் அசாதாரணமான மண்மேடுகள் காணப்படுவதை ரான் வையாத் என்ற ஆய்வாளர் அவதானித்தார். ஒரு கரை சவுதியின் பக்கமும் மற்றைய கரை எகிப்தின் பக்கமும் இருந்தது. இதில் எகிப்தின் பக்கம் இருக்கும் கடற்கரை நுவைபா (Nuweiba Beach) என்று அழைக்கபட்டது. இந்த இரண்டு இடங்களையும் மையமாக வைத்து அதை சுற்றியுள்ள கடலிலும் கரையிலும் ஆராய்ச்சி செய்தபோது அதிசயிக்கத்தக்க பல தடயங்களை கண்டுபிடிக்கப்பட்டது.

கடலின் அடியில் மூழ்கடிக்கப்பட்ட பிரவ்னின் கூட்டத்தின் வண்டிகளின் சக்கரங்கள், ஆயுத தளபாடங்கள் மற்றும் எலும்பு கூடுகள் இருந்த அதேவேளை அந்த குறிப்பிட்ட இடம் மட்டும் ஆழம் குறைந்த நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் அவற்றை காணலாம். இவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்திலான சில சக்கரங்கள் சவூதி நூதனசாலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


அதேநேரம் கடலில் ஆராய்ச்சியை முடித்து விட்டு பார்த்தால், எகிப்தின் நுவைபா கடற்கரையிலும், அதற்கு நேரான சவுதியின் கரையிலும் கிரனைடிலான உயர்ந்த இரு தூண்கள் காணப்பட்டன.பல வருட தேடலின் பின்னர் தற்போதுதான் கடல் பிளந்த இடத்தை நாம் கண்டுபிடித்து இருக்கும் போது, இந்த இடத்தில் இதற்கு முன்னர் இந்த தூண்களை உருவாக்கியது யார், எதற்கு என்ற ஆச்சரியமான கேள்விகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மூளையை குடைந்ததது . பின்னர் அந்த அதிசய தூணை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, அதில் இருந்த பழைய அரமைக் மற்றும் ஹிப்ரு எழுத்துக்களை கொண்டு அது பெரும்பாலும் சுலைமான் (அலை) அவர்களால் கடல் பிளந்த அதிசய இடத்தை அடையாளம் காணும் வகையில் உருவாக்கியிருக்கலாம் என்று அறியப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா தனது பக்கம் இருந்த தூணை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கொடிகம்பம் ஒன்றை நாட்டி இருக்கிறது. எனினும் எகிப்தின் நுவைபா கடற்கரையில் இருக்கும் தூண் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது .

மேலதிக ஆராய்ச்சிகளின் பயனாக இந்த பகுதிக்கு மிக அண்மையில் இருக்கும் ஜபல் எல் லவுஸ் என்ற (தூர்சீனா) மலையடிவாரம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு மூஸா (அலை) அவர்களால் கல் பிளக்கப்பட்டு தண்ணீர் வந்த கல்லும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மலையடிவாரம் ஒருசில காரணங்களுக்காக தற்போது சவூதி அரசினால் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.( இணைக்கப்பட்ட படங்களில் அவற்றை காணலாம்)