“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

விண்கற்களை சாம்பலாக்குவது யார்? குர்ஆனின் அறிவியல்

'அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா? இரு தடவை பர்வையைச் செலுத்துவீராக! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மை பார்வை திரும்ப அடையும்'

அல்குர்ஆன் 67:3,4

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.

அல் குர்ஆன் 21:32


இந்த இரண்டு வசனங்களையும் நாம் சிந்தித்தால் மனிதர்கள் இந்த பூமியில் வாழ இறைவன் எத்தகைய பாதுகாப்பு ஏற்காடுகளை ஏற்படுத்தியுள்ளான் என்பது நமக்கு விளங்கும். நமது பூமியைச் சுற்றியுள்ள பரப்பை வளி மண்டலம் என்று கூறுகிறோம்.

வளிமண்டலம் ஐந்து அடுக்குகளால் சூழப்பட்டுள்ளன. 

1.கீழ் அடுக்கு - புவியின் மேற்பரப்பிலிருந்து 16 கிலோ மீட்டர் உயரம் வரை.

2. படுகை அடுக்கு - 16 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் உயரம் வரை

3. நடு அடுக்கு - 50 கிலோ மீட்டரிலிருந்து 80 கிலோ மீட்டர் வரை.

4. வெப்ப அடுக்கு - 80 கிலோ மீட்டரிலிருந்து 1600 கிலோ மீட்டர் வரை.

5 - வெளி அடுக்கு: 1600 கிலோ மீட்டர் முதல் 10000 கிலோ மீட்டர் வரை

இந்த ஐந்து அடுக்குகளே நம்மை பல ஆபத்துகளிலிருந்து தடுத்துக் கொண்டிருக்கின்றன. சூரிய ஒளியாகட்டும், பெரும் கற்களாகட்டும் இவை எல்லாம் நமது பூமியை ஒரு நொடியில் நிர்மூலமாக்கி விடும் சக்தி பெற்றவை.

'வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்.'

-அல்குர்ஆன் 67:17


வானத்திலிருந்து மழை பொழிவதைப் பார்த்திருப்போம். ஆனால் கற்களே மழையாக பொழிய வாய்ப்புள்ளதா? செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே ஆயிரக்கணக்கான விண் கற்கள் சுழன்று வருகின்றன. இவற்றில் சில புவியின் ஈர்ப்பு சக்தியால் கவரப்பட்டு மணிக்கு 43200 கிமீ முதல் 57600 கிமீ வரையிலான அசுர வேகத்துடன் பூமியை நோக்கிப் பாய்ந்து வருகின்றன. இவை நேராக பூமியை அடையுமானால் இந்தப் பூமி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விடும். இந்த பூமியில் வசித்து வரும் நாமெல்லாம் சிதறுண்டு போவோம். ஏனெனில் மேலிருந்து வரக் கூடிய கற்களில் சில 96000 சதுர மீட்டருக்கும் அதிகமான குறுக்களவு கொண்டவை. இந்த பிரம்மாண்டமான கற்கள் பூமியை நேராக அடைந்து விடாமல் ஆகாய அடுக்குகள் நம்மை ஆபத்திலிருந்து பாதுகாக்கின்றன. மேலிருந்து வரும் கற்களை வெப்பமடைய வைக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கி நமது பூமியின் மீது விழ வைக்கின்றன. பூமியின் மீது இவ்வாறு விழும் சாம்பலின் எடை கூட நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த கற்களை நம் மீது வீழ்ந்து விடாமல் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். 

No comments:

Post a Comment