“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

கடல் பிளந்த உண்மை சம்பவத்தின் அதிர்ச்சி தரும் தடயங்கள் கண்டுபிடிப்பு

மூஸா (அலை) அவர்களும் அவரின் கூட்டத்தினரும் பிரவ்னின் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு செங்கடல் வழியாக வெளியேறியதும், மூஸா (அலை) அவர்களின் கூட்டத்திற்கு மாத்திரம் இரண்டாக பிளந்து வழிவிட்ட கடல் பிரவ்னின் கூட்டத்தை முழ்கடித்ததும் நாம் அறிந்ததே!! இது குரானின் அத்தாட்சியாகும்.
செங்கடல் என்பது பல நூறு மைல்கள் நீளமானதும் எண்ணைதாங்கி கப்பல்கள் பயணம் செய்யும் அளவு ஆழமான கடல். எகிப்து முதல் எதியோப்பியா வரையான நாடுகளின் கிழக்கு எல்லையாகயும், சவூதி அரேபியா, ஏமன் போன்றவற்றின் மேற்கு எல்லையாகவும் செங்கடல் இருக்கிறது. இதில் மூன்று குடாக்கள் காணப்படுகின்றன. சுயஸ் குடா (Gulf of Sues) ,அகபா குடா (Gulf of Aqaba) மற்றும் ஏடன் குடா (Gulf of Adan).


இவ்வளவு நீளமான செங்கடலின் எந்த இடத்தில் கடல் பிளவுபட்டு மூஸா(அலை) அவர்களின் கூட்டத்திற்கு வழிவிடப்பட்டது என்ற கேள்வி பலஆண்டுகளாக அகல்வாராய்ச்சியாலர்கள் மத்தியில் இருந்ததுவந்தது. ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ச்சி செய்து வந்தபோது, அகபா குடாவின் ஒரு இடத்தில் இருகரைகளும் தொடர்ச்சியான கற்குன்றுகளாக இருந்தபோதும் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் இருகரைகளிலும் அசாதாரணமான மண்மேடுகள் காணப்படுவதை ரான் வையாத் என்ற ஆய்வாளர் அவதானித்தார். ஒரு கரை சவுதியின் பக்கமும் மற்றைய கரை எகிப்தின் பக்கமும் இருந்தது. இதில் எகிப்தின் பக்கம் இருக்கும் கடற்கரை நுவைபா (Nuweiba Beach) என்று அழைக்கபட்டது. இந்த இரண்டு இடங்களையும் மையமாக வைத்து அதை சுற்றியுள்ள கடலிலும் கரையிலும் ஆராய்ச்சி செய்தபோது அதிசயிக்கத்தக்க பல தடயங்களை கண்டுபிடிக்கப்பட்டது.

கடலின் அடியில் மூழ்கடிக்கப்பட்ட பிரவ்னின் கூட்டத்தின் வண்டிகளின் சக்கரங்கள், ஆயுத தளபாடங்கள் மற்றும் எலும்பு கூடுகள் இருந்த அதேவேளை அந்த குறிப்பிட்ட இடம் மட்டும் ஆழம் குறைந்த நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் அவற்றை காணலாம். இவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்திலான சில சக்கரங்கள் சவூதி நூதனசாலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


அதேநேரம் கடலில் ஆராய்ச்சியை முடித்து விட்டு பார்த்தால், எகிப்தின் நுவைபா கடற்கரையிலும், அதற்கு நேரான சவுதியின் கரையிலும் கிரனைடிலான உயர்ந்த இரு தூண்கள் காணப்பட்டன.பல வருட தேடலின் பின்னர் தற்போதுதான் கடல் பிளந்த இடத்தை நாம் கண்டுபிடித்து இருக்கும் போது, இந்த இடத்தில் இதற்கு முன்னர் இந்த தூண்களை உருவாக்கியது யார், எதற்கு என்ற ஆச்சரியமான கேள்விகள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மூளையை குடைந்ததது . பின்னர் அந்த அதிசய தூணை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, அதில் இருந்த பழைய அரமைக் மற்றும் ஹிப்ரு எழுத்துக்களை கொண்டு அது பெரும்பாலும் சுலைமான் (அலை) அவர்களால் கடல் பிளந்த அதிசய இடத்தை அடையாளம் காணும் வகையில் உருவாக்கியிருக்கலாம் என்று அறியப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா தனது பக்கம் இருந்த தூணை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கொடிகம்பம் ஒன்றை நாட்டி இருக்கிறது. எனினும் எகிப்தின் நுவைபா கடற்கரையில் இருக்கும் தூண் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது .

மேலதிக ஆராய்ச்சிகளின் பயனாக இந்த பகுதிக்கு மிக அண்மையில் இருக்கும் ஜபல் எல் லவுஸ் என்ற (தூர்சீனா) மலையடிவாரம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு மூஸா (அலை) அவர்களால் கல் பிளக்கப்பட்டு தண்ணீர் வந்த கல்லும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மலையடிவாரம் ஒருசில காரணங்களுக்காக தற்போது சவூதி அரசினால் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.( இணைக்கப்பட்ட படங்களில் அவற்றை காணலாம்)
























No comments:

Post a Comment